Announcement

Collapse
No announcement yet.

4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 026/116 திருநறை

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 026/116 திருநறை

    4. நூற்றெட்டு திருப்பதி அந்தாதி - 026/116 திருநறையூர் நின்றான் செயல் யாரும் அறியாரே !

    திருப்பதி - 20/108. சோழ நாடு - 20/40 :

    செய்ய சடையோன் , திசை முகத்தோன் , வானவர் கோன் ,
    ஐயம் அறுத்து இன்னம் அறியாரே - துய்ய
    மருநறை ஊர் வண் துழாய் மாயோன் , செவ்வாயோன் ,
    திருநறையூர் நின்றான் செயல்

    பதவுரை :

    துய்ய மருநறை ஊர் தூய்மையான நறு மணமும் தேனும் பொருந்திய
    ண் துழாய் மாயோன் செழுமையான திருத்துழாய் அணிந்த மாயனும் ,
    செவ்வாயோன் சிவந்த திரு அதரத்தை உடையவனும் ,
    திருநறையூர் நின்றான் திரு நறையூரில் நிற்பவனுமான எம்பெருமானின்
    செயல் செய்கைகளைப் பற்றி
    செய்ய சடையோன் சிவந்த சடையை உடைய சிவனும் ,
    திசை முகத்தோன் நான்கு முகம் உடைய பிரமனும் ,
    வானவர் கோன் தேவர் தலைவனான இந்திரனும்
    ஐயம் அறுத்து சந்தேகம் இல்லாமல்
    இன்னம் அறியாரே இன்னம் அறிய மாட்டார்கள்

    V.Sridhar
    Last edited by sridharv1946; 29-10-13, 20:53.
Working...
X