Announcement

Collapse
No announcement yet.

காரடையான் நோன்பு-KARADAYAN NONBU

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • காரடையான் நோன்பு-KARADAYAN NONBU

    SIR, PLEASE INFORM ME AT WHAT TIME THE KARAYAN NONBU ON 14TH, MARCH,2014 IS TO BE DONE. PLEASE ALSO REQUEST YOU TO CONFIRM WHETHER PREGNANT LADY CAN PERFORM NONBU?
    KRISH PANCHU
    krishpanch@rediffmail.com
    Last edited by bmbcAdmin; 10-03-14, 22:23.

  • #2
    Re: KARAYAN NONBU

    Sri:


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

    Comment


    • #3
      Re: KARAYAN NONBU

      ஸ்வாமின்,
      எனது இந்தக் கேள்வியை தவறாகஎண்ணவேண்டாம்.சில நாட்களுக்கு முன்னர் எனக்களித்த பதிலில் நமது பரந்தாமன் பஞ்சாங்கப்படி இரவு 9 லிருந்து 10 மணிக்குள் நோன்பு நூற்க எனக்குறிப்பிட்டுள்ளீர் த்ற்போது 830 - 930 (இரவு) என்று குறிப்பிட்டுள்ளீர் எது சரி

      Comment


      • #4
        Re: KARAYAN NONBU

        ஶ்ரீ:
        தவறொன்றும் இல்லை.
        ஶ்ரீபரந்தாமன் பஞ்சாங்கம் கிட்டத்தட்ட 15 மாதங்களுக்கு முன் தயாரிக்கப்பட்டது.
        அப்போது மற்றவர்களின் இதுபற்றிய கருத்து அடியேனுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
        தற்போதும் அடியேனுடைய கருத்துப்படி 10 மணிவரை நோன்பு நோற்கலாம்
        ஆனால் மற்ற சில ஆசார்யர்கள், மடங்கள் ஆகிவற்றிலிருந்து அண்மையில்
        வெளியிடப்பட்டுள்ள தகவல்களின்படி நேரங்கள் சற்று முன்னதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன.
        எனவே மிகுந்த முரண்பாடின்றி இருக்க ஒரு அரை மணிநேரம் நேரத்தில் மாறுதல் செய்து
        தெரிவித்துள்ளேன்.
        விளக்கம் அளிக்க வாய்ப்பளித்தமைக்கு நன்றி!
        தாஸன்,
        என்.வி.எஸ்


        Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
        please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
        Encourage your friends to become member of this forum.
        Best Wishes and Best Regards,
        Dr.NVS

        Comment


        • #5
          Re: KARAYAN NONBU

          THANK YOU SIR.
          KRISH PANCHU

          Comment


          • #6
            Re: காரடையான் நோன்பு-KARADAYAN NONBU

            காரடையான் நோம்பு அடை
            கணவனைக் காக்கும் காரடையான் நோம்பு. மாங்கல்ய பாக்கியம் தரும் மகத்தான வழிபாடு காரடையான் நோன்பு. தன் கணவன் நலமுடனிருக்க சுமங்கலிகளால் கடைப்பிடிக்கப்படும் நோன்பு இது.

            மாசியின் முடிவில் பங்குனியின் துவக்கத் தில் கடைப்பிடிக்கப்படும் இந்த நோன்பு புராண காலத் தொடர்புடையது.

            14.3.2011 அன்று காரடையான் நோன்பு கொண்டாடப்படுகிறது.அன்று வெல்ல அடை,உப்புஅடை என்று இருவகை அடைகள் செய்வது வழக்கம்.

            *************


            காரடையான் நோம்பு அடை

            முதலில் பச்சரிசி அரைகிலோவை அரைமணிநேரம் ஊறவைத்து களைந்து வடித்து காயவைத்து நைசாக அரைத்து சலித்துக்கொள்ளவும்.வாசனை வரும்வரை வறுக்கவும்.

            வெல்ல அடை

            தேவையானவை:

            *வறுத்த பச்சரிசி மாவு 1 கப்
            *காராமணி 1/4 கப்
            *தேங்காய் சிறிய பற்களாக கீரியது அரை கப்
            *வெல்லம் (பொடித்தது) 1 கப்
            *ஏலக்காய் தூள் 1 டீஸ்பூன்
            *தண்ணீர் 2 கப்

            செய்முறை:

            1. காராமணியை வேகவிட்டு வடிய வைக்கவும்.

            2. ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக்கொண்டு இரண்டு கப் தண்ணீர் விட்டு வெல்லத்தைப்போட்டு கொதிக்கவிடவும்.

            3. வெல்லம் நன்றாக கரைந்து தண்ணீர் "தள தள' என்று கொதிக்கும்போது காராமணி,தேங்காய் துண்டுகள்,ஏலப்பொடி சேர்க்கவும்.

            4. வறுத்துவைத்துள்ள மாவை ஒரு கையால் கொட்டிக்கொண்டே மறுகையால் கிளறவும்.
            மாவு நன்றாக வெந்ததும் கையில் லேசாக எண்ணைய் தடவி அதில் இந்த மாவை உருட்டி வைத்து வடைபோல் தட்டி

            5. இட்லி பாத்திரத்தில் வைத்து பத்து நிமிடம் கழித்து எடுக்கவும்.

            உப்பு அடை

            தேவையானவை:

            *வறுத்த பச்சரிசி மாவு 1 கப்
            *காராமணி 1/4 கப்
            *தேங்காய் துண்டுகள் 1/2 கப்
            *தண்ணீர் 2 கப்
            *பொடியாக நறுக்கிய இஞ்சி 1 டேபிள்ஸ்பூன்
            *பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் 1 டேபிள்ஸ்பூன்
            *உப்பு,எண்ணைய் தேவையானது

            தாளிக்க:

            *கடுகு,உளுத்தம்பருப்பு,பெருங்காயம்,கறிவேப்பிலை

            செய்முறை:

            1. காராமணியை வேகவிட்டு வடிய வைக்கவும்.

            2. ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு அதில் சிறிதளவு எண்ணைய் விட்டு தாளிக்க வேண்டியவைகளை தாளித்து இஞ்சி,பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

            3. பின்னர் இரண்டு கப் தண்ணீரை உப்புடன் சேர்த்து கொதிக்கவிடவும்.தண்ணீர் நன்கு கொதித்தவுடன் வெந்த காராமணி,தேங்காய் துண்டுகள் சேர்த்து வறுத்த மாவை
            தூவிக்கொண்டே கிளறவும்.

            4. மாவு நன்றாக வெந்ததும் வடைபோல தட்டி இட்லி தட்டில் வைத்து பத்து நிமிடம் கழித்து எடுக்கவும்

            காரடையான் நோன்பு :
            இந்த நோன்பு சுமங்கலிகளுக்கு தீர்க்க சௌமங்கல்யத்தை அளிப்பதற்காக
            ஏற்பட்டது. தேவியை பிரார்த்தனை செய்து படத்தின் முன்னால் சிறிது இலை/
            தட்டு வைத்து, அதில் அடை சிறிது வெண்ணை, வெற்றிலைப் பாக்கு மஞ்சள்
            கயிறுகளையும் அதில் வைத்து விட வேண்டும். பிறகு கீழ்க்கண்ட ஸ்லோகத்தைச்
            சொல்லி பிரார்த்தனை செய்து ஒரு கயிற்றை அம்பாளின் படத்திற்கு சாத்திவிட்டு
            மற்றதைத் தான் அணிய வேண்டும். பிறகு அம்பாளுக்கு நைவேத்யம் செய்து,
            கற்பூர ஆரத்தி காண்பித்து பூஜையை முடிக்க வேண்டும்.
            மஞ்சள் கயிற்றை கட்டிக் கொள்ளும்பொழுது சொல்ல வேண்டிய ஸ்லோகம்.
            தோரம் கிருஷ்ணாமி சுபகே ஸஹாரித்ரம்
            தராமி அஹம்!பர்த்து:ஆயுஷ்ய
            ஸித்யர்த்தம் ஸுப்ரீதாபவ ஸர்வதா


            Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
            please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
            Encourage your friends to become member of this forum.
            Best Wishes and Best Regards,
            Dr.NVS

            Comment

            Working...
            X