PDA

View Full Version : A Tamil Puzzle



dhivya
26-06-2013, 04:08 PM
This is my favourite riddle from childhood, asked by my paatti.

சென்னிமலை வேலவர்க்கு சேர்ந்த ரெண்டு கொம்புண்டு
கன்னி குற வள்ளிக்குக் காலில்லை
கலை மானுக்கும் மாட்டுக்கும் ஆட்டுக்கும் கொம்பில்லை
இப்பாட்டிற்குள் ஆராய்ந்து பார்

This statement doesn't make sense when looking at it superficially. Try to sense the hidden explanation of this riddle. Pls post if you can realize the answer.

sridharv1946
26-06-2013, 08:34 PM
'செ','வே' இரண்டு எழுத்துகளிலும் கொம்பு உண்டு 'வள்ளி' யில் நெடில் (கால்) இல்லை
'கலை மானுக்கும் மாட்டுக்கும் ஆட்டுக்கும்' இந்த எழுத்துகளில் கொம்புகள் இல்லை


சரி தானே !

பூனக்கி ஆறு கால் ! சரியா ?

dhivya
27-06-2013, 02:57 PM
Dear Sir,

மிகவும் சரி. "கன்னி குற வள்ளி" மொத்தத்திலுமே "கால்" இல்லை.

பூனைக்கு ஆறு கால் இருக்கறது பத்தி தெரியலையே :) would be glad if you can explain.

Thanks,
Dhivya

sridharv1946
27-06-2013, 03:44 PM
பூ வில் இருக்கும் தேனை நக்கி சாப்பிடும் வண்டுக்கு ஆறு கால் தானே !