PDA

View Full Version : குழந்தைகள்P.S.NARASIMHAN
25-02-2014, 04:03 PM
*குழந்தைகள் கிறுக்கிடும்
வெள்ளைத்தாள்களை
உற்றுப் பாருங்கள் நன்றாக !
கிடைத்திடும்
உங்களுக்கோர் ஓவியம்
கிறுக்கல்கள் வழியே !http://www.tamilbrahmins.com/images/smilies/popcorn.gif

P.S.NARASIMHAN
25-02-2014, 04:04 PM
குங்குமம் இட்டுக் கொள்வது எதற்காக. . .?
1. சுமங்கலிப்பெண்களின் தலை வகிட்டின் நுனியை சீமந்த பிரதேசம் என்பார்கள். அம்பிகையின் வகிட்டில் உள்ள குங்குமம் பக்தர்களுக்கு சேமத்தைக்
கொடுக்கும்.
2. சுமங்கலிப் பெண்களின் சீமந்த பிரதேசம் ஸ்ரீமகாலட்சுமியின் இருப்பிடம் சுமங்கலிகளின் சக்தி குங்குமத்தில் உள்ளது. 3. வீட்டிற்கு வரும்
சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது, தருபவர் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தைப் பெருக்கும்.
4. குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கும். குங்குமம் அணிந்த எவரையும் வசியம் செய்வது கடினம்.
5. பெண்கள் குங்குமத்தை தான் இட்டுக் கொண்ட பின்பு தான் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.
6. அரக்கு நிற குங்குமம் சிவசக்தியை ஒரு சேரக் குறிப்பதாகும். திருமணப்புடவை அரக்கு நிறத்தில் இருப்பது நல்லது.
7. தெய்வீகத்தன்மை, சுபதன்மை, மருத்துவத்தன்மை உள்ள குங்குமம் அணிவதால் முகம், உடல் மற்றும் மனம் ஆகியவைகளுக்கு அதிக நன்மைகள்
உண்டாகும்.
8. திருமணமான பெண்கள் நெற்றி நடுவிலும் வகிட்டின் தொடக்கத்திலும் குங்குமம் அணிவது சிறப்பு.
9. ஆண்கள் இருபுருவங்களையும் இணைத்தாற் போல் குங்குமம் அணிவது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.
10. கட்டைவிரலால் குங்குமம் இட்டுக் கொள்வது மிகுந்த துணிவைக் கொடுக்கும்.
11.குருவிரலால் (ஆள்காட்டி விரல்) குங்குமம் அணிவது முன்னனித்தன்மை, நிர்வாகம், ஆளுமை போன்றவற்றை ஊக்குவிக்கும்.
12. சனிவிரல் (நடுவிரல்) குங்குமம் இட்டுக் கொள்வது தீர்காயுளைக் கொடுக்கும். குங்குமம் அணிவது தெய்வீக தன்மை, உடல் குளிர்ச்சி மற்றும்
சுயக் கட்டுபாட்டிற்கு நல்லது.

http://www.tamilbrahmins.com/images/smilies/violin.gif

P.S.NARASIMHAN
25-02-2014, 04:05 PM
அம்மாவின் மடியிலோர் குட்டித்
தூக்கம்
நீடிக்க விடாத வேகத் தடை
நின்று கொண்டே பேருந்தில்
பயணம் ...!http://www.tamilbrahmins.com/images/smilies/popcorn.gif

P.S.NARASIMHAN
25-02-2014, 04:05 PM
திருமணத்துக்கோ வேறு சுபகாரியத்துக்கோ
செல்லும்
போது ...ஏமாற்றுவதற்காக ..
ஒன்றுமே இல்லாத
ஒரு பெட்டியை அழகாக சுற்றி
அழகாக
கொடுப்பது வேடிக்கைக்கு மட்டும்
அல்ல
என் நிலையும் அதுதான்
நண்பனே ....!

P.S.NARASIMHAN
25-02-2014, 04:06 PM
உன் வாழ்க்கையில் பலரின்
வருகை மகிழ்ச்சியை தரலாம் ....
ஆனால்
எந்த ஒருவரின் வருகையால் ...உன்
வாழ்கை முழுமை அடைந்ததாய் நீ
உணர்கிரையோ ..
அவளே உன் உயிர் தோழி ..http://www.tamilbrahmins.com/images/smilies/laugh.gif

P.S.NARASIMHAN
25-02-2014, 04:07 PM
இருபது
வயதில்
வருவதல்ல
காதல்....அது
எழுபது
எண்பது வயதையும்
தாண்டி தொடர்வதே
காதல்...!http://www.tamilbrahmins.com/images/smilies/clock.gif


என்னவளுக்கும் அழகிற்கும்
ஒரே ஒரு வித்தியாசம் தான்
அவள் அழகை விடக் கொஞ்சம்
அழகானவள்...!http://www.tamilbrahmins.com/images/smilies/yo.gif


இறுதியில் நமக்காக அழ யாரும்
இல்லா இடத்தில் கிடைக்கும்
சொர்கத்தை விட
நமக்காக துடிக்கும் உறவுகள்
வாழும் இடம் நரகமாயினும்
சொர்கமே....http://www.tamilbrahmins.com/images/smilies/cheer2.gif

P.S.NARASIMHAN
25-02-2014, 04:08 PM
இன்றைய காதல் என்பது,
அழகானவர்களை பார்த்த
உடனேயே வருவதாக
இருக்கிறது.... அவள்/ன்
கல்யாணம் ஆனவரா என்பதில்
யாருக்கும் பிரச்சினை இல்லை..
இதுக்கு பேர் காதலாம்...http://www.tamilbrahmins.com/images/smilies/bump.gif

P.S.NARASIMHAN
25-02-2014, 04:09 PM
ஒரு நொடி துணிந்தால்
இறந்துவிடலாம்..
ஒவ்வொரு நொடியும்
துணிந்தால்....
நாம் ஜெயித்து விடலாம்....http://www.tamilbrahmins.com/images/smilies/kiss.gif

P.S.NARASIMHAN
25-02-2014, 04:10 PM
சுலபமான எண்ணங்கள்
கடினமான வாழ்க்கை
நினைவுகள் நினைக்க மட்டும்
தான்
கனவுகளை கையில் ஏந்த
முடியாதுhttp://www.tamilbrahmins.com/images/smilies/faint.gif

P.S.NARASIMHAN
25-02-2014, 04:11 PM
வரதட்சணை http://www.tamilbrahmins.com/images/smilies/washing.gif

வரதட்சணை வாங்கி கொண்டிருக்கும் வாலிபர்களே ..!
அதன் விளைவை விவரிக்கிறேன்..
ஏழை வீட்டில் பிறக்கும் பெண் குழந்தைகள் கருவறையை விட்டு இறங்கியவுடன் கல்லறைக்கு அனுப்படுகிறது..
மணவறை ஏற நீங்கள் கேட்கும் விலைக்கு பயந்து..http://www.tamilbrahmins.com/images/smilies/washing.gif

P.S.NARASIMHAN
25-02-2014, 04:13 PM
மகனே ! இது தந்தையின் தவிப்பு

மகனே !
சொல்லால் எனை வதைக்காதே
சொல்லிவிடு பாரம் என்று
சொல்லாமல் போய் விடுகிறேன்
வெகு தூரம் !

சாடையில் எனை சாடாதே
பாடையில் எனை அனுப்ப நேரம் தேடாதே !
பனை வெட்டி உன்னை பள்ளிக்கு
அனுப்பினேன் !
கல் சுமந்து உன்னை கல்லூரிக்கு
அனுப்பினேன் !

என் பெயரோ இனியன்
நீ எனக்கு கொடுக்கும்
பட்டமோ சனியன் !

மூச்சுமுட்ட மூணு வேளைக்கு
நல்லா திங்க தெரியுது
ஆனால் வேலை செய்ய
முடியலையோ என்கிறாயே !

மகனே
வேலை செய்ய உள்ளம் ஒத்துழைக்கிறது
ஆனால்
உடல் ஒத்துழையாமை இயக்கம் நடத்துகிறதே
அதற்கு நீ போடாதே
பகல் வேஷம் என்கிறாயே
நான் மட்டுமா வேஷம் போடுகிறேன்
வாழ்கையே ஒரு வேசம்தானடா
நீயும்தான் போடுகிறாய்
பாசம் என்னும் வேஷம் !

பரவாயில்லை ,
இறைவனிடம் ஒன்று
உனக்காக வேண்டி கொள்கிறேன்
உனது முதுமை காலத்தில்
எனது இந்நிலை வராமல்
காத்திட எல்லாம் வல்ல
இறைவனை வேண்டிகொள்கிறேன்
நான் என்ன செய்வேன் !

P.S.NARASIMHAN
25-02-2014, 04:14 PM
விரிசல்...விதையின் விரிசலில்தான்
வெளிவருகிறது
முளை..

உறவின் விரிசலில்தான்
வெளிவருகிறது
உண்மை பாசம்...!

P.S.NARASIMHAN
25-02-2014, 04:15 PM
கணவன்-மனைவி

டாக்டர் கணவன் உடம்பை சோதித்துவிட்டு - "இன்னும் 8 மணி நேரம் தான் நீங்கள் உயிரோடு இருப்பீர்கள், அதற்குள் உங்களுக்கு பிடித்தமான விஷயங்கள் எல்லாத்தையும் செஞ்சிக்குங்க...."

மாலை 5 மணி : கண்ணீர் மல்க விஷயத்தை மனைவியிடம் பகிர்ந்தான் கணவன். துடித்தாள் அவள்.

எனக்கு உன் கையால வெங்காய தோசையும், கட்டி சட்னியும் செஞ்சி குடும்மா, இன்னும் 7 மணி நேரம் தான் பாக்கியிருக்கு....

மாலை 7 மணி : ராத்திரி சாப்பாட்டுக்கு மீன் குழம்பு வச்சி குடும்மா, இன்னும் 5 மணி நேரம் தான் நான் இருப்பேன்...

இரவு 10 மணி : நல்ல பசும்பால்ல, உங்கையால சொஞ்சமா சக்கர போட்டு எனக்கு குடும்மா..இன்னும் மூணு மணி நேரம் தான் இருக்கு....!!!

இரவு 12 மணி : தூங்கும் மனைவியை எழுப்புகிறான்.

அவள் : பேசாம படுங்க...காலைல எழுந்தவுடன் ஆயிரம் வேல இருக்கு. சொந்தகாரங்களுக்கு சொல்லி அனுப்பனும், ஐயருக்கு ஏற்பாடு பண்ணனும், சுடுகாட்ல புக் பண்ணனும்.....
உங்களுக்கு காலைல எழுந்திருக்கிற வேலை கூட இல்ல.....!!!

soundararajan50
25-02-2014, 06:50 PM
ஸ்வாமின் நீர் எந்த லோகத்தில் இருக்கீர் தற்போது இந்த வரதட்சிணை விஷயமெல்லாம் தலைகீழ் ஆகிவிட்டது. அது சரி உமது ஒவ்வொரு போஸ்டின் முடிவில், ந்டுவில் ஆரம்பத்திலெல்லாம் ஒரு அழகிய படம் வித் மூவ்மெண்ட் போடுகிறீரே அது எப்படி அந்த ரகசியத்தை கொஞ்சம் சொல்லுமே

P.S.NARASIMHAN
26-02-2014, 08:56 AM
ஸ்வாமின் அந்த படங்களெல்லாம் "ஸ்மைலீஷ்". நீர் போஸ்ட் செய்யும் விண்டொவில் மேலே உள்ள டூல் பாரில் மொட்டை தலை பொம்மையில் கிலிக் செய்யும். நிரைய படங்கள் கிடைக்கும். மோர்' என்ற டேபில் கிலிக் செய்தால் மேலும் பல பொம்மைகள் கிடைக்கும். தேவையானதை கிலிக் செய்யவேண்டியதுதான்.:angel:

soundararajan50
27-02-2014, 08:34 PM
:pஎன்ன சார் நீங்க சொன்னத சரியாச் செய்துட்டேனா:dance:

P.S.NARASIMHAN
28-02-2014, 08:13 AM
ஆனாலும் நீங்க ரொம்ப சூடிகை ஸ்வாமின். கர்பூரம் கெட்டது போம். சரி. மற்றொன்று. ஒவ்வொரு போஸ்டிங்க்களிள் வலது பக்கம் கர்சரை கொண்டுபோனால் like என்ற எழுத்து வரும். உங்களுக்கு போஸ்ட் பிடித்துஇருந்தால் அதன் மீது கிலிக் செய்யவும். அதுதான் முக்கியம் எவ்வளவு like கிடைக்குது என்று தெரியும். என்ன செய்கறீற்களா.