PDA

View Full Version : திருவரங்கக் கலம்பகம் 38



sridharv1946
07-05-2013, 09:41 AM
இப்பாடலின் சிறப்பு ? (தயவு செய்து எழுதுங்களேன் !)

அரங்க மாளிகைக் கருங்கடல் வண்ணனை ,
ஆலி மாமுகிலை வாலி காலனை ,
இந்தளூர் உறை எந்தை பெம்மானை ,
ஈசன் நான்முகன் வாசவன் தலைவனை ,
உள்ளுவார் உள்ளத்துள் உறை சோதியை ,
ஊரகம் நின்றருள் நீரகத்து அடிகளை ,
எவ்வுள் மாயனை தெய்வ நாயகனை ,
ஏர் மலி சிகரத்து நீர்மலை ஆதியை ,
ஐவாய் அரவில் அறிதுயில் அமலனை ,
ஒருகால் மொழியிலும் ஒழிகுவை நெஞ்சே !
ஓத நீர் ஞாலத்து உழலும்
ஔவியப் பிறப்பில் அழுந்தி வாடுவதே

soundararajan50
07-05-2013, 06:46 PM
உயிரெழுத்துக்களைத் தொகுத்துக் கொடுத்துள்ள அருமையான பாடல் நீரகத்து நீர்மலை இவற்றை வண்ணப்படுத்தியிருப்பதன் காரணம் என்னவோ? தாங்கள் ஆரம்ப எழுத்துக்களை வண்ணப்படுத்தியதால் சுலபமாக புரிந்துகொள்ள ஏதுவாக இருந்தது நன்றி

sridharv1946
07-05-2013, 08:50 PM
வண்ணம் மாறி உள்ளவைகள் திவ்ய தேசங்கள் !