Announcement

Collapse
No announcement yet.

ஆஸ்ரமம்-மடம் வித்தியாசம் என்ன?

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஆஸ்ரமம்-மடம் வித்தியாசம் என்ன?

    ஆஸ்ரமம்-மடம்

    பல ஆன்மீக ஸ்தாபனங்கள் நமது தேசத்தில் உள்ளன. அவைகளில் பல
    மடங்கள் என்ற பெயரை தாங்கி உள்ளன.ஏதோ ஒன்றிரண்டு தான் ஆஸ்ரமம் என்ற பெயர் உடையவை.ஏன் இந்த வித்தியாசம்.ஆஸ்ரமத்திர்க்கும் மடத்திற்கும் உள்ள வித்யாசம் என்ன

  • #2
    Re: ஆஸ்ரமம்-மடம் வித்தியாசம் என்ன?

    ஆஸ்ரமம்-மடம் வித்தியாசம் என்ன?


    அடியேன் இன்று சுமார் மாலை
    4.45 மணி அளவில் மேற்படி தலைப்பில் ஒரு கேள்வி எழுப்பி இருந்தேன். ஆனால் என்ன ஆச்சர்யம் ,அடியேனுக்கு வரவேண்டிய ஸ்ரீ ரங்கநாத பாதுகா மாதப்பத்திரிக்கை கிடைத்து அதை படித்ததில் "நாம் ஆர்க்கும் குறைவல்லோம் குறையும் சொல்லோம் " என்ற ஒரு நல்ல கட்டுரை /வியாசம் மூலமாக ஸ்ரீ உ.வே.நாட்டேரி கிடாம்பி ராஜகோபாலாச்சாரியார் (ஆசிரியர் ) மிக உன்னதமான முறையில் எல்லோரும் புரிந்துகொள்ளும்படி எழுதி உள்ளார்.அந்த கட்டுரையில் சகலத்தையும் அலசி ஆராய்ந்து விளக்கிஉள்ளார் .ஆகையால் மேற்கொண்டு யாரும் இதைப்பற்றி விவரம் தெரிவிக்கவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.சிரமத்திற்கு மன்னிக்கவும்

    மேலும் அந்த வியாசத்தை பூரணமாக படிக்கவேண்டும் என்றால் "ஸ்ரீ ரங்கநாத பாதுகா july 2013" இதழை பெற்று படித்து பலனடையவும் .

    Comment


    • #3
      Re: ஆஸ்ரமம்-மடம் வித்தியாசம் என்ன?

      இது நியாயமா சார் ஒரு கேள்வியை எழுப்பிவிட்டு , ஒரு நல்லகேள்விக்கான விடைக்காக காத்திருக்கும்போது பொசுக்கென்று கேள்வியைத்திரும்பப்பெற்றால் எப்படி விரிவாக இல்லையெனினும் சுருக்கமாகவேனும் பதில் பெற விரும்புகிறேன் ப் ளீ ஸ்

      Comment


      • #4
        Re: ஆஸ்ரமம்-மடம் வித்தியாசம் என்ன?

        ஶ்ரீ:
        ஶ்ரீ ரங்கநாத பாதுகா - விஜய வரு - ஆடி மாதம் - ஜூலை - 2013 - பக்கம் - 62.

        ஆச்ரமத்திற்கு ஏன் இப்பெயர் என்றால், ஶ்ரீ பெரிய ஆண்டவன், ஶ்ரீமத் ஶ்ரீநிவாஸ மஹாதேசிகன்,
        ஒரு தபஸ்விபோல, கொள்ளிடக்கரைக் காட்டில் ஒரு கொட்டிலில் குடில் அமைத்து சிஷ்யர்களை அநுக்ரஹித்து வந்தார். மஹர்ஷிகளைப்போல விளங்கிய ஶ்ரீ பெரியாண்டவனின் இருப்பிடத்திற்கு
        மஹர்ஷிகளின் இருப்பிடமான "ஆச்ரமம்" என்ற பெயர் திருநாமத்தைச் சாற்றினர்.

        பக்கம் - 64:
        சுருங்கச் சொன்னால் பெயர் வித்யாஸத்தால் பிரிவினை இல்லை. நடப்பதெல்லாம் - எல்லாம் (?!)* சமம்தான்.
        *எல்லாம் என்று மீண்டும் ஒரு முறை அச்சாகி உள்ளது (தெய்வாதீனமாக)!
        என்.வி.எஸ்


        Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
        please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
        Encourage your friends to become member of this forum.
        Best Wishes and Best Regards,
        Dr.NVS

        Comment


        • #5
          Re: ஆஸ்ரமம்-மடம் வித்தியாசம் என்ன?

          ஸத்யம் தெய்வாதீனம் தான் “எல்லாம்” அவன் திருவிளையடல் தான்

          Comment


          • #6
            Re: ஆஸ்ரமம்-மடம் வித்தியாசம் என்ன?

            Re: ஆஸ்ரமம்-மடம் வித்தியாசம் என்ன?


            அடியேனும் ஸ்ரீமத் ஆஸ்ரமத்தை சேர்ந
            தவந்தான்.எக்கும் அந்த புத்தகம் வந்து படித்த பிறகு எனது சந்தேகம் தீர்ந்து விட்டதால் மேலும் அதை பற்றி விவரங்கள் தேவைஇல்லை என்பதால் பதில் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.இப்போது ஸ்ரீ NVS ஸ்வாமின் அவர்களும் அதையே ப்ரதிபலித்துள்ளார்கள். இதில் எனது தவறு என்ன? இப்போது திரு சௌந்தரராஜன் அவர்களும் தெரிந்துகொண்டு விட்டார்கள் .சத்யம் எல்லாம் அவன் திருவிளையாடல்தான்.சந்தேகமே இல்லை,

            Comment


            • #7
              Re: ஆஸ்ரமம்-மடம் வித்தியாசம் என்ன?

              எனது மதிப்புக்குரிய ஸ்ரீ N V S அவர்களுக்கு,
              நமஸ்காரம்.
              எனக்கும் பல நாட்களாக இவ்விரு ஸ்தாபனங்குள் முக்கியமான வேறுபாடுகள் என்ன
              என்பதை அறிய ஆவலாக உள்ளது . இது பற்றி தாங்கள் சற்று விவரமாக கூறினால்
              சந்தேக விளக்கம் பொதுவாக எல்லோரும் அறிய உதவியாக இருக்கும்.
              தங்கள் நலம் கோரும்
              ப்ரஹ்மண்யன்
              பெங்களூரு

              Comment


              • #8
                Re: ஆஸ்ரமம்-மடம் வித்தியாசம் என்ன?

                ஶ்ரீ:
                மதிப்பிற்குரிய திருமிகு.ப்ரஹ்மண்யன் சார்,
                ஶ்ரீ ச்ருங்கேரி சாரதா பீடத்திற்கும், ஶ்ரீகாஞ்சி சங்கரமடத்துக்கும் உள்ள வித்யாஸம்தான்.
                இது வேறு ஆசார்ய பரம்பரை, அது வேறு ஆசார்ய பரம்பரை அவ்வளவுதான்.

                கட்சிகளுக்குள் லாவணி செய்வதுபோல இதுவும் ஒருவித லாவணிதான்.
                17 பக்கங்களில் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியிலிருந்து சாராம்சமாக அடியேன் அறிந்துகொண்டது
                கீழ்க்கண்டவைதான்.

                ஶ்ரீ ரங்கநாத பாதுகா - விஜய வரு - ஆடி மாதம் - ஜூலை - 2013 - பக்கம் - 62.

                ஆச்ரமத்திற்கு ஏன் இப்பெயர் என்றால், ஶ்ரீ பெரிய ஆண்டவன், ஶ்ரீமத் ஶ்ரீநிவாஸ மஹாதேசிகன்,
                ஒரு தபஸ்விபோல, கொள்ளிடக்கரைக் காட்டில் ஒரு கொட்டிலில் குடில் அமைத்து சிஷ்யர்களை அநுக்ரஹித்து வந்தார். மஹர்ஷிகளைப்போல விளங்கிய ஶ்ரீ பெரியாண்டவனின் இருப்பிடத்திற்கு
                மஹர்ஷிகளின் இருப்பிடமான "ஆச்ரமம்" என்ற பெயர் திருநாமத்தைச் சாற்றினர்.

                பக்கம் - 64:
                சுருங்கச் சொன்னால் பெயர் வித்யாஸத்தால் பிரிவினை இல்லை. நடப்பதெல்லாம் - எல்லாம் (?!)* சமம்தான்.

                எதற்கும் இருக்கட்டும் என்று ஶ்ரீரங்கநாத பாதுகையின் சில பக்கங்களை கீழே கொடுத்துள்ளேன்.

                தங்களின் தொடர்ந்த பதிவுகள் அடியேனுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும்.
                தாங்கள் சென்னையில் இருந்தால் அவசியம் நமது இணைய தள 2ம் ஆண்டு நிறைவுவிழா (15-07-2013)வில் கலந்துகொள்ளவேணுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
                நன்றியுடன்,
                என்.வி.எஸ்


































                Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
                please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
                Encourage your friends to become member of this forum.
                Best Wishes and Best Regards,
                Dr.NVS

                Comment


                • #9
                  Re: ஆஸ்ரமம்-மடம் வித்தியாசம் என்ன?

                  ஸ்வாமின் தங்கள் பதில்கள் விளக்கமாகவும் ஆணித்தரமாகவும் ஆதாரத்துடனும் அசரவைக்கிறது உமது தொண்டு பன்னெடுங்காலம் தொடர நீள் ஆயுள் நிறை செல்வம் அளித்துக்காக்க இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்

                  Comment

                  Working...
                  X