Announcement

Collapse
No announcement yet.

மறுபிறவி, சொர்க்கம், நரகம் பற்றி ஸ்ரீபாரத

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • மறுபிறவி, சொர்க்கம், நரகம் பற்றி ஸ்ரீபாரத



    நரக லோகம், சொர்க்க லோகம் சென்ற ஆன்மாக் கள் அங்கிருக்க வேண்டிய காலகட்டம் முடிந்ததும் மழை வடிவில் மீண்டும் பூமிக்கு இறங்கி வருகின்றன. அந்த மழையினால் ஆறுகளில் நீர் பெருகுகிறது. அந்த நீரைப் பலர் குடிக்கிறார்கள். அந்த ஆற்று நீரைப் பயன்படுத்தி நெல், கோதுமை மற்றும் இதர பயிர் வகைகள், காய்கறிகள் முதலியவற்றை விளை விக்கிறார்கள். இந்த விளைபொருட்களை மனிதர்கள் உட்கொள்ளுகிறார்கள். விலங்குகளும் பறவைகளும் இன்ன பிற உயிரினங்களும் உட்கொள்கின்றன. அவற்றில் உள்ள சக்தி ஆணிடத்தில் விந்தணுக்களாக மாறுகிறது. பெண்ணுடன் உறவு கொள்ளும்போது கரு ஏற்பட தகுந்த சூழ்நிலை இருந்தால் கரு உருவாகி றது. குழந்தை பிறக்கிறது. இந்த நிகழ்ச்சி எல்லா உயிர்களிடமும் நடைபெறுகிறது.''


    சுவாமிகளிடம் சில கேள்விகளை முன் வைத்தோம்.

    ஒரு ஆன்மாவுக்கு ஒரு உடம்புதான் என்றால், உலகில் மக்கள் தொகை ஒரே மாதிரியாக இல்லாமல் ஒவ்வொரு வருடமும் பெருகி வருவதன் காரணம் என்ன?

    ""எல்லா ஆன்மாக்களும் மனிதப் பிறவி களாகவே பிறப்பதில்லை. ஈ, பல்லி, நாய், பூனை போன்றும் பிறக்கிறார்கள். ஒவ்வொன்றுக்கும் வாழும் காலம் வித்தியாசமானது. மீண்டும் மரணம்; மீண்டும் ஜனனம். அதனால்தான் ஜனத் தொகை பெருகிப் பெருகி வருகிறது.''

    பிராயசித்தம் அல்லது பரிகாரத்தினால் ஒருவரது ஆயுளை அதிகரிக்கச் செய்ய முடியுமா?

    "முடியும். பதினாறு வயதில் இறக்க வேண்டிய மார்க்கண்டேயன், தான் செய்த தவத்தின் வலிமையால் சிரஞ்சீவி வரம் பெற்றான்.

    விதவையாக இருக்க வேண்டிய சாவித்திரி தனது தவத்தால் சத்தியவானைக் காப்பாற்றி னாள்.

    ஆனால் இன்றைய காலகட்டத்தில் எவ்வளவு பிராயச்சித்தம் செய்ய வேண்டும் என்பது தெரியாது. என்ன செய்ய வேண்டும் என்று சொல்லித் தருபவர்களும் மிகவும் குறைவு.

    பரிகாரம் செய்யும்போது, அதைச் செய்பவ ரும் முழு நம்பிக்கையோடு, பக்திச் சிரத்தையோடு செய்ய வேண்டும். அதைச் செய்து வைக்கும் வைதீகரும் மிகுந்த பக்தியோடு- சிரத்தையோடு மந்திரங்களை உச்சரிக்க வேண்டிய முறையில் மட்டும் உச்சரித்து ஹோமம், பூஜைகளைச் செய்ய வேண்டும். அந்த சமயத்தில் தெய்வ சிந்தனை மட்டும்தான் இருக்க வேண்டும்.

    இப்படி மிகுந்த ஈடுபாட்டுடன் செய்பவரும், செய்து கொடுப்பவரும் மிகவும் அரிதாகி வருவ தால், பரிகாரங்களின் முழுப் பலனையும் பலரால் உணர முடியவில்லை.

    பல பாவங்களுக்கும் சிறந்த பரிகாரம் அன்னதானம். முதியோர்களை மகிழ்ச்சியடையச் செய்வதும், அவர்களது ஆசியும் மன மகிழ்ச்சி யுடன் நீண்டு வாழ வழி செய்யும்.

    நல்லதே நினைத்து, நல்லதே செய்து வாழ்ந்து வந்தால் இவ்வுல வாழ்க்கை இனிக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்வதை ஒரு கடமையாக மேற்கொள்ளுங்கள்.''

    பெண்கள் காயத்ரி மந்திரம் கூறலாமா? விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்யலாமா?

    ""விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்யலாம். ஆனால் காயத்ரி மந்திரம் கூறக் கூடாது என்பது காலங்காலமாக கடைப் பிடிக்கப்பட்டு வரும் நியதி.''

    இன்றைய சமுதாயத்தில் ஆன்மிகச் சிந்தனை வளர்ந்து வருகிறதா? குறைந்து வருகிறதா

    ஆன்மிகச் சிந்தனை இதற்குமுன் இருந்த காலகட்டங்களைவிட அதிக அளவில் வளர்ந்து தான் வருகிறது. ஒவ்வொரு குடும்பத்திலும், பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு வழிகாட்டி களாக இருந்தால், அந்தக் குடும்பம் செழிக்கும். பல குடும்பங்கள் சேர்ந்ததுதான் ஊர். ஊர் செழித்தால் நாடு செழிக்கும். ஆகவே நாடு செழிக்க, ஒவ்வொரு வீட்டிலும் ஆன்மிகச் சிந்தனை என்னும் விதையை விதைத்து, நீர் ஊற்றி வளர்த்து வர வேண்டும். நீங்கள் உங்கள் வீட்டில் செய்யத் தொடங்குங்கள்!''


    Source:kamalanathan
Working...
X