Announcement

Collapse
No announcement yet.

திருவரங்கத்தந்தாதி 64 அரங்கா ! அந்தகர் உன்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருவரங்கத்தந்தாதி 64 அரங்கா ! அந்தகர் உன்

    திருவரங்கத்தந்தாதி 64 அரங்கா ! அந்தகர் உன்னை அழையாது இருப்பர் !

    அந்தகராசலம்வந்தாலுனையழையாதிருப்பார்
    அந்தகராசலங்காபுரியார்க்கரங்காமறையின்
    அந்தகராசலக்கூக்குரலோயுமுன்னாழ்தடங்கல்-
    அந்தகராசலத்தேதுஞ்சநேமியறுக்கக்கண்டே

    பதவுரை : அந்தகர் +ஆ + சலம்
    அந்தக + ராச + லங்கா
    அந்த + கர + அசலம்
    கலந்த + கரா + சலத்தே

    ராச லங்கா புரியார்க்கு இலங்கைப் பட்டணத்தின் வாழ்ந்த அரக்கர்களுக்கு
    அந்தகா யமன் ஆனவனே !
    அரங்கா ரங்க நாதனே !
    மறையின் அந்த வேதத்தின் முடிவு ஆனவனே !
    கர அசலம் கஜேந்திரன் எனும் யானையின்
    கூக்குரல் ஓயுமுன் கூவிய குரல் அடங்குவதற்கு முன்பே
    ஆழ் தடம் கலந்த கரா ஆழமான தடாகத்தில் இருந்த முதலை
    சலத்தே துஞ்ச அந்த நீரிலேயே இறக்குமாறு
    நேமி அறுக்க நீ பிரயோகித்த சக்கரம் அதனை வெட்டுவதைப்
    கண்டு பார்த்த பிறகும்
    அந்தகர் ஞானக்குருடர்கள்
    சலம் வந்தால் கஷ்டம் நேரும்போது
    உனை அழையாதிருப்பர் உன்னைக் கூப்பிடாமல் இருப்பார்கள் !
    அந்தோ !





    Last edited by sridharv1946; 09-07-13, 12:51.
Working...
X