Announcement

Collapse
No announcement yet.

வேதமும் தமிழ்நாடும் – பாகம் 1

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • வேதமும் தமிழ்நாடும் – பாகம் 1

    வேதம் -வேதமும் தமிழ்நாடும் – பாகம் 1

    வேதமிருந்தால்தான் லோகம் நன்றாக இருக்கும், ஆத்மாவும் க்ஷேமமடையும் என்பது என் அபிப்ராயம். இந்தப் பெரிய மூலதனம் இப்போது வீணாகப் போயிருக்கிற நிலை மாறி, இதை மறுபடி தழைக்கும்படியாகப் பண்ணவேண்டுமென்பதே எனக்கு ஸதா விசாரமாக இருக்கிறது. அதற்காகத்தான் என்னாலானதை ஏதோ திட்டம் கிட்டம் போட்டு வேத ரக்ஷணம், ஸ்டைபண்ட் என்று பல இடங்களில் ஏற்பாடு செய்திருக்கிறது. ஆனால் இது இந்த மடம், அல்லது சில ஸ்தாபனங்களின் கடமை மட்டுமல்ல; இது நம் எல்லோர் கடமையுமாகும்; உங்கள் எல்லோருடைய ட்யூட்டியும் ஆகும். நிர்ப்பந்தத்துக்காக இல்லாமல், ஆசையோடு ஆர்வத்தோடு நீங்கள் எல்லோரும் சேர்ந்து இது வேத பூமி என்பதை மறுபடி நிஜமாக்கப் பிரயாஸைப் படவேண்டும். தமிழ்நாட்டுக்கு இதை நான் முக்கியமாகச் சொல்கிறேன்.

    வேத விருக்ஷம் நன்றாக விழுது விட்டு வளர்ந்த மண் இந்தத் தமிழ் பூமி, "வேதம் நிறைந்த தமிழ்நாடு" என்று (பாரதி) பாடியிருப்பது கவியின் அதிசயோக்தி இல்லை. அப்படித்தான் தமிழ்தேசம் இருந்திருக்கிறது. சங்க காலத்திலிருந்து, எங்கே பார்த்தாலும் வேத வேள்விகளை வானளாவப் புகழ்ந்து சொல்லியிருக்கிறது. சங்கம் வளர்த்த பாண்டிய ராஜாக்கள் வைதிகமான யக்ஞாதிகளை நிறையச் செய்து, "பல் யாகசாலை முது குடுமிப் பெருவழுதி"என்ற மாதிரியான பட்டங்களைத் தங்களுக்குப் பெருமையோடு சூட்டிக் கொண்டிக்கிறார்கள்.

    அவர்களுடைய ராஜதானியான மதுரையைப் பற்றி இரண்டு பெருமை. ஒன்று, 'மாடு கட்டிப் போர் அடித்தால் மாளாது என்று யானை கட்டிப் போர் அடித்தது.'இது தான்ய ஸுபிக்ஷத்தைச் சொல்வது. இன்னொன்று ஆத்ம ஸுபிக்ஷத்தையும், லோக ஸுபிக்ஷத்தோடு சேர்த்துச் சொல்வது. அதாவது, பல ஊர்க்காரர்கள் தங்கள் தங்கள் ஊர்ப் பெருமையைச் சொல்லும்போது மதுரைவாசிகள், "எங்கள் ஊரில் வேத சப்தத்தோடேயாக்கும் பொழுது விடிகிறது. சேரர்களின் தலைநகரான வஞ்சியில் இருப்பவர்களும், சோழர்களின் தலைநகரான கோழி என்ற உறையூரில் இருப்பவர்களும், தினுமும் கோழி கூவுவதைக் கேட்டு விழித்துக் கொள்கிறார்கள்.

    அதைவிடப் பெருமைப்படத்தக்க விதத்தில் விழித்துக் கொள்பவர்கள் பாண்டிய ராஜதானியான மதுரையில் வசிக்கிற நாங்களே. வேத அத்யயனத்தை, மறையலியைக் கேட்டுக் கொண்டு தான் நாங்கள் விழித்துக் கொள்கிறோம்"என்று பெருமைப் பட்டுக் கொள்கிறார்கள்!இது சங்க இலக்கியத்திலேயே இருக்கிற விஷயம்.

    திருக்குறளில் பல இடங்களில் வேதநெறி சிறப்பித்துப் பேசப்படுகிறது. வேதத்திலுள்ள பஞ்ச மஹாயக்ஞங்களைத்தான் திருவள்ளுவர் சொல்கிறார்.

    தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
    ஐம்புலத்தார் ஒம்பல் தலை.

    ராஜநீதி தவறினால் கோ-ப்ராம்மணர்களுக்கு க்ஷீணம் உண்டாகும் என்பது ஒரு முக்யமான வைதிகக் கொள்கை. கோ (பசு) வையும், பிராம்மணர்களையும் தனியாகக் குறிப்பிட்டுச் சொல்வதற்குக் காரணம், கோ தருகிற நெய், பால், சாணம் முதலியனதான் யக்ஞ திரவியங்களில் முக்யமானவை;யாகத்தைப் பண்ணுகிற அதிகாரம் பெற்றவர்களோ பிராம்மணர்கள்- என்பதுதான். இதே மாதிரி கோ-பிராம்மணர்களைத் திருவள்ளுவர் குறிப்பிட்டு, அரசின் நீதித் தண்டம் தவறினால், இந்த இருவராலும் கிடைக்கிற லோக உபகாரம் வீணாகிவிடும் என்கிறார்.

    ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
    காவலன் காவான் எனின்.

    'ஷட் கர்ம நிரதர்'என்று பிராம்மணர்களுக்கு உள்ள வைதிகமான பெயரை, அப்படியே மொழிபெயத்து "அறு தொழிலோர்"என்கிறார். அத்யயனம்-அத்யாபனம் (தான் வேதம் ஒதுவது-பிறருக்கும் ஒதுவிப்பது) ; யஜனம்-யாஜனம் (தான் வேள்வி செய்வது-பிறருக்கு வேள்வி செய்விப்பது) :தானம் - ப்ரதிக்ரஹம் (வேள்வியில் தானே தக்ஷிணை தருவது;இம்மாதிரி செலவழிப்பதற்கு வேண்டிய மூலதனத்துக்காகவே பிறத்தியாருக்கு சி¬க்ஷ சொல்லி முடித்தபின் அவர்களிடமிருந்து தக்ஷிணை வாங்கிக் கொள்வது) என்ற ஆறும் தான் பிராம்மணனுக்கு உரிய ஷட்கர்மாக்கள். இது மநுஸ்மிருதியில் சொன்னது. தர்ம சாஸ்திரங்களில் இன்னொன்றான பராசர ஸ்மிருதியில் வேறு தினுசாக ஆறு கர்மாக்களை பிராம்மணனின் நித்யப்படியாக (daily routine -ஆக) சொல்லியிருக்கிறது.

    ஸந்த்யா-ஸ்நானம் ஜபோ ஹோமம் தேவதானாம் ச பூஜனம்|
    ஆதித்யம் வைச்வதேவம் ச ஷட்கர்மாணி தினே தினே|

    ஒன்று ஸந்தியாவந்தனம்;அதை ஸ்நானத்தோடு செய்ய வேண்டும். ப்ராம்மணன் பச்சைத் தண்ணீரில் முழுகப் பயப்படவே கூடாது. எப்போது பார்த்தாலும், தினமும் இரண்டு மூன்று வேளையும் ஸ்நானம் செய்யவேண்டும். ப்ராத ஸ்நானம் (விடியற்காலை) , மாத்யான்னிக ஸ்நானம் (பகல்) ஸாயங்கால ஸ்நானம் என்று பண்ண வேண்டும். இப்படி மூன்று வேளையும் ஸ்நானம் பண்ணியே அந்தந்த வேளைக்கான ஸந்தியா வந்தனம், அப்புறம் ஸ்நானம் என்று சொன்னதால், ஸந்தியா வந்தனம் பண்ணிவிட்டுப் பிறகு ஸ்நானம் செய்யவேண்டும் என்று குயுக்தி பண்ணக் கூடாது...

    Contd…2…
    source: subadra

Working...
X