Announcement

Collapse
No announcement yet.

மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன?

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன?



    எப்போதும் சிரித்த முகம்.

    மாமியாரை தாயாக மதிக்க வேண்டும்.

    காலையில் முன் எழுந்திருத்தல்.

    பள்ளி அலுவலக நேரம் தெரிந்து அதற்குமுன் உணவு தயாரித்தல்.

    நேரம் பாராது உபசரித்தல்.

    கணவன் வீட்டாரிடையே அனுசரித்துப் போக வேண்டும்.

    எதற்கெடுத்தாலும் ஆண்களைக் குறை சொல்லக் கூடாது.

    அதிகாரம் பண்ணக் கூடாது.

    குடும்ப ஒற்றுமைக்கு உழைக்க வேண்டும். அண்ணன், தம்பி பிரிப்பு கூடாது.

    கணவன் குறைகளை வெளியே சொல்லக்கூடாது. அன்பால் திருத்த வேண்டும்.

    கணவனை சந்தேகப்படக் கூடாது.

    குடும்பச் சிக்கல்களை வெளியே சொல்லக் கூடாது.

    பக்கத்து வீடுகளில் அரட்டை அடிப்பதைக் குறைக்க வேண்டும்.

    வீட்டுக்கு வந்தவுடன், சாப்பிடும் போது சிக்கல்கள் குறித்துப் பேசக் கூடாது.

    கணவர் வழி உறவினர்களையும் நன்கு உபசரிக்க வேண்டும்.

    இருப்பதில் திருப்தி அடைய வேண்டும்.

    அளவுக்கு மீறிய ஆசை கூடாது.

    குழந்தை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.

    கொடுக்கும் பணத்தில் சீராகக் குடும்பம் நடத்த வேண்டும்.

    கணவரிடம் சொல்லாமல் கணவரின் சட்டைப் பையிலிருக்கும் பணத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது.

    தேவைகளை முன் கூட்டியே சொல்ல வேண்டும்.

    எதிர்காலத் திட்டங்களைச் சிந்திக்கும் போது ஒத்து ழைக்க வேண்டும்.

    தினமும் நடந்ததை இரவில் சொல்ல வேண்டும்.

    தாய் வீட்டில் கணவரை குற்றம் சொன்னால் மறுத்துப் பேச வேண்டும்.

    அடக்கம், பணிவு தேவை. கணவர் விருப்பத்துக்கு ஏற்றாற் போல் ஆடை, அலங்காரம் செய்ய வேண்டும்.

    குழந்தையைக் கண்டிக்கும் போது எதிர்வாதம் கூடாது.

    சுவையாகச் சமைத்து, அன்புடன் பரிமாற வேண்டும்.

    கணவர் வீட்டுக்கு வரும் போது நல்ல தோற்றம் இருக்கும் படி வீட்டை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

    உரையாடலில் தெளிவாகப் பேசுவதுடன், பொருத்தமான முறையில் எடுத்துரைக்கும் விதமும் தெரிய வேண்டும்.

    தேவையற்றதை வாங்கிப் பண முடக்கம் செய்யக் கூடாது.

    உடம்பை சிலிம் ஆக வைத்துக் கொள்ள வேண்டும்.

    இந்த எதிர்பார்ப்புக்கள் ஒவ்வொன்றையும் மனைவி பின்பற்றும் பட்சத்தில் அந்தக் குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. மனைவியின் எதிர்பார்ப்புக்கள் எல்லாம் தானாகவே நிறைவேறும். பின்பற்றித்தான் பாருங்களே உங்களுக்கே எல்லாம் புரியும். ?

    எல்லாம் சரிதான் ஆனால் இது ஒரு வழிப் பாதையாக அல்லவா அமைந்துள்ளது. கணவன் மனைவி இடமும் மனைவியின் உறவு காரர் களிடமும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை. எனெவே இது ஒரு வழிப் பாதையாக உள்ளது. இது ஆண் ஆதிக்கத்தைத்தான் காட்டுகிறது.
    டி ஆர் கிருஷ்ணன்

  • #2
    Re: மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன?

    நல்ல ஒரு பதிவு; பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. ஆனால், இது ஏன் “ஒரு வழிப்பாதையாக” இருக்க வேண்டும்? ஒரு மனைவி தன் கணவனிடம் எதிர்பார்ப்பது என்ன என்பதையும் யாராவது எழுதுவார்களா?

    Comment


    • #3
      Re: மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன?

      நன்றாகச் சொன்னீர்கள்,
      அடியேனுக்கும் இதுதான் தோன்றியது.
      ஒரு கணவனுடைய அல்ல, இறைவனுடைய எதிர்பார்பின்படியே கூட மனிதர்களால் நடந்துகொள்ள முடியாதுதான்.
      அதற்காக இதை ஒருவழிப்பாதையாக அறிவிப்பதா?
      அடியேனுக்கு ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது.
      ஒரு நல்ல ஆசாரமான வைஷ்ணவர்.
      அவர் பிள்ளை ஒரு பெண்ணை (நல்ல வேளையாக ஒரு ஐயங்கார் பெண்ணை) காதலித்து ஆனால் வைதீக முறைப்படி திருமணம் செய்துகொண்டான்.
      அந்தப்பெண்ணை அந்த பெரியவர் அவள் எப்படி இருந்தாலும் எதுவும் சொல்வதில்லை.
      காரணம் பிள்ளை மனம் கஷ்டப்படப்போகிறதே. இதனால் குடும்பத்தில் பிரிவு வந்துவிடப்போகிறதே என்கிற ஜாக்ரதை உணர்வு.
      ஏதோ காரணமாக ஒரு சிறு ப்ரச்சினை வந்தபோது அந்த பெரியவர் அந்தப் பெண்ணிடம் கூறினார்:
      "ஏனம்மா, நீ எப்டி இருந்தாலும் நான் ஒன்றும் சொல்வதில்லையே,
      உன்னை ஏன் சுடிதார் போடுகிறாய்,
      ஏன் மடிசார் உடுத்தவில்லை என்றெல்லாம் ஏதாவது என்றைக்காவது கேட்டிருக்கிறேனா?
      அப்படி இருக்கும்போது இன்னும் என்னிடம் என்ன எதிர்பார்கிறாய், நான் எப்படி நடந்துகொள்ளவேண்டும்" என்று,
      அதற்கு அந்தப் பெண் கூறினாள்:
      "ஓகோ அப்படியெல்லாம் கூட ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது போலிருக்கிறது"?!
      என்றாள்.
      ஆக "மனத்துக்கண் மாசிலன் ஆதலன்" என்று வள்ளுவர் சொன்னதுபோல்
      பெண்களிடம் இயற்கையாக இருக்கவேண்டியவற்றை
      மனத்தளவில்கூட எதிர்பார்க்கக்கூடாது என்று எண்ணுகிறார்கள்.
      இப்படி ஏதாவது கூறினால் உடனே "ஆணாதிக்க மனப்பான்மை" என்று ஒரு போடு போட்டு நசுக்கிவிடுவார்கள்.
      தயவுசெய்து இதை உங்களுடன் வைத்துக்கொள்ளுங்கள், யாரிடமும் சொல்லிவிடாதீர்கள்.
      நன்றி.


      Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
      please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
      Encourage your friends to become member of this forum.
      Best Wishes and Best Regards,
      Dr.NVS

      Comment


      • #4
        Re: மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன?

        Thanks TRK
        Same way you could have written 'Kanavanidam Manaivi edhipaarppadhu enna' also !
        greetings

        Comment

        Working...
        X