Announcement

Collapse
No announcement yet.

திருவரங்கத்தந்தாதி 97/100 அரங்கனை அறியாமல் ஐ&#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருவரங்கத்தந்தாதி 97/100 அரங்கனை அறியாமல் ஐ&#

    திருவரங்கத்தந்தாதி 97/100 அரங்கனை அறியாமல் ஐம்புலன் அடக்கினாலும் பயன் இல்லை !

    அன்றேயடையவுனக்கேயடிமையென்றாய்ந்துணர்ந்தார்
    அன்றேயடையப்படுவாருனையரங்காவனத்திய்-
    அன்றேயடையையயில்வோருமீதறியாரறிஞர்
    அன்றேயடையைம்புலனாலுநன்கில்லையாங்கவர்க்கே

    பதவுரை : அன்றே + அடை (முன்னாளில் எல்லா )
    அன்றே + அடையப்படுவார் (அல்லவா அடையத்தக்கவர் )
    யன்றே + அடையை
    அன்றே + அடை + ஐம்புலன் (இல்லையே அடக்கிய)

    அரங்கா "ரங்கநாதனே !
    அன்றே ஆதி காலத்திலேயே
    அடைய எல்லா உயிர்களும்
    உனக்கே அடிமை என்று உனக்கே அடிமைப் பட்டவவை " என்று
    ஆய்ந்து உணர்ந்தார் ஆராய்ந்து அறிந்தவர்கள்
    உனை அடையப்படுவார் அன்றோ உன்னை சேர்வதற்கு உரியவர்கள் அல்லவா ?
    வனத்து இயன்றே காட்டில் வசித்துக்கொண்டே
    அடையை அயில்வோரும் இலைகளைப் புசிக்கும் முனிவர்களும்
    ஈது அறியார் இதை உணரவில்லை என்றால்
    அறிஞர் அன்றே அறிவுடையவர்கள் இல்லை !
    அவர்க்கு அவர்களுக்கு
    ஆங்கு அடை அங்கு அவர்களால் அடக்கப்பட்ட
    ஐம்புலனாலும் ஐந்து புலன்களாலும்
    நன்கு இல்லை எந்த பயனும் கிடையாது


    --
Working...
X