Announcement

Collapse
No announcement yet.

திருவரங்கத்தந்தாதி 63 மால் நிற்பதும் வளர்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருவரங்கத்தந்தாதி 63 மால் நிற்பதும் வளர்

    திருவரங்கத்தந்தாதி 63 மால் நிற்பதும் வளர்வதும் இருப்பதும் ஆடுவதும் இங்கே !

    வடமலைதென்மலைகச்சிகுறுங்குடிமானிற்பது
    வடமலைவேலையரங்கங்குடந்தைவளருமிடம்
    வடமலைகொங்கைத்திருவோடிருப்புவைகுந்தங்கர
    வடமலையன்பருளநடையாட்டமறையந்தமே

    பதவுரை : வட + மலை
    வடம் + அலை

    மால் திருமால்
    நிற்பது நின்ற கோலத்தில் இருப்பது :
    வடமலை திருவேங்கடம் (வட நாடு ) ,
    தென்மலை திருமாலிருஞ்சோலை ( பாண்டிய நாடு ) ,
    கச்சி காஞ்சி புரம் (தொண்டை நாடு ),
    குறுங்குடி திருக்குறுங்குடி ( பாண்டிய நாடு ) ;
    வளருமிடம் பள்ளி கொண்ட கோலத்தில் இருப்பது :
    வடம் ஆலிலை ,
    அலை வேலை அலைகளுடைய பாற்கடல் ,
    அரங்கம் ஸ்ரீரங்கம் (சோழ நாடு ) ,
    குடந்தை கும்பகோணம் (சோழ நாடு );
    வடம் அலை கொங்கை மாலைகள் அசையும் தனங்கள் கொண்ட
    திருவோடு இருப்பு லக்ஷ்மியுடன் அமர்ந்திருப்பது :
    வைகுந்தம் பரமபதம் ஆகும் ;
    நடை நடந்து சென்று இருக்குமிடம் :
    கரவடம் மலை கபடம் இல்லாத
    அன்பர் உள்ளம் பக்தர்கள்டைய மனம் ஆகும் ;
    ஆட்டம் மகிழ்ச்சியாக நடனம் ஆடும் இடம் :
    மறை அந்தம் வேதாந்தமாகிய உபநிஷத்துக்கள் ஆகும் :
    Last edited by sridharv1946; 09-07-13, 11:37.
Working...
X