Announcement

Collapse
No announcement yet.

ருத்ராட்சம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ருத்ராட்சம்

    ருத்ராட்சம்


    Click image for larger version

Name:	Rudra.jpg
Views:	1
Size:	23.0 KB
ID:	35249

    ருத்ராட்சத்தை யார் யார் அணிந்தால் நல்லது?

    இந்த ருத்ராட்சத்தை பெண்கள் அணியலாமா? குழந்தைகளுக்கு அணிவிக்கலாமா? யார் யார் அணியலாம் என்கிற கேள்வி பலருக்கு எழுகிறது.

    ருத்ராட்சத்தை சிறு குழந்தைகளில் இருந்து வயதானவர்கள் வரையில் ஆண், பெண் இருபாலரும் அணியலாம். அதேபோல், சாதி, மத வேறுபாடின்றி எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் ருத்ராட்சம் அணியலாம்.

    முதல் முதலாக ருத்ராட்சம் அணிபவர்கள், திங்கள் கிழமைகளிலும், பிற நல்ல நாள்களிலும் சிவ ஆலயங்களில் அபிஷேகம் செய்த பின்னர் அணியலாம்.

    ஈமச் சடங்குகளின் போது அணியக்கூடாது. இரவு படுக்கைக்கு முன் கழற்றிவிட்டு, காலை எழுந்து குளித்தபின் ஓம் நமசிவாய என்ற மந்திரத்தை உச்சரித்து அணிவதுதான் முறை.

    ருத்ராட்சம் மிக வலிமையான மணி.. எனவே, தகுந்த முறையில் அதை பராமரித்து, பயன்படுத்தினால் பல ஆண்டுகளுக்கு பயன்படுத்தலாம். ஒரு சில குடும்பங்களில் தலைமுறை தலைமுறையாக பராமரித்து பயன்படுத்துகிறார்கள்.

    ருத்ராட்சம் தரும் மனக் கட்டுப்பாடுச் சக்தி..!

    ருத்ராட்சத்துக்கு, மனதை அடக்கி, மனக் கட்டுப்பாட்டை வளர்க்கும் அபூர்வ ஆற்றல் இருக்கிறது. இதை அணிபவர்கள், உணர்வுப்பூர்வமாக அறியலாம். ருத்ராட்சத்துக்கு நினைவு ஆற்றலை அதிகரிக்க செய்யும் அற்புத சக்தியும், சுய ஆற்றலை பெருக்கிக்கொள்ளும் திறனும் உண்டு. ருத்ராட்சத்துக்கு இருக்கும் இந்த சக்தியை சிலர் உடனடியாக உணரலாம். சிலர் படிப்படியாக உணர்கிறார்கள்.

    ருத்ராட்சம், இயற்கையாகவே, ஒரு முகம் முதல் 21 முகங்களைக் கொண்டதாக அமைந்திருக்கிறது. ருத்ராட்சத்தின் ஒவ்வொரு முகத்துக்கும் ஒவ்வொரு தனிச் சிறப்பு உண்டு.

    ருத்ராட்ச கொட்டையின் மேற்பகுதியில் உள்ள கோடுகளைக்கொண்டு அது எத்தனை முகம் கொண்டது என்பதை அறியலாம்.

    Click image for larger version

Name:	rudratcham.jpg
Views:	1
Size:	27.2 KB
ID:	35250


    Source:Religious history of hinduism
    Last edited by Padmanabhan.J; 01-10-13, 04:19.
Working...
X