Announcement

Collapse
No announcement yet.

திருவரங்கத்தந்தாதி 10 ஏற்றனை என்றால் யார

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருவரங்கத்தந்தாதி 10 ஏற்றனை என்றால் யார

    திருவரங்கத்தந்தாதி 10 ஏற்றனை என்றால் என்ன பொருள் ?

    வந்தனையேற்றனையென்புன்சொற்கொண்டனைவன்மனத்தே
    வந்தனையேற்றனையாவையுமாயினை வான்றரவு
    வந்தனையேற்றனைத்தானொத்ததாளில்வைப்பாய்பலித்து
    வந்தனையேற்றனைத்தீர்த்தாயரங்கத்துமாதவனே


    பதவுரை :


    ஏற்றனை காளை வாகனமுடைய சிவனது
    பலித்துவந்தனை இரத்தல் தொழிலை
    தீர்த்தாய் நீக்கி அருளியவனே !
    அரங்கத்து திரு அரங்கத்தில் எழுந்தருளி இருக்கும்
    மாதவனே திருமகள் கணவனே !
    என் வந்தனை எனது வணக்கத்தை
    ஏற்றனை ஏற்றுக்கொண்டாய்
    என் புல் சொல் கொண்டனை எனது இழிந்த சொற்களை ஏற்றாய்
    என் மனத்தே வந்து
    ஏற்று எனது மனத்தில் வந்து சேர்ந்து
    அனை யாவையும் ஆயினை தாய் முதலிய எல்லாமும் ஆனாய்
    வான் தர எனக்கு வைகுண்டம் அளிக்க விரும்பினால்
    தனை தான் ஒத்த தாளில் உன்னுடைய ஒப்பற்ற திருவடிகளில்
    வைப்பாய் சேர்த்துக் கொள்வாய் !




    Last edited by sridharv1946; 30-05-13, 12:57.
Working...
X