Announcement

Collapse
No announcement yet.

குடமிலகாயைப்பற்றி கொஞ்சம் தகவல்கள்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • குடமிலகாயைப்பற்றி கொஞ்சம் தகவல்கள்

    குடமிளகாய் இப்போது உபயோகத்தில் அதிகமாக பயன்படுத்த படுகிறது.பச்சை,மஞ்சள்சிவப்பு என்ற கலர்களில் கிடைக்கிறது. மருத்துவ குணங்கள்உள்ளஇந்தகுடமிளகாயைபற்றி
    அறிவோமா?
    வரதராஜன்


    Click image for larger version

Name:	capsicum-pic.jpg
Views:	1
Size:	10.4 KB
ID:	35417



    அம்மா வாங்கி வந்தால் ஆசையாய் கையில் தூக்கி வைத்து விளையாடத் தூண்டும் அளவுக்கு, பார்க்க அழகாக, குண்டு குண்டென்று இருக்கும் குடமிளகாய். சாதாரண காய்ந்த மிளகாய்போல அதிக காரம் இருக்காது என்பதால் அனைவருக்குமே குடமிளகாயைப் பிடிக்கும். குடமிளகாயில் என்னென்ன சத்துக்கள் அடங்கி இருக்கிறது தெரியுமா உங்களுக்கு...

    குடமிளகாயின் அறிவியல் பெயர் காப்சிகம் அனம். பார்க்க மணியை கவிழ்த்து வைத்தது போன்ற தோற்றத்தில் இருப்பதால் `பெல் பெப்பர்' என்ற பெயரிலும் அழைக்கப்படுவதுண்டு.

    குடைமிளகாய் உடலுக்கு மிகவும் நல்லது. இப்போது இதனை பெரும்பாலானோர் பயன்படுத்தத் துவங்கி உள்ளனர்.

    குடமிளகாயில் என்னென்ன சத்துக்கள் இருக்கிறது என்பதனைப் பார்ப்போம்..

    தக்காளி, குடைமிளகாய், எலுமிச்சை ஆகியவற்றில் வைட்டமின் 'சி' (C) சத்து அதிகமுள்ளது. இவற்றை சமைக்கும்போது தண்ணீர் அதிகம் சேர்க்கக்கூடாது. அதிகச்சூட்டில் சமைக்கக் கூடாது. செப்புப் பாத்திரத்தில் சமைக்கக்கூடாது.

    உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் குடமிளகாயை உணவில் சேர்த்து வர நல்ல பலனளிக்கும். குடமிளகாயில் கொழுப்புச் சத்து, கொலஸ்ட்ரால்,சோடியம் ஆகியன குறைவாகவே இருப்பதால் உடல் எடையைக் குறைக்க உதவும்.

    குடமிளகாயில் உள்ள விட்டமின் ஏ,சி,ஈ,பி6 போன்ற சத்துக்கள் ஆரோக்கியமான தேகத்தைக் கொடுக்கும்.

    கண்பார்வையைச் சிறப்பாக்கவும் இளமையிலேயே கண் தொடர்பான பிரச்சினைகளை அண்டவிடாமலும் குடமிளகாய் காக்கிறது என்பதைச் சமீபத்திய மருத்துவ ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

    குடமிளகாயைச் சமைக்கும் முன் நன்கு அலம்ப வேண்டும்.

    குடமிளகாயைத் துச்சமாக எண்ணாமல் அதன் பலன்களைக் கருத்தில் கொண்டு பயன்படுத்துவது ஆரோக்கியமான வாழ்விற்கு நல்லது.

    ஊசி மிளகாய், குடைமிளகாய், மிளகு ஆகியவை உடலில் சர்க்கரை சத்தை அழிப்பதில் பெரிதும் உதவுகின்றன. இதே உத்தியைப் பயன்படுத்தி உடலின் பருமனைக் குறைக்க முடியும்.

    காய்கறி சாலட் அதிகம் உண்பது நலம். குடைமிளகாய், கோஸ், வெங்காயத்தாள், வெள்ளரிக்காய் ஆகியவற்றை மெல்லியதாக வட்ட வடிவில் நறுக்கவும். சுவைக்கு உப்பு, மிளகு எலுமிச்சை பிழியவும். அருமையான சாலட் தயார்.

    குடைமிளகாயில் நிறைந்துள்ள "வைட்டமின் சி' சத்து, கூந்தலின் ஆரோக்கியத்தை பராமரித்து, கூந்தலின் நுனியில் பிளவு ஏற்படுவதை தடுக்கிறது.

    வைட்டமின் சி 137 மி.கி., வைட்டமின் ஏ 427 மைக்ரோ கிராம் மற்றும் கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து ஆகிய தாதுப் பொருள்களும் உள்ளன.

    சாதாரண மிளகாயைவிட இதில் சதைப் பற்று அதிகம். மிதமாகப் பயன்படுத்தினால் அஜீரணத்தைப் போக்க உதவும்.
    Last edited by R.Varadarajan; 12-11-13, 08:30.
Working...
X