PDA

View Full Version : 6. திரு வேங்கட மாலை 066/104 : வேங்கடமே அருளும் நம் Ī



sridharv1946
20-01-2014, 07:33 PM
6. திரு வேங்கட மாலை 066/104 : வேங்கடமே அருளும் நம் பரம ஆகாயத்தார் நாடு!

மாதர் அம் பொன் மேனி வடிவும் , அவர் குறங்கும்
மீது அரம்பையைப் பழிக்கும் வேங்கடமே - பூதம் ஐந்தின்
பம்பரமாகாயத்தார் , பாடினால் வீடு அருளும்
நம்பரமாகாயத்தார் நாடு

பதவுரை :

பம்பரமாகாயத்தார் - பம்பர + மா + காயத்தார்
நம்பரமாகாயத்தார் - நம் + பரம + ஆகாயத்தார்

மாதர் அம் பொன் மேனி வடிவும் மகளிரது அழகிய பொன் நிறமான உடல்
மீது அரம்பையைப் பழிக்கும் தேவ மாதாவான ரம்பையை இழிவு செய்யும் இடமும்
அவர் குறங்கும் அம மகளிரது தொடைகள்
மீது அரம்பையைப் பழிக்கும் செழித்த வாழைத் தண்டை
வெல்லும் இடமும் ஆன
வேங்கடமே திரு வேங்கட மலையே
பூதம் ஐந்தின் பஞ்ச பூதங்களால் ஆன
பம்பர சுழலும் பம்பரம் போல விரைவில் நிலை மாறும்
மா காயத்தார் பெரிய உடம்பை உடைய மக்கள்
பாடினால் வீடு அருளும் துதித்தால் முக்தி அளிக்கும்
நம் பரம ஆகாயத்தார் நமது பரம பதத்தை உடைய திருமாலின்
நாடு ஊர் ஆகும்

V.Sridhar