Announcement

Collapse
No announcement yet.

Gruhapravesamக்ரஹப்ரவேசம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Gruhapravesamக்ரஹப்ரவேசம்

    அடியேனுடைய கனிஷ்ட குமாரன் தன்னுடைய வீட்டின் முதல் மாடியில் புதியதாக பிளாட் நிர்மாத்திருக்கிறான். அதற்க்கு இந்த ஆவணி மாதத்திலேயே க்ருஹப்ரவேசம் செய்ய வேண்டும் என்று ஆவல் கொண்டுள்ளான் . வீட்டின் முகப்பு வாயில் (maindoor) கிழக்கு பார்த்தது. ஞாயிறு,வெள்ளி மேற்கு திசையில் வாரசூலை ஆகையால் வேறு நல்ல நாளில் க்ருஹப்ரவேசம் செய்யவேண்டும் நமது பரந்தாமன் பஞ்சாங்கப்படி 11-9-2013 புதன் நல்ல நாளாக இருக்கிறது. அன்னாருடைய மனைவியின் நக்ஷத்திரம் ரேவதி.ஆனால் அன்று ஷஷ்டி திதியாக உள்ளது மேலும் துலா லக்னம் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.அது சர ராசி அல்லவா? அன்று உத்தமமான நாள் என்றால் அன்றே க்ருஹப்ரவேசத்தை வைத்து கொள்ளலாம் என்று இருக்கிறேன்.இதைப்பற்றி பெரியவர் NVS ஸ்வாமின் அவர்களின் மேலான வழி காட்டுதலை எதிர் பார்க்கிறேன். அவசியம் உதவவேண்டும் என்று ப்ரார்த்திகின்றேன். இல்லை என்றால் வேறு நல்ல உத்தமமான நாளை தேர்ந்தெடுத்து கூற வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.முன்னொருமுறை வேறு ஒருவர்க்கு எந்த விஷயமாய் இருந்தாலும் forum மூலமாகத்தான் அணுகவேண்டும் என்று சொல்லிருப்பதால் அடியேன் NVS ஸ்வாமின் அவர்களுக்கு பிரைவேட் message ஆக அனுப்பி வில்லை.இம்மாதிரி சில பிரைவேட்விஷயங்களில் அவரை நேரடியாக அணுக அனுமதிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்

  • #2
    Re: Gruhapravesamக்ரஹப்ரவேசம்

    ஶ்ரீ:
    க்ருஹப்ரவேசத்திற்கு சர லக்னம் மத்திமம்தான்,
    ஆனால் அன்று விசாகா நக்ஷத்திரம் காலை 7.30 மணி வரை உள்ளது
    அதனாலும் 12ம் இடத்தில் செவ்வாய் இருப்பதாலும் சிம்ம லக்னத்தை
    உபயோகிக்க முடியவில்லை.
    சர லக்னங்களில் மேஷமும், மகரமும் அளவிற்கு துலா லக்னம் (துருவ சந்தியில் இருப்பதால்),
    பாதகம் இல்லை என்பதாலும், துலா லக்னத்திற்கு 12ம் இடம் (அயன, சயன ஸ்தானம், க்ருஹப்ரவேசத்திற்கு முக்கியம்) சுத்தம் இருப்பதாலும் (செப்-7ல் சுக்ரன் துலாத்துக்கு சென்றுவிடுகிறான்),
    மேலும் குருவின் 5ம் பார்வை உள்ளதாலும், புதன் கிழமையில் கௌரிப் பஞ்சாங்கப்படி சுக வேளை என்பதாலும், (கணிக்கும்போது மேலும் எவ்வெவற்றைப் பார்த்தேன் என்பது நினைவில் இல்லை) அடியேனுடைய சிற்றறிவிற்கு எட்டிய யோசனைப்படி துலா லக்னத்தைத் தேர்வுசெய்து தந்துள்ளேன்.
    ஷஷ்டி திதி எல்லாவிதமான சுபங்களுக்கும் எல்லா பஞ்சாங்கங்களிலும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

    ரேவதி நக்ஷத்திரத்திற்கு அநுஷ நக்ஷத்திரம் தினப்பொருத்தம் உள்ள நல்ல நாளாகும்.

    குறிப்பு:- ப்ரைவேட்டாக அணுகவேண்டிய விஷயம் எதுவுமே இந்த மன்றத்தில் இல்லை என்றே கருதுகிறேன். இந்தத் தங்கள் கேள்வியில் பிறர் அறியக்கூடாத ரகசியம் எதுவும் இருப்பதாக அடியேனுக்குத் தெரியவில்லை.
    மாறாக, சர லக்னம் க்ருஹப்ரவேசத்திற்கு கூடாது போன்ற பல பயனுள்ள விஷயங்கள் மற்றோரும்
    படிக்க வாய்ப்பு ஏற்படுகிறது.
    அது மட்டுமின்றி, அடியேனைக் காட்டிலும் நிபுணர்களின் மாற்றுக் கருத்துக்களை அறியவும் வாய்ப்பு
    உண்டாகும், எனவே, தனிப்பட்ட முறையில் வினவுவதைவிட, இப்படி வெளிப்படையாக விவாதிப்பதே சிறந்தது என்பது அடியேன் கருத்து.
    தாஸன்,
    என்.வி.எஸ்


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

    Comment


    • #3
      Re: Gruhapravesamக்ரஹப்ரவேசம்

      Gruhapravesamக்ரஹப்ரவேசம்

      ஸ்ரீ NVS ஸ்வாமின்,

      தங்களுடைய மேலான கருத்துக்களை படித்து மகிழ்ச்சி அடைந்தேன். ஆனாலும் தாங்கள் அடியேனுக்கு தைரியமாக 11.9.2013 புதன் அன்று க்ரஹப்ரவேசம் செய்யலாம் என்று அறிவுரத்தவில்லயே என்று நினைக்கிறேன் .அடியேன் அன்று க்ருஹப்ரவேசத்தை வைத்துக்கொள்ளலாமா? தயவு செய்து சிரமம் பார்க்காமல் தெரிவிக்கவும் .சிரமம் கொடுப்பதற்கு க்ஷமிக்கவும் .அடியேன் வேறு யாரையும் கலந்து ஆலோசிக்க விரும்பவில்லை .

      Comment


      • #4
        Re: Gruhapravesamக்ரஹப்ரவேசம்

        Sri:
        Dear Sir,
        This is my usual procedure always for all - "Suggestions - No recommendations".
        If I have any authentic evidence, then I will recommend a thing with that evidence.
        So, if you satisfied with the explanation you can consider the suggestions.
        Best regards,
        NVS


        Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
        please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
        Encourage your friends to become member of this forum.
        Best Wishes and Best Regards,
        Dr.NVS

        Comment

        Working...
        X