PDA

View Full Version : இட்லி மாவு மீந்துவிட்டால்-Samayal Kurippu



vsrajagopalan
11-11-2011, 06:25 AM
Umakku pidikkum enbadarkaga ore message 3 murai podanuma?
VSR

vsrajagopalan
11-11-2011, 06:25 AM
Umakku pidikkum enbadarkaga ore message 3 murai podanuma?
VSR

bmbcAdmin
11-11-2011, 08:35 AM
எனக்குப் பிடித்ததெல்லாம் போட்டால் எவரும் சீண்டமாட்டார்கள் என்று தெரியும்.
அதனால் தங்களைப்போன்ற உறுப்பினர்களுக்குப் பிடித்ததையெல்லாம் அங்கும் இங்கும் திரிந்து
தேடிப்பிடித்து இங்கு கொண்டுவந்து போடுகிறேன்! இதுதான் உண்மை.
குறிப்பு:- அது ஏதோ சாப்ட்வேர் கோளாறு, அல்லது சர்வர் கோளாறால் அவ்வாறு சிலசமயம் ஆகிவிடுகிறது. இப்படி உள்ளதை அழிக்கப்போய்தான் திருமண் இடுவது எப்படி என்ற கட்டுரை அழிந்துபோய் படாத பாடு.
அது கிடக்கட்டும், தங்கள் பதிலே இருமுறை பதிவாகியுள்ளதே!

bmbcAdmin
11-11-2011, 10:48 AM
1.இட்லி மாவு மீந்துவிட்டால்

தோசை மாவு மீந்துவிட்டால் அதனுடன் கடலை மாவு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, தயிர் சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ளவும்.

அதனை இட்லிகளாக ஊற்றி வேகவைத்து எடுத்து சின்ன சின்ன வடிவத்தில் வெட்டி வைக்கலாம்.

கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் போட்டு தாளித்து, வெட்டிய இட்லியைக் கொட்டி பிரட்டவும்.

இதில் பிடித்தவர்கள் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயையும் சேர்த்துக் கொள்ளலாம்.

அப்படி இல்லாமல் இனிப்பு சுவை பிடித்தவர்கள் சர்க்கரை நீரை இவற்றின் மீது தெளித்து விடலாம்.

இது குழந்தைகளுக்குப் பிடித்தமாக இருக்கும்.

இட்லி மாவு மீந்துவிட்டால் அன்று மாலை இந்த உணவை செய்து அசத்தலாம் எளிதாக.

krishnaamma
23-09-2013, 05:21 PM
super recipe Maamaa :) :clap2::clap2::clap2: