Announcement

Collapse
No announcement yet.

திரு வேங்கடத்து அந்தாதி 12/100 அண்ணலைப் பிரிந

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திரு வேங்கடத்து அந்தாதி 12/100 அண்ணலைப் பிரிந

    திரு வேங்கடத்து அந்தாதி12/100 அண்ணலைப் பிரிந்தால் அஞ்சு உகம் தத்து ! வேங்கடத்தே என்னை விடும் !


    நெஞ்சுகந்தத்தையுமக்குரைத்தேனிற்றைநீடிரவொன்-
    றஞ்சுகந்தத்தைவிளைக்குமென்னாசையதாமிதழ்சொல்

    கிஞ்சுகந்தத்தையனையீரிங்கென்னைக்கெடாதுவிடும்
    விஞ்சுகந்தத்தைவிளைக்குந்துழாயண்ணல்வேங்கடத்தே

    பதவுரை : நெஞ்சு + உகந்தத்தை
    அஞ்சு + உகம் + தத்தை (துன்பம்)
    கிஞ்சுகம் + தத்தை (கிளி)
    விஞ்சு + கந்தத்தை

    இதழ் கிஞ்சுகம் வாய் இதழ் முருக்க மலரையும்
    சொல் தத்தை பேச்சு கிளி கொஞ்சுவதையும்
    அனையீர் ஒத்து இருப்பவர்களே
    நெஞ்சு உகந்தத்தை மனம் விரும்பியதை
    உமக்கு உரைத்தேன் உங்களுக்கு சொல்கிறேன்
    இற்றை நீடு இரவு ஒன்று இன்றைய இரவு ஒன்று
    அஞ்சு உகம் ஐந்து யுகமாய் வளர்ந்து
    தத்தை விளைக்கும் துன்பத்தைக் கொடுக்கும் .
    அது என் ஆசை ஆம் அது யான் கொண்ட காதலால் ஏற்பட்டது .
    இங்கு என்னைக் கெடாது என்னை இங்கேயே வைத்து வீணாக்காமல்
    விஞ்சு கந்தத்தை விளைக்கும் மிக்க நறுமணத்தை வீசும்
    துழாய் அண்ணல் திருத்துழாய் தரித்த தலைவனான
    வேங்கடத்தே விடும் திருவேங்கடமலையில் சேர்த்திடுங்கள் !


Working...
X