Announcement

Collapse
No announcement yet.

மகேந்திரகிரி மலை

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • மகேந்திரகிரி மலை

    மகேந்திரகிரி மலை


    Click image for larger version

Name:	hills.jpg
Views:	1
Size:	18.0 KB
ID:	35474

    மேற்கு தொடர்ச்சி மலை இந்தியாவின் முதுகெலும்பாக திகழ்கிறது. இந்திய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்களின் வாழ்வாதாரமாக திகழ்கிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த மலையைப் பற்றி ஒவ்வொரு இதழிலும் அறிந்து வருகிறோம்.

    மலைகள் என்றால் பாறைகள் மரங்கள், விலங்குகள் மட்டுமல்ல. மூலிகைகளின் நந்தவனமும் இவைதான். எண்ணற்ற மூலிகைகளை தன்னகத்தே கொண்டு காற்றுடன் கலந்து மூலிகை காற்றாகவும், நீருடன் கலந்து மூலிகை நீராகவும் வெளிவருகிறது . இந்த மேற்கு தொடர்ச்சி மலையின் அடிப்பகுதியில் அதாவது கிழக்கு பக்கம் அமைந்துள்ள தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டமும், திருநெல்வேலி மாவட்டம், மேற்கு பகுதியில் கேரள மாநிலமும் அமைந்துள்ளன. தற்போது தென்மேற்கு பருவ மழையின் உச்ச காலம். இந்த மலையின் மேற்கு பக்கம் மழையாகவும், கிழக்குப் பக்கம் மழைச்சாரல் மற்றும் ஈரக்காற்றுடன் தென்றலாக தவழ்ந்து வரும். சில நேரங்களில் தமிழகத்தில் பலத்த காற்று மட்டும் வீசும். மழை மேகங்கள் இம்மலைப்பகுதிகளிலேயே தடுக்கப்பட்டு தமிழக பகுதிக்கு மழை இல்லாமல் செய்துவிடுகின்றன. ஆனால் இங்கு பெய்யும் மழை வற்றாத ஜீவநதிகளாக இன்றும் ஓடிக் கொண்டிருக்கின்றன.

    கடந்த இதழில் தடாக மலை, கீழ்மலை, பொய்கை மலை பற்றி அறிந்தோம். இந்த இதழில் மகேந்திரகிரி மலையைப் பற்றி அறிந்து கொள்வோம். புராண இதிகாசமான இராமாயணத்தில் இராவணன் சீதையை கடத்தி இலங்கையில் சிறைவைத்தபோது சீதாவைத் தேடி அனுமன் புறப்பட்டு மகேந்திர கிரி மலையின் மேல் இருந்து இலங்கை நோக்கி வான்வழியாக சென்றுள்ளார்.

    இந்த மகேந்திரகிரி மலையின் பள்ளத்தாக்கு பகுதியில் பலமான சுழல் காற்று வீசும் பகுதியாகும். இந்த மலை பூகோள ரீதியில் மிகுந்த தொடர்புடையது. இங்குதான் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) அமைந்துள்ளது. மகேந்திரகிரி மலை 1800 மீட்டர் உயரம் கொண்டது. இங்கு அடர்ந்த காடுகள் நிறைந்துள்ளது. சிற்றருவிகள் ஏராளம். இது அரசாங்கத்தால் பாதுகாக்கப்பட்ட பகுதியானதால் இங்கு யாரும் எளிதில் சென்றுவர அனுமதியில்லை.

    ஆரல்வாய் மொழிக்கும் பணக்குடிக்கும் இடையே அதிகமான சுழல் காற்று வீசும் பகுதியாகும். இப்பகுதியில் சிவப்பு மண் அதிகமிருப்பதால் அவை சில சமயங்களில் காற்றடிக்கும்போது சாலைகளை மூடிவிடுகின்றன. அதுபோல் இங்கு வீசும் காற்றில் அதிக அளவு ஈரப்பதம் உள்ளதால் காற்றாலை மின் உற்பத்தி அதிகம் நடைபெறுகிறது.

    இந்த மகேந்திர கிரி மலையின் சீதோஷ்ண நிலையில் மூலிகைகள் செழித்து வளருகின்றன. இவற்றின் சில அபூர்வ மூலிகைகள் பற்றி அறிந்துகொள்வோம்.

    தொழுகண்ணி அழுகண்ணி

    இடிநருங்கி மதிமயங்கி

    கருணை கிழங்கு மலைநீலி

    நீலத்தும்பை அழவணம்

    கல்தாமரை குமரி

    குறிஞ்சி செடி மருள்

    நாகதாளி திருநீற்றுப்பூண்டு

    பொன்னாவாரை பேயத்தி

    பூவரசு காட்டுச்சீரகம்

    மகாவில்வம் தான்றிக்காய்

    பன்னீர் பூ மரம் கருஊமத்தை

    கருங்குங்கிலியம் நீலநாயுருவி

    பிரம்மத்தண்டு மலைக்கரந்தை

    புளியாரை மலைச்சடையான்

    மலை இஞ்சி மலை கண்டங்கத்திரி

    தேவதாரு கல்லுருக்கி

    கடுக்காய்

    இவற்றைப்போல் பல ஆயிரக்கணக்கான மூலிகைகள் நிறைந்துள்ளன. இங்கு மான்கள், கீரிகள், முயல்கள் அதிகம் காணப்படுகின்றன

    Source:nakkheeran

  • #2
    Re: மகேந்திரகிரி மலை

    சித்தவைத்யர்களுக்கான பொக்கிஷப்பதிவு

    Comment

    Working...
    X