Announcement

Collapse
No announcement yet.

உபநயனம்_ ப்ரதிசரபந்தம்-பரிஷேசனம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • உபநயனம்_ ப்ரதிசரபந்தம்-பரிஷேசனம்

    ஸர்வ காமனைகளையும் பூர்த்தி செய்து வைக்கும் திக்கு பாலகர்களை நமஸ்கரிக்கிறேன்.அவர்கள் கர்மாவை மங்களமாக செய்யட்டும்.

    அங்குர அர்ப்பனம் என்பது முளைக்க விடுதல் என அர்த்தம். பாலி என்ற சொல்லுக்கு lap அல்லது bosom என்றொரு பொருள். கருவுரும் தான்ய வித்துக்களை தன் மடியில் தாங்கும் சாதனத்துக்கு ( மண் சட்டிக்கு) பாலிகை என்று பெயர்..

    பாலி; என்ற சொல்லுக்கு ( மரங்களின் ) வரிசை என்றொரு பொருளும் உண்டு. எனவே வரிசையாக ஆற்றங்கறை அல்லது குளத்தங்கறை பக்கம் வளர்வதை வகை செய்வது இந்த பாலிகை தெளித்தல் நிகழ்ச்சி வகை செய்கிறது.


    ஐந்து பாலிகை சட்டிகளை சுத்த நீரில் நனைத்து சுத்தி செய்யவும். நான் செய்யும் கர்மா சுபமாகவும் ,பயனுள்ளதாகவும் செய்தறுளுiங்கள் என ப்ரார்தனை. ஓஷதிகள் என்பவை உயிர் காக்கும் தாவரங்கள்.

    அவற்றின் விதைகள் தேவதைகளின் ஸாந்நித்யம் உள்ள பாலிகைகளில் மந்திரங்களுடன் தூவப்படுகின்றன, உயிர் காக்கும் தாவரங்கள் மனிதர்களுக்கு சாப்பிடும் பொருளை அளிப்பதாலும் பல வித வியாதிகளை அழிக்கும்

    மூலிகைகளாக இருப்பதாலும் பசி யை போகுவதாலும், அவை தாயின் ஸ்தானத்தில் வைத்து வணங்க படுகிறது. ஓஷதிகளுக்கு அதிபதி ஸோமன். அவர் உள்ளிட்ட தேவதைகளை வணங்கி அவர்களது அருளை பெறுவதே அங்குரார்பண நிகழ்ச்சியின் உட்கருத்து.,



    ரக்ஷா பந்தனம்=ப்ரதிஸர பந்தம்.

    அனுக்ஞை, விக்னேச்வர பூஜைசெய்து ஸங்கல்பம். சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்புஜம். ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உபசாந்தயே. ப்ராணாயாமம் மமோ பாத்த ஸமஸ்த

    துரிதயக்ஷத்துவாரா ஶ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் அத்ய பூர்வோக்த ஏவங்குண சகல விசேஷண விசிஷ்டாயாம் அஸ்யாம் --------சுபதிதெள --------

    -நக்ஷத்ரே-------ராசெள ஜாதஸ்ய------------சர்மண: மம குமாரஸ்ய . உபனயன கர்ம பூத ரக்ஷா பந்தன கர்ம கரிஷ்யே. க்ரஹ ப்ரீதி தானம் ச கரிஷ்யே. அப உபஸ் பர்சியா..ஜலம் தொடவும்.கலசம் ஸ்தாபனம்.

    உதக சாந்தியும் ப்ரதிஸர பந்தமும் செய்யும் போது பெரிய உதக சாந்தி கும்பம் இருக்கும் இடத்திற்கு வடக்கில் கீழே பச்சரிசியை பரப்பி அதன் மேல்

    சிறிய பித்தளை சொம்பு வைக்கவும்..உதக சாந்தி கும்பத்திற்கு அலங்காரம் செய்யும் போது இதற்கும் சேர்த்து செய்து விடவும்.

    ப்ரதிசர பந்தம் தனியாக செய்யும் போது கலச அலங்காரம் வருண ஆவாஹன பூஜை செய்யவும்.
    வருணன் ஆவாஹனம். இமம் மே வருண;++++. ஆவாஹனம் பூஜை நிவேதனம் வரை செய்யவும்.

    கலசத்திற்கு வடக்கே வெண்கல பாத்ரத்தில் அரிசியை வைத்து அதன் மீது பஞ்சினால் நூற்ற நூலை ஒன்பது மடிப்பாக மடித்து முறுக்கி மஞ்சள் பூசி சந்தனம் பூசி தாம்பூலத்துடன் வைக்க வேன்டும்.

    அஸ்மின் ப்ரதிஸர மந்த்ர கர்மணி ருத்விஜம் த்வாம் வ்ருணே. என நான்கு ப்ராஹ்மணர்களுக்கு அக்ஷதையை போட்டு ஜபம் செய்ய வரிக்க வேன்டும் அந்த ரித்விக்குகளுடன் கும்பத்தை தர்பையால் தொட்டு கொன்டு காயத்ரியை பதம் பதமாகவும்

    பாதமாகவும், கூறி நான்கு வேதங்களின் ஆதியையும் க்ருணுஷ்வ பாஜ என்ற அனுவாகத்தயும் அக்னே யசஸ்வின் என்ற நான்கு ருக்குகளையும் ததிக்ராவிண்ணா, ஆபோஹிஷ்டா, ஹிரண்யவர்ணா, பவமான, வருண

    ஸூக்தம், ருத்ர ஸுக்தம், ப்ருஹ்ம ஸூக்தம், விஷ்ணு ஸூக்தம், துர்கா ஸூக்தம், ஶ்ரீ ஸூக்தம், முதலியவைகளையும் நமோ ப்ருஹ்மணே என்பதையும் மூன்று முறை ஜபித்து வருணனை யதா ஸ்தானம் செய்ய

    வேண்டும்.ப்ரணவத்தை கூறி ,கும்பத்தை எடுத்து , ஸுரபிமதி மந்திரத்தாலும்
    அப்லிங்காபி மந்திரத்தாலும் ஸூத்ரத்தை ப்ரோக்ஷிக்க வேண்டும், இந்த மந்திரங்கள் நமது பீடைகளை அகற்றி நம்மை சுத்தமாக்கி நன்மையை தரும்.

    ப்ரதிஸர ஸூத்ரத்தை எடுத்து இடது கை கட்டை விரல், மோதிர விரல்களால் அடியை பிடித்துக்கொண்டு வாஸுகியை மனதால் நினைக்க வேண்டும். வலது கை கட்டை விரல் மோதிர விரல்களால் விபூதியை அடி
    முதல் நுனி வரை த்ரயம்பகம் என்ற மந்திரத்தை கூறி ஒரு முறையும் மந்திரம் இல்லாமல் இரு முறையும் மேல் நோக்கி தடவ வேண்டும்.

    இரு கைகளிலும் அரிசியை நிரப்பி அதன் மீது பழத்தையும் அந்த ஸூத்ரத்தையும் வைத்து , அக்னிராயுஷ்மான் என்ற ஐந்து பர்யாயங்களால் மந்தரித்து , க்ரஹ ப்ரீதி செய்ய வேண்டும் .பிறகு மாணவனின் வலது கையில் ப்ருஹத்ஸாம என்ற மந்திரத்தை கூறி கட்ட வேண்டும்.\\

    வீபூதியால் யோப்ருஹ்மா என்ற க்ருதசூக்ததால் ( ஆயுஷ்ய ஸூக்தம்)) ரக்ஷை செய்ய வேண்டும், பிறகு ப்ராஹ்மணர்களுக்கும் ஆசார்யருக்கும் தக்ஷிணை தர வேன்டும்
    ,.
    ப்ரதிஸர: என்பது கை—மனிக்கட்டில் உள்ளங்கைக்கு மிக அருகாமையில் அணியப்படுவது. அத்தகையதொரு (நூல்கயிறு) சரடை கங்கணமாக கட்டும் நிகழ்ச்சியே ப்ரதிஸரபந்தம்.. இந்த கங்கணம் அணிந்திருப்பவரை

    ரக்ஷிப்பதற்காக கட்டுவதால் ரக்ஷை ஆகிறது.ஆதலால் இந்த நிகழ்ச்சிக்கு ரக்ஷா பந்தனம் என்று பெயர்.
    நடக்க இருக்கும் சுப காரியத்தின் ஆரம்பத்திலிருந்து முடியும் வரை எவ்விதமான தோஷங்களும், ரோகங்களும்,கஷ்டங்களும், தீட்டும் அனுகாதவாறு ரக்ஷிப்பதால் ரக்ஷா பந்தனம் எனப்படுகிறது.

    பரிசேஷனம்:--
    பரிஷேசனம்.:சாப்பிட உட்கார்ந்தவுடன் , இலையில் எல்லா பதார்தங்கலையும் பரிமாறி, அன்னம் வைக்கும் சமயத்தில் அன்னத்திற்கு கை கூப்பி வணங்கிவிட்டு, வலது கையால் இலையை பிடிதுக்கொண்டு, அன்னம்

    வைத்த பிறகு , இடது கையால் இலையை தொட்டுக்கொண்டு , வலது கையில் தீர்த்த்தை எடுத்து , ஓம் பூர்புவஸுவ: என்று ப்ரதக்ஷிணமாக தீர்த்தம் முற்றிலும் தரையில் விழும்படி இலையை சுற்றவும்.

    பிறகு கொஞ்சம் தீர்த்தம் எடுத்து , தத்ஸ விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீ மஹி தியோ யோனஹ ப்ரசோதயாத் என்று சொல்லி ஷ அன்னத்தை ப்ரோக்ஷிக்கவும். மறுபடியும் தீர்தத்தை எடுத்து தேவஸவித: ப்ரஸுவ: என்று சுற்றவும்.

    அன்னத்தின் மீது நெய் விட்ட பிறகு , கொஞ்சம் தீர்த்தம் எடுத்து , ஸத்யம் த்வர்தேன பரிஷிஞ்சாமி என்று பகலிலும் ருதம் த்வா ஸத்யேந பரிஷிஞ்சாமி
    என்று ராத்ரியிலும் இலையை சுற்றி தரையில் விடவும்.

    பிறகு உளுந்து முழுக க்கூடிய அளவுள்ள தீர்தத்தை கையில் எடுத்து அம்ருதோ பஸ் தரணமஸி என்று சொல்லி உட்கொள்ளவும்.

    பிறகு மூன்று விரல் அளவில் கொஞ்சம் கொஞ்சமாக அன்னத்தை கீழ் கண்ட மந்திரங்களை சொல்லி பற்களில் படாமல் 6 தடவை விழுங்க வேண்டியது.

    மந்திரம்:-- ப்ராணாய ஸ்வாஹா. அபாநாய ஸ்வாஹா. வ்யாநாய ஸ்வாஹா. உதாநாய ஸ்வாஹா. ஸமாநாய ஸ்வாஹா. ப்ருஹ்மணே ஸ்வாஹா.

    பிறகு வலது கையால் இலையை பிடித்துக்கொண்டு இடது கையைத் தீர்தத்தினால் சுத்தி செய்து இடது கையினால் மார்பை தொட்டு ப்ருஹ்மணி மே ஆத்மா அம்ருதத்வாய என்று சொல்லிவிட்டு , இடது கையை சுத்தம் செய்து கொள்க.

    சாப்பிட்ட பிறகு , முன் போல் கொஞ்சம் தீர்தத்தை பிறரைக்கொண்டு கையில் போடச்செய்து அம்ருதா பிதா நமஸி என்று சொல்லி உட்கொள்ளவும்.
Working...
X