PDA

View Full Version : உளுத்தங்கஞ்சி



krishnaamma
17-06-2013, 02:14 PM
மஹாளபக்ஷம் - பலகாரம் -உளுத்தங்கஞ்சி

தேவையானவை :

குண்டு உளுத்தம் பருப்பு - 1/4 கிலோ
கருப்பட்டி(பனை வெல்லம்) - 1/2 கிலோ
ஏலக்காய் - 10
முற்றிய தேங்காய் - 1
சுக்கு - 1/2 அங்குல நீளம்.

செய்முறை :

உளுத்தம்பருப்பை வாசனை வரும் வரை லேசாக வறுக்கவும்.
ஆறிய பின் 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
தேங்காயை துருவி முதல் பால் 1/4 லிட்டர் அளவும், இரண்டாம் பால் 1/4 லிட்டர் அளவும் எடுக்கவும்.
உளுத்தம்பருப்பை கிரைண்டரில் போட்டு கெட்டியாக அரைக்கவும்.
கருப்பட்டியை நசுக்கி 1/2 லிட்டர் வெந்நீரில் கரைத்துக்கொள்ளவும்.
சுக்கையும்,ஏலக்காயையும் பொடியாக்கி மாவுடன் சேர்க்கவும்.
கிரைண்டரை அலம்பி அந்த தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கிளறவும்.
(மொத்தம் ஒரு அரை லிட்டர் இருக்கலாம் )
கருப்பட்டியை கரைத்த நீரை வடிகட்டி மாவுடன் சேர்த்து கொதிக்க விடவும்.
நன்கு கொதித்து திக்காக வரும் போது ஒரு சிட்டிகை உப்பும், இரண்டாம் தேங்காய்ப்பாலும் சேர்க்கவும்.
கைவிடாமல் கிளறவும்.
ஒரு 5 நிமிடம் கழித்து முதல் தேங்காய்ப்பாலை ஊற்றி ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
சுவையான உளுத்தங்கஞ்சி தயார் http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif

குறிப்பு : அடுப்பில் இருக்கும் பொது அடிக்கடி கிளறி விட வேண்டும். இல்லையேல் அடி பிடித்துவிடும். பெண்களுக்கு இடுப்புக்கும், ஆண்களுக்கு நெஞ்சுக்கும் மிகவும் நல்லது. கர்ப்பிணிப்பெண்களுக்கு அடிக்கடி செய்து கொடுத்தால் பிரசவம் சுலபமாக இருக்கும். சேலம் மாவட்ட சிறப்பு உணவு.

bmbcAdmin
17-06-2013, 06:51 PM
ஶ்ரீ:
சாதித்துவிட்டீர்கள் - ஒவ்வொன்றையும் தனித் தனியாகப் போட்டு சாதித்துவிட்டீர்கள்.
மிக்க நன்றி.
தற்போது, இந்த த்ரட்டின் கடைசியில் பாருங்கள் நான்கு பட்டைகள் இருக்கும் கீழ்க்கண்டவாறு:

1.Thread Information

2. Members Who have visited this thread

3.Tags for this thread - இந்தப் பட்டையின் இறுதியில் Add / Edit Tags என்று ஒரு பட்டனும் இருக்கும்.
அடியேன் தற்போது இந்த த்ரட்டிற்கு 3 டேக்குகள் போட்டிருக்கிறேன் பார்க்கவும். இந்த டேக்கிங்தான்
முக்கியம், இதை வைத்துத்தான் தேடுபொறிகள் நம் தகவலை பதிவுசெய்துகொண்டு பின்பு தேடி எடுத்துக்கொடுக்கும்.

4. Book Marks - இது கொஞ்சம் அட்வான்ஸ் ஒர்க் இதற்கு அந்தந்த இணைய தளத்தில் முன்பே உறுப்பினராக இருப்பவர்கள்தர்ன் செய்ய முடியும்.

நன்றி! நன்றி! நன்றி!
என்.வி.எஸ்

krishnaamma
18-06-2013, 09:46 AM
நன்றி மாமா :) உங்க உதவியுடன்தான் செய்தேன் மாமா, நீங்கள் சொன்னது போல 'tags ' சில thread களில் போட்டேன், சிலது விட்டுபோச்சு போல இருக்கு, இதோ பார்த்து சரி செய்து விடுகிறேன் :)