PDA

View Full Version : திருவரங்கத்தந்தாதி - அரங்கன் அடிகளில் அர



sridharv1946
21-07-2013, 05:27 PM
திருவரங்கத்தந்தாதி - அரங்கன் அடிகளில் அர்ப்பணம் !


பணவாளரங்கேசர்தாளிற்பரிதிவளை
நிணவாளஞ்சார்ங்கங்கதைதோளிற்சாத்தினனீணிலமேற்-
குணவாளராம்பட்டர்க்கேழேழ்பிறப்பும்குடிகுடியான்
மணவாளதாசன்யமகவந்தாதிவனைந்தனனே

பதவுரை :
https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcQy8yw6qI0Yu4vZN-VqYYGrQmX8yQElXx2w6pmZR7AfBgptu-QXtg

நீள் நிலம் மேல் நீண்ட பூமியில்
குணவாளர் ஆம் பட்டர்க்கு குண சாலியானபராசர பட்டருக்கு
ஏழ் ஏழ் குடி அடியான் பதினான்கு தலை முறைகளிலும் தாசன் ஆன
மணவாள தாசன் அழகிய மணவாள தாசன்
யமக அந்தாதி வனைந்தனன் யமக அந்தாதிப் பாமாலையைத் தொடுத்து
பரிதி வளை சக்கரமும் சங்கமும்
நிண வாள் கொழுப்பு தோய்ந்த வாளும்
அம சார்ங்கம் அழகிய வில்லும்
கதை கதையும்
தோளில் திருக் கைகளில் கொண்ட
பண வாள் அரவின் படத்தை உடைய ஆதி சேஷன் மீது பள்ளி கொண்ட
அரங்கேசன் தாளில் ஸ்ரீ ரங்க நாதனுடைய திரு அடிகளில்
சாத்தினன் சமர்ப்பித்தான்
நிறை குறை தெரிவிக்க : sridharv1946@gmail.com:cheerful: