Announcement

Collapse
No announcement yet.

கும்பகோணம் டிகிரி காபி

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கும்பகோணம் டிகிரி காபி

    கும்பகோணம் டிகிரி காபி




    எங்கோ கண்டுபிடிக்கப்பட்ட பானம் காபி;அது கும்பகோணத்துக்கு வந்ததும் எப்படி அதன்
    பெயரில் ஒட்டிக்கொண்டது டிகிரி? சுவையான
    காபியின் வரலாறைப் பார்த்து விட்டு டிகிரிக்கு
    வருவோம்...காபியின் பூர்வீகம் எது என்பதில் முரண்பாடான கருத்துக்கள் உண்டு.

    கிறிஸ்து பிறப்பதற்கு 600 ஆண்டுகளுக்கு முன்பு, எத்தியோப்பியா நாட்டில் ஃகாப்பா என்ற பகுதியில் கல்பா என்பவர் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தாராம்.
    அப்போது வழக்கத்துக்கு மாறாக சில ஆடுகள்
    உற்சாகமாக ஆடியோடி திரிந்ததைப் பா ர்த்து அதிசயித்த கல்பா, அவை ஒரு செடியில் உள்ள
    சிவப்பு பழங்களை உண்டதாலேயே உற்சா கமடைந்ததைக் கண்டறிந்தார்.

    அவரும் அப்பழங்களை ருசிக்க, அளவில்லாத உற்சாகத்தை உணர்ந்தார். இப்படித்தான் காபிச்செடி இனம் காணப்பட்டதென ஒரு செவிவழிக் கதையுண்டு.
    17ம் நூற்றாண்டில் மெக்கா, ஏமன் நாடுகளுக்கு யாத்திரை சென்ற பாபாபூடன் என்பவர் காபி விதைகளை இந்தியா கொண்டு வந்தார்.அவர் முதலில் காபியை பயிரிட்ட இடம் கர்நாடகாவின் சந்திரகிரி மலை. பிறகு பிரிட்டிஷ்காரர்களால் காபி இந்திய மக்களின் வாழ்க்கையில் மட்டுமின்றி மண்ணிலும் கலந்து விட்டது.

    அமெரிக்கானோ, கப்பச்சினோ, எஸ்பிரஸோ, லட்டெச்
    சினோ, மோக்கா, லங்கோ என காபியில் உலகப்

    புகழ்பெற்ற ரகங்கள் இருந்தாலும், அதை உன்னதத் தன்மையோடு அருந்த கும்பகோணம்தான் வரவேண்டும்.பொதுவாக குடந்தைக்காரர்கள் உணவு விஷயத்தில் ரசனைவாதிகள். பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து, கிணற்று நீரில் குளிர்குளியலிட்டு, இறைவனைத் தொழுதபின் அவர்களுக்குச் சுடச்சுட
    டிகிரி காபி வேண்டும். அதைக் குடித்தால்தான் உடல் இயந்திரம்அடுத்தவேலைக்குத் தயாராகும்.

    அதென்ன டிகிரி காபி?டிகிரி என்பது பாலின் தரத்தைக் குறிக்கும் அளவீடு. கறந்த சூடு ஆறாத, தண்ணீர் கலக்காத பசும் பால். இதை லேக்டோ மீட்டர்
    போட்டு டிகிரி உறுதிப்படுத்தியே வாங்குவார்கள். அதில் போட்டால் தான், அது டிகிரி காபி.

    கும்பகோணத்துக்கே உரிய பித்தளை காபி பில்டரை நன்கு சூடேற்றி, அதில் சிக்கரி கலக்காத காபித்தூளையும் சர்க்கரையையும் போட்டு, கொதிக்கும் வெந்நீரை ஊற்றி மூடிவிடவேண்டும்.

    ஆடை சூழாத பால் பாதி, பில்டரில் ஊறிய காபி டிகாஷன் பாதி. ஓங்கி ஒரு ஆற்று... பொங்கிய நுரையும், பறக்கும் ஆவியும் நாவில் படுகிற நொடியில் உடம்பு நரம்புகள் கிளர்ந்து எழும்.கும்பகோணத்தில் வீதிக்கு வீதி டிகிரி காபி கடைகள் உண்டு.

    மடத்துத்தெருவில் உள்ள இன்பம் காபிக்கடையில் டிகிரி காபி அருந்துவது சிறந்த அனுபவம். கோதண்ட ராமன் தான் இன்பம் காபிக்கடையின் நிறுவனர்.

    இதுதவிர, முருகன் கபே, காந்தி பூங்கா அருகேயுள்ள வெங்கட்ரமணா ஹோட்டல், கும்பேஸ்வரன் சந்நதி தெருவில் மங்களாம்பிகா ஆகிய இடங்களில் ரியலான டிகிரி காபியை ருசிக்கலாம்


    Source:http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=699&Cat=502

  • #2
    Re: கும்பகோணம் டிகிரி காபி

    சூடான சுவையான விஷயம் தான் ஸார்

    Comment


    • #3
      Re: கும்பகோணம் டிகிரி காபி

      An estimated 1.6 billion cups of coffee are consumed globally each day, or just over 2 million cups every five minutes.
      Maybe you're even drinking some right now — 68% of coffee drinkers have a cup within the first hour of waking up.

      London-based company Datadial developed an interesting infographic for their client Wild Card that breaks down the history of coffee, different preparation methods, and types of coffee beans


      Read more: http://www.businessinsider.com/the-c...#ixzz2kRJHtYjg

      Comment

      Working...
      X