Announcement

Collapse
No announcement yet.

சஷ்டி அப்த பூர்த்தி

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • சஷ்டி அப்த பூர்த்தி

    அறுபது, எழுபது, எண்பது 13.
    அச்வத்தாமா ஆவாஹநம்.: அச்வத்தாமந் த்ரோண புத்ர சர்வ ஷக்திமதாம் வர; பூஜாம் இமாம் க்ருஹீத்வா த்வம் மம ஆயுர் வ்ருத்தி க்ருத் பவ; என்ற மந்திரத்தால் த்யாநம் , ஆவாஹனம் செய்க.

    மஹாபலி ஆவாஹநம்: த்ரிவிக்ரம மநோபீஷ்ட பூர்ணாத்த யசோதன: மஹாபலே க்ருஹாண த்வம் பூஜாம் நாகாலய ஆலய என்ற மந்திரத்தால் த்யாநம் ,ஆவாஹநம் செய்யவும்.

    வ்யாஸ மஹரிஷி த்யானம்: ஸர்வ வேத ஸமுத்ராணாம் பாரத்ருஷ்வந் மஹாமுநே.பராசராத்மஜ ஶ்ரீ மந் பூஜாம் க்ருணீஷ்வ மா மிமாம். இவ்வாறு த்யானித்து ஆவாஹநம் செய்க.

    ஆஞ்சநேய த்யாநம்: ஹநுமந். அஞ்சநாஸுநோ ராம பாதாப்ஜ ஷட்பத; வாயு புத்ர நமஸ்தே அஸ்து ஸாந்நித்யம் குரு ஸர்வதா. இவ்வாறு த்யானித்து ஆவாஹநம் செய்க.

    விபீஷண த்யாநம்.; தர்மாசரண ஸம்ப்ராப்த சர்வைஷ்வர்ய விபீஷண . பூஜா மிமாம் க்ருஹாண த்வம் ராம கார்யார்த ஸாதக—இவ்வாறு த்யானித்து ஆவாஹணம் செய்க.

    க்ருபாச்சார்யார் த்யாநம்.-க்ருபாசார்ய தநுர் வித்யா கெளசலார்ஜித வைபவ. ஏஹ்யத்ர பூஸுர சிரேஷ்ட பூஜாம் மே ஸ பலாம் குரு. இவ்வாறு த்யானித்து ஆவாஹனம் செய்க.

    பரஸுராமர் த்யாநம்: ஜாமதக்நிய மஹா தேஜ: ஸர்வக்ஷத்ர நிஷூதந . ஷிவாநுக்ரஹ ஸம்ப்ராப்த சாபவித்ய நமோஸ்துதே- இவ்வாறு த்யானித்து ஆவாஹநம் செய்க.

    ஆயுர்தேவதா ஆவாஹநம்: ஆயுர்தா அக்ந ஹவிஷோ ஜுஷாணோ க்ருத ப்ரதீ கோக்ருத யோனி ரேதி.. க்ருதம் பீத்வா மதுசாருகவ்யம். பிதேவ புத்ரம் அபிரக்ஷிதாதிவம். அஸ்மின் கலசே ஆயுர் தேவதா த்யாயாமி. ஆவாஹயாமி.

    ஸம்வத்ஸர தேவதா ஆவாஹநம். இதுவத்ஸராய பரிவத்ஸராய என்ற மந்த்ரத்தால் ஆவாஹநம் செய்க.

    அறுபது வருஷங்களுக்குறிய தேவதையையும் , அந்தந்த வருஷத்தின் பெயரோடு பின் வருமாறு சேர்த்து சொல்லி ஆவாஹநம் செய்யவும்.

    ப்ரஹ்மாணம் ப்ரபவம் ஆவாஹயாமி; விஷ்ணும் விபவம் ஆவாஹயாமி; ருத்ரம் சுக்ல ஆவாஹயாமி; கணேசம் ப்ரமோதூத ஆவாஹயாமி; ஷக்திம் ப்ரஜாபதிம் ஆவாஹயாமி; குமாரம் அங்கிரசம் ஆவாஹயாமி; வல்லீம்

    ஶ்ரீமுகம் ஆவாஹயாமி; கெளரீம் பவம் ஆவாஹயாமி; ப்ராஹ்மீம் யுவம் ஆவாஹயாமி; மாஹேஸ்வரீம் தாதுவம் ஆவாஹயாமி; கெளமாரீம் ஈஸ்வரம் ஆவாஹயாமி; வைஷ்ணவீம் பஹுதாந்யம் ஆவாஹயாமி;

    வாராஹீம் ப்ரமாதினம் ஆவாஹயாமி; மாஹேந்திரீம் விக்ரமம் ஆவாஹயாமி; சாமுண்டாம் வ்ருஷ்ணம் ஆவாஹயாமி; ஆரோகம் சித்ரபாநும் ஆவாஹயாமி; ப்ராஜம் சுபாநும் ஆவாஹயாமி; படரம் தாரணம்

    ஆவாஹயாமி; பதங்கம் பார்திவம் ஆவாஹயாமி; ஸ்வர்ணரம் வ்யயம் ஆவாஹயாமி ; ஜ்யோதிஷிமந்தம் ஸர்வஜித் ஆவாஹயாமி; விபாஸம் ஸர்வதாரி ஆவாஹயாமி; கஸ்யபம் விரோதிம் ஆவாஹயாமி; ரவிம்

    விக்ருதிம் ஆவாஹயாமி; ஸூர்யம் கரம் ஆவாஹயாமி; பாநும் நந்தனம் ஆவாஹயாமி; ககம் விஜயம் ஆவாஹயாமி; பூஷ்ணம் ஜயம் ஆவாஹயாமி; ஹிரண்யகர்பம் மன்மதம் ஆவாஹயாமி; மரீசிம் துர்முகம் ஆவாஹயாமி;

    ஆதித்யம் ஹேவிலம்பீம் ஆவாஹயாமி; ஸவிதாரம் விளம்பிம் ஆவாஹயாமி; அர்கம் விகாரிம் ஆவாஹயாமி; பாஸ்கரம் சார்வரீம் ஆவாஹயாமி;; அக்னிம் ப்லவம் ஆவாஹயாமி; ஜாதவேதஸம் ஷுபக்ருதம்

    ஆவாஹயாமி; ஸஹோஜஸம் ஷோபக்ருதம் ஆவாஹயாமி; அஜிராப்ரபவம் க்ரோதிநம் ஆவாஹயாமி; வைஷ்வாநரம் விஸ்வாவஸும் ஆவாஹயாமி;
    நர்யாபஸம் பராபவம் ஆவாஹயாமி; பங்க்த்திராதஸம் ப்லவங்கம்

    ஆவாஹயாமி; விஸர்பினம் கீலகம் ஆவாஹயாமி; மத்ஸ்யம் ஸெளம்யம் ஆவாஹயாமி; கூர்மம் ஸாதாரணம் ஆவாஹயாமி; வராஹம் விரோதிக்ருதம் ஆவாஹயாமி; ந்ருஸிம்ஹம் பரிதாபிநம் ஆவாஹயாமி;

    வாமநம் ப்ரமாதீசம் ஆவாஹயாமி; பரஸுராமம் ஆனந்தம் ஆவாஹயாமி; ராமம் ராக்ஷஸம் ஆவாஹயாமி; பலராமம் நளம் ஆவாஹயாமி; க்ருஷ்ணம் பிங்களன் ஆவாஹயாமி; கல்கிநம் காளயுக்திம் ஆவாஹயாமி; புத்தம்

    ஸித்தார்திம் ஆவாஹயாமி; துர்காம் ரெளத்ரீம் ஆவாஹயாமி ;யாதுதாநம் துர்மதிம் ஆவாஹயாமி; பைரவம் துந்துபிம் ஆவாஹயாமி; ஹநூமந்தம் ருதிரோத்காரிம் ஆவாஹயாமி;

    ஸரஸ்வதீம் ரக்தாக்ஷிம் ஆவாஹயாமி ;தாக்க்ஷாயனீம் க்ரோதனம் ஆவாஹயாமி; லக்ஷ்மீம் அக்ஷயம் ஆவாஹயாமி;

    நக்ஷத்ரங்களின் பெயர்களும் அவற்றின் தேவதைகளும்; ஆவாஹணம் செய்ய.

    க்ருத்திகா----அக்னி; ரோஹிணி-----ப்ரஜாபதி; ம்ருகசீர்ஷம்------ஸோமம்; ஆர்த்ரா---------ருத்ரன்; புநர்வஸு-------அதிதி;; புஷ்யம்------ப்ருஹஸ்பதி;;ஆஷ்லேஷா------ஸர்பாந்; மகா-------பித்ரூன்; பூர்வபல்குணி-----அர்யமணம்; உத்ரபல்குணி-----

    பகம்;; ஹஸ்தம்-----ஸவிதாரம்; சித்ரா------த்வஷ்டாரம்; சுவாதி-------வாயு; விஷாகா-----இந்த்ராக்னி; அநுராதா------மித்ரம் ஜ்யேஷ்டா-----இந்த்ரம் ;மூலா------நிர்ருதிம்; பூர்வாஷாடா---------அப: உத்ராஷாடா--------விஸ்வாந்தேவான்.அபிஜித்—

    ---ப்ரஹ்மாணம்; ஷ்ரவணம்-------விஷ்ணு; ஷ்ரவிஷ்டா------வஸுந் ஷதபிஷக்------வருணம்; பூர்வப்ரோஷ்டபதா-----அஜைகபாதம்; உத்திரப்ரொஷ்டபத-----அஹிர்புத்நியம்; ரேவதி-------பூஷணம்; அஷ்வினி------அஸ்விநெள; அபபரணி----
    யமம்.;

    ஆவாஹணம் செய்யபட்ட தேவதைகளுக்கு ஷோடசோபசார பூஜைகள் செய்க.

    இனி ஆசார்யனும் ருத்விக்குகளுமாக வேத மந்திரங்களை ஜபிக்க வேண்டும்.

    வேத ஆரம்ப வாக்கியங்கள்; த்ரயம்பகம்; ருத்ர காயத்ரி; திக்பால மந்திரங்கள்; ஆபோஹிஷ்டா முதலிய மந்திரங்கள்; ஹிரண்யவர்ணா:; பாவமாந்யாய: வருண, ப்ருஹ்ம, விஷ்ணு, ருத்ர, துர்கா, ஶ்ரீ, பூ-ம்ருத்யு ஸூக்தங்கள்; ருத்ரம்,சமகம், புருஷ சூக்தம் ;க்ருத ஸூக்தம்,அப வா ஏதஸ்மாத் என்ற மந்திரம், , ஸர்வேஷு வை என்ற மந்திரம். பஞ்ச ஷாந்தி, நக்ஷதிர அஷ்ட வாக்யங்கள்; கோஷ ஷாந்தி,, நமோ ப்ருஹ்மணே என்ற மந்திரம் 3 முறை சொல்லவும்.

    கலச வேதிகையின் மேற்கு பக்கத்தில் ஹோம குண்டம் அமைத்து , யஜமானனின் ஸ்வ ஸூத்ரப்படி பூர்வாங்கம், அக்னி கார்யம், அக்னி முகம் வரை செய்ய வேண்டும்.

    சமித்து, அன்னம், நெய்யுடன் த்ரயம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டி வர்தனம் உர்வாருகமிவ பந்தனாத் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்.என்ற மஹா ம்ருத்யுஞ்ஜய மந்திரத்தால் 108 ஆஹூதிகள் அளித்திடுக;

    நெல்லோடு கலந்த எள் கொண்டு ப்ருஹ்ம காயத்ரி மந்திரம் 108 ஆவர்த்தி அளித்திடுக; நக்ஷ்த்திர அஷ்ட வாக்யங்கள் சொல்லி நெய்யினால் ஹோமம் செய்க.

    ஹோமதிற்கு பிறகு கலசங்களிலுள்ள தேவதைகளை முறைப்படி யதாஸ்தானம் செய்து விட்டு அனைவருக்கும் ப்ரோக்ஷணம் செய்க/.உள்ளுக்கு குடிக்க கொடுக்கவும். யஜமான தம்பதியர்க்கு அபிஷேகம்.. நெய்யில் முகம் பார்த்த பாத்ர தானம்.

    இனி தம்பதிகளுக்கு பல வகையான மங்கள த்ரவ்யங்களால் ஸ்நான முறை .
    முன் கூட்டியே சேகரித்து வரிசைபடி வைத்துக்கொள்ளவும்.

    கோரோசனம்; பசு நெய்; பசுந்தயிர். பசும்பால்; புஷ்பம், பழங்கள்; அருகம்பில் ;தீபம்; முகம் பார்க்கும் கண்ணாடி, ,தங்கம்.., புனித இடங்களிலிருந்து பெறப்பட்ட மண்;

    பின் வரும் ஸ்லோகம் சொல்லி உச்சந் தலையில் கோரோசனையை தடவவும். ஆயூ: புஷ்டி: யஷோ தைர்யம் மங்க\ளம் ச பவேத் மம.

    பின் வரும் ஸ்லோகம் சொல்லி கண் இமைகளுக்கு மேல் பசு நெய்யை தடவ வேண்டும். தேஜோ ரூபம் ச ஷீலம் ச காந்திஸ்சாபி விவர்த்ததாம்.

    பின் வரும் ஸ்லோகம் சொல்லி தயிரால் நெற்றியில் திலகம் இட்டுக் கொள்ள வேண்டும்.ஸெளபாக்கியம் ச ஸுகந்தஸ் ச ஸுகம் ச மம ஜாயதாம்

    பின் வரும் ஸ்லோகம் சொல்லி அருகம்பில்லை சிரஸில் வைத்துகொள்ளவும். ஆயுர்தீர்க்கம் ததாஆரோக்யம் வபு: ஸ்யாத் வஜ்ர ஸந்நிபம்.

    பின் வரும் ஸ்லோகம் சொல்லி பசும் பாலை சிரஸில் விட்டு கொள்ள வேண்டும். பய ஏவ பலம் ந்ரூணாம் ஆயுர்தீர்க்கம்ச யச்சதி.

    பின் வரும் ஸ்லோகம் சொல்லி பழங்களை கையால் தொட வேண்டும்.
    பலம் மனோரத பலம் ப்ரததாதி சதா ந்ரூணாம்.

    பின் வரும் ஸ்லோகம் சொல்லி தலையில் பக்தியுடன் புஷ்பத்தை தரித்து கொள்ள வேண்டும். ஶ்ரீஸ்ச லக்ஷிமீஸ்ச மே ந்த்யம் பவேதாம் மய்யநச்வரே.

    பின் வரும் ஸ்லோகம் சொல்லி கண்ணாடியில் தமது முகத்தைப் பார்க்க வேண்டும்.அலக்ஷ்மீ: காலகண்டீஸ்ச குரூபம் ச வினச்யது.

    பின் வரும் ஸ்லோகம் சொல்லி தீபத்தை பய பக்தியுடன் தரிசிக்க வேண்டும்.
    அந்தகார; தமஸ்சைவ ஹி அஞ்ஞானம் ச நிவர்ததாம்.

    பின் வரும் ஸ்லோகம் சொல்லி துலஸி செடியின் கீழிருந்தோ, அல்லது வேறு புனித தலத்திலிருந்தோ கொண்டு வரப்பட்ட மண்ணை தொட்டு ஸிரஸில் வைத்துக் கொள்ள வேன்டும்.. பூமிர்த்தரித்ரின் பூதாநாம்.

    பின் வரும் ஸ்லோகம் சொல்லி தங்க நாணயம் அல்லது தங்க ஆபரணத்தை சிரஸில் வைத்துக்கொள்ள வேண்டும்.ஸுவர்ணம் பாவநம் ந்ரூணாம் செளபாக்யகரம் உத்தமம்..

    அகமர்ஷண மந்திரங்கள் சொல்லிக்கொண்டே கும்ப ஜலத்தால் யஜமான தம்பதியினருக்கு அபிஷேகம் செய்திடுக.

    அபிஷேகத்தின் போது உடுத்தியிருந்த நனைந்துவிட்ட ஈர வஸ்த்ரங்களை தானம் செய்து விடுக. ((ஆர்த்ர வஸ்த்ர தானம்))

    புத்தாடை அணிந்து , நெற்றிக்கு இட்டுக்கொண்டு யஜமான தம்பதி
    யினர் அடுத்த நிகழ்ச்சிகளுக்கு தயாராக வேன்டும்.

    ஆசார்யனுக்கு ப்ரதான ப்ரதிமையும் மற்ற ருத்விக்குகளுக்கு ந்யாயப்படியான ப்ரதிமை/மாற்றுப் பொருட்களை வழங்கிட வேண்டும்.

    விருப்பப்படி தானங்கள் செய்யவும். தச தானம், பஞ்ச தானம் ,பல தானம் செய்யவும்.

    யஜமானரால் பத்னிக்கு திருமாங்கல்ய தாரணம் செய்விக்கவும். சாந்தி ரத்னாகரம் என்ற பழய புத்தகத்தில் திருமாங்கல்ய தாரணம் சொல்ல பட வில்லை, அடுத்து வந்த ஷாந்தி குஸுமாகரம் புத்தகத்தில் உள்ளது. பிற் காலத்தில் வந்த பழக்கமாக இருக்கலாம் என்பது சிலரது கருத்து.

    ப்ராஹ்மணர்களுக்கு அறுசுவை போஜனம், பக்*ஷணம், தக்*ஷினை தரவும். ஆசிர்வாத மந்திரங்கள்/வாக்யங்கள் கூறி வாழ்த்திட சொல்லவும்.

    இவ்வாறு செய்வதால் பல்லாண்டுகள் புத்ர பெளத்ராதியரோடு சேர்ந்து வாழும் பாக்கியம் கிட்டும். அனைத்து துரதிஷ்டங்களும் விலகும். பாக்கியங்கள் பெருகும்.

    இந்த உத்தம கல்பம் செய்ய வசதி இல்லாதவர்கள் 33 கலசம் வைத்து மத்திம கல்பம் பூஜை; ஹோமம்; தாநம் செய்யவும். இதுவும் முடியாதவர்கள்
    12 கலசம் வைத்து பூஜை ஹோமம்,தாநம் செய்யவும். இத்ற்கும் வசதி இல்லாதவர்கள் 9 கலசம் வைத்து பூஜை ஹோமம் தாநம் செய்யலாம்.. கருமி தனத்தினால் கீழான் கல்பங்களை அநுஷ்டித்தால் பலனில்லை. இவ்வாறுசெளநக முனிவர். கூறி உள்ளார்.









    .

    .
Working...
X