Announcement

Collapse
No announcement yet.

உருளைக்கிழங்கு பொடிமாஸ்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • உருளைக்கிழங்கு பொடிமாஸ்

    தேவையான பொருட்கள்:

    உருளைக்கிழங்கு - 2 - 3
    பச்சை மிளகாய் - 1 - 2 பொடியாக நறுக்கவும்
    இஞ்சி - 1 டீஸ்பூன் துருவியது
    கொத்தமல்லி - 1 டீஸ்பூன்
    உப்பு
    எலுமிச்சை சாறு - 1 டேபிள்ஸ்பூன்

    தாளிக்க :

    கடுகு - 1/2 டேபிள்ஸ்பூன்
    உளுத்தம் பருப்பு - 1 /2 டேபிள்ஸ்பூன்
    கடலை பருப்பு - ½ டேபிள்ஸ்பூன்
    பெருங்காயம் ( பெருங்காயம் ) - ஒரு சிட்டிகை
    மஞ்சள் பொடி - 1/2 ஸ்பூன்
    கருவேப்பிலை - கொஞ்சம்
    எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்

    செய்முறை :

    உருளைக்கிழங்கை மண் போக அலம்பி இரண்டாக நறுக்கவும்.
    குக்கரில் துளி உப்பு போட்டு வேகவைக்கவும்.
    ஆறினதும், தோல் நீக்கவும்; பிறகு நன்கு உதித்து வைக்கவும்.
    ஒரு வாணலி இல் , எண்ணெய் விட்டு கடுகு , உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, மஞ்சள் பொடி போட்டு தாளிக்கவும்.
    கறிவேப்பிலை , பெருங்காயம் , பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்து.
    ஒரு நிமிடம் வதக்கவும்.
    பிறகு உதிர்த்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.
    ஒரு 2 - 3 செகண்ட் கிளறினால் போறும்.
    அதில் கொத்தமல்லி இலை சேர்த்து அணைத்துவிட வேண்டியது தான்.
    கீழே இறக்கி, 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கிளறவும்.
    அற்புதமாக இருக்கும்.
    அவ்வளவுதான், சுவையான 'உருளைக்கிழங்கு பொடிமாஸ்' தயார்.
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart
Working...
X