PDA

View Full Version : 6. திரு வேங்கட மாலை 089/104 : வேங்கடமே வரை நல் குடைī



sridharv1946
09-02-2014, 07:54 PM
6. திரு வேங்கட மாலை 089/104 : வேங்கடமே வரை நல் குடையார் வாழ்வு !



பாம்பும் , குளிர் சந்தின் பக்கத்தில் நிற்கின்ற
வேம்பும் , மருத்துவக்கும் வேங்கடமே - காம்புகரம்
ஆனவரை நன்குடையார் , ஆளாய்த் தொழுது ஏத்தும்
மானவரை நன்குடையார் வாழ்வு


பதவுரை



ஆனவரை நன்குடையார் - ஆன + வரை + நல் + குடையார்
மானவரை நன்குடையார் - மானவரை + நன்கு + உடையார்



பாம்பும் பாம்புகள்
மருத்து உவக்கும் காற்றை விரும்பி உண்ணும் இடமும் ,
குளிர் சந்தின் குளிர்ந்த சந்தன மரங்களின்
பக்கத்தில் நிற்கின்ற வேம்பும் அருகில் இருப்பதால் , வேப்ப மரங்கள்
மரு துவக்கும் நல்ல மணம் வீசத் தொடங்கும் இடமுமான
வேங்கடமே திரு வேங்கட மலையே
கரம் காம்பு ஆன தனது கரத்தினை காம்பாகக் கொண்ட
வரை நல் குடையார் கோவர்த்தன கிரியை குடையாகக் கொண்டவரும் ,
ஆளாய்த் தொழுது ஏத்தும் அன்பராய் வணங்கித் துதிக்கும்
மானவரை நன்கு உடையார் மனிதர்களை அதிகமாக உடையவருமான திருமாலின்
வாழ்வு வாழுமிடம் ஆகும்

V.Sridhar