Announcement

Collapse
No announcement yet.

Vaishnavites do not have "Jadhi Dwesham"?!-Tamil

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Vaishnavites do not have "Jadhi Dwesham"?!-Tamil


    I RECEIVED A MAIL FROM ONE Mr.PERUMAL PILLAI AND I FORWARD IT TO ALL OF YOU.
    T.R.KRISHNAN
    Subject: முதல் கோணல் முற்றிலும் கோணல்
    To: BRINDHA KRISHNAN
    நான் பிள்ளைமார் வகுப்பைச் சேர்ந்தவன். நான் சிறு பையனாக இருந்த பொழுது அடிக்கடி பெருமாள் கோவிலுக்குச் செல்வேன். பெருமாள் மீது எனக்கு மிகுந்த பக்தி உண்டு. காரணம் நாங்கள் பரம்பரை பரம்பரையாக மகாவிஷ்ணுவை பூசிப்பவர்கள். எனது தகப்பனார் பாட்டனார் ஆகியோர்கள் தங்களது நெற்றியில் மிகவும் தடிமனான நாமம் போட்டுக்கொள்வார்கள். அதாவது நாங்கள் வைணவ பிள்ளைமார்கள். ஏன் இந்த முன்னுரை என்றால் நான் கூறும் கருத்தை கேளுங்கள் அப்பொழுதுதான் உங்களுக்குப் புரியும். நான் சிறுவதில் பெருமாள் கோவிலுக்குச் சென்று பெருமாளை வணங்கிவிட்டு அவர்கள் கொடுக்கும் பிரசாதத்திற்காக காத்திருப்பேன். முதலில் அந்தண வகுப்பைச் சேர்ந்த வர்களுக்கு எல்லாம் பிரசாதம் கொடுத்துவிட்டு பிறகுதான் என்னைப்போன்ற அந்தணர் இல்லாத வகுப்பினருக்கு பிரசாதம் கொடுப்பார்கள். அதற்காக தனியாக நிற்கச்சொல்லி அதன்பிறகு தான் பிரசாதம் கொடுப்பார்கள். அப்பொழுது அந்த இளம் வயதில் எனக்கு அது ஒரு அவமானமாகத் தோன்றவில்லை. ஆனால் நாளாக நாளாக எனக்குள் ஒரு கருத்து உருவாக துவங்கியது. அதற்க்குக் காரணம் அதே கோவிலில் நடைபெற்ற ஆன்மீக சொற்பொழிவை நான் கேட்டது தான் காரணம். அந்த ஆன்மீக சொற்பொழிவை உபன்யாசம் என்று அழைப்பார்கள். அதில் ஆழ்வார்கள் பற்றி கூறும் பொழுது திருமங்கை ஆழ்வார் கள்வர் வகுப்பினர் என்றும் திருப்பாணாழ்வார் பாணர் வகுப்பைச் சேர்ந்தவர் என்றும் நம்மாழ்வார் வேளாள வகுப்பைச் சேர்ந்தவர் என்றும் அந்த நம்மாழ்வார் திருவடியைத் தான் சடாரி யாக அனைவரின் தலையிலும் வைப்பதாகவும் எனவே வைணவர்களுக்கு ஜாதி துவேஷம் கிடையாது என்றும் திருமாலின் அடியார்கள் அனைவரும் ஒரே குலம் என்றும் விளக்கம் கூறின அந்த சொற்பொழிவாளர் (உபன்யாசகர்) அதற்க்கு காரணம் தங்களின் குரு ஸ்ரீ ராமானுஜர் என்றும் அவர் ஜாதி வித்தியாசம் பார்த்ததில்லை என்றும் கூறியதுடன் அதற்க்கு விளக்கம் கூறும் வகையில் அவரது வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தையும் கூறினார்கள். அதாவது அந்தணர் அல்லாத ஒரு வைணவ பக்தர் திருக்கச்சி நம்பி என்பவரை தனது இல்லத்திற்கு விருந்திற்கு அழைத்த தாகவும் ஸ்ரீ ராமானுஜர் அவரைத் கூப்பிடுவதற்காக கோவிலுக்குச் சென்றிருந்த பொழுது அந்த திருக்கச்சி நம்பி வேறு வழியாக ஸ்ரீ ராமானுஜரின் இல்லத்திற்கு வந்ததாகவும் ஸ்ரீ ராமானுஜரின் மனைவி அவருக்கு விருந்து அளித்து விட்டு அவர் சென்றபின் அந்த இடத்தை சாணி போட்டு நன்றாக கழுவி விட்டதாகவும் அந்த மகான் திருக்கச்சி நம்பி உண்ட உணவின் மீதி பகுதிகளை எல்லாம் திரட்டி வெளியே எறிந்து விட்டதாகவும் அந்தணர் வகுப்பைச் சேராத ஒருவருக்கு உணவு அளித்தது தீட்டு என்று கருதிய அந்த அம்மையார் தனது கணவர் ஸ்ரீ ராமானுஜர் சாப்பிடு வதற்காக சமையல் கட்டு, அடுப்பு, சமையல் பாத்திரங்கள் எல்லாவற்றையும் பசுஞ்சாணி போட்டு நன்றாக கழுவிவிட்டு தானும் மீண்டும் குளித்துவிட்டு புதிய சமையல் செய்து விட்டதையும் அறிந்த ராமானுஜர் மிகவும் மன வேதனைப்பட்டு தனது மனைவியை மிகவும் கண்டித்ததாகவும் ஒரு வைணவப் பெரியாரான திருக்கச்சி
    நம்பி அவர்களின் உண்ட உணவின் மீதத்தை தான் உண்ண விரும்பியதாகவும் அதனை கெடுத்து விட்ட மனைவியை வீட்டை விட்டு வெளியே போகச்சொல்லி அவளது பிறந்த வீட்டிற்கு அனுப்பிவிட்டதாகவும் அதன் பின் தான் மறுமணம் ஏதும் செய்து கொள்ளாமல் துறவறம் பூண்டு விட்டதாகவும் அந்த சொற்பொழிவில் நான் கேட்டு மிகவும் பூரிப்பு அடைந்தேன். ஒரு அந்தணர் அந்தக்காலத்திலேயே சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு இப்படி செயல் பட்டதை நினைக்கும் பொழுது ஸ்ரீ ராமானுஜரை குருவாக ஏற்றுக்கொண்ட எங்கள் பரம்பரையை நான் பெருமையாகவே நினைக்கிறேன். ஆனாலும் இன்றும் கூட அந்தணர்கள் தங்களது சாதி கர்வத்தில் திளைத்து நிற்கிறார்கள். அந்தணர் அல்லாத ஒரு வைணவ பெரியாரை தங்கள் இல்லத்திற்கு உணவு உண்ண அழைத்து அவர்கள் உண்ட உணவின் மீதியை அந்தணர்கள் சாப்பிட வேண்டும் என்று நான் எதிர் பார்க்கவில்லை. ஆனால் சமபந்தி போஜனம் செய்வதர்க்குக் கூட அவர்கள் தயாராக இல்லை. அதனை தீட்டு என்று இன்றும் நினைக்கிறார்கள். அதற்க்குக் காரணம் என்ன என்று நான் ஆலோசனை செய்த பொழுது அதனைக் குறித்து அவர்கள் இல்லத்து அரசிகளிடம் விவாத்தித்த பொழுது நான் தெரிந்து கொண்ட உண்மை என்னவென்றால் அந்தணர்களின் மனைவி மார்கள் அந்தணர் அல்லாத வகுப்பினருக்கு சமையல் செய்து தங்களது இல்லத்தில் தங்கள் கையால் பரிமாற எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் . அதனை மீறுவதற்கு அந்தண வகுப்பைச் சேர்ந்த எவரும் தயாராக இல்லை என்பது தான் கசப்பான உண்மை. அதற்க்குக் காரணம் என்ன என்று நான் தீவிரமாக ஆலோசித்த பொழுது எனது மூளைக்கு எட்டிய கருத்து இதுதான். ஸ்ரீ ராமானுஜர் தனது மனைவிக்கு தனது கருத்தை, எண்ணத்தை புரிய வைத்து தனது மனைவியையும் தனது வைணவத் தொண்டிற்கு உறுதுணையாக ஆக்கி செயல் பட்டு அதில் அவர் வெற்றி கண்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால் இன்றைய வைணவ அந்தணர்களின் இல்லத்து அரசிகள் தாங்களும் அதனை பின்பற்றி ஸ்ரீ ராமனுஜரின் சிஷ்யை களாக உண்மையிலேயே மாறியிருப்பார்கள். ஆனால் ஸ்ரீ ராமானுஜர் இந்த இடத்தில் தான் பெரும் தவறு செய்து விட்டதாக எனக்குத் தோன்றுகிறது. தனது மனைவியை சீர் திருத்தம் செய்வதற்குப் பதிலாக கோபப்பட்டு மனைவியை பிறந்த வீட்டிற்கு அனுப்பிவிட்டு தான் மட்டிலும் துறவறம் மேற்கொண்டது அவருடைய கையால் ஆகாதத் தன்மையைத் தான் காட்டுகிறது. எனவே அந்த முதற்கோணல் முற்றிலும் கோணலாகிவிட்டது என்றுதான் எனக்கு நினைக்கத் தோன்றுகிறது. என்ன செய்வது? யானைக்கும் அடி சறுக்கும் என்ற பழமொழியை நினைத்து நான் எனக்கு சமாதானம் சொல்லிக்கொள்கிறேன். ஏன் யானை என்று சொல்கிறேன் என்றால் யானை மிகவும் பலம் பொருந்திய ஒரு வன விலங்கு பெரிய பெரிய மரங்களை எல்லாம் தனது தும்பிக்கையால் ஆட்டி அசைத்து கீழே தள்ளி விடும். அதேபோல்தான் ஸ்ரீ ராமானுஜர் தனது புத்தி சாதுரியத்தாலும் மனோ பலத்தாலும்
    காசி காஷ்மீர் போன்ற நகரங்களுக்குச் சென்று வாதத்தில் பல பண்டிதர்களை வென்று தனது ஆழ்ந்த அறிவு என்ற தும்பிக்கையால் பண்டிட்டுகள் என்று அழைக்கப்படும் அந்த ஆல மரங்களை எல்லாம் அசைத்து வீழ்த்தி தனது வைணவ சித்தாந்தத்தை நிலை நிறுத்தினார். மேலும் அந்தக்காலத்திலேயே அவர் ஒரு புரட்சிக் காரராகத் திகழ்ந்தார்.
    அவருடைய முதல் குரு யாதவ பிரகாசர் என்பவர் விசிஷ்டாத் வைதத்திற்க்கு பொருந்தாத விளக்கத்தை அளித்த பொழுது குரு என்று மூட பக்தியால் கட்டுப்படாமல் அவரை விட்டு வெளியே வந்து விட்டார். மேலும் திருக்கோஷ்டியூர் என்ற ஊரில் வேறு ஒரு குரு மோக்ஷத்திர்க்குச் செல்லும் ரகசிய மந்திரத்தை உபதேசித்து அதனை வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது என்றும் அப்படிச் சொன்னால் நரகம் கிட்டும் என்றும் எச்சரிக்கை செய்தும் அதனை பொருட்படுத்தாமல் கோபுரத்தின் மீது ஏறி அந்த ஊரில் உள்ள அனைவரையும் அழைத்து அந்த ரகசிய மந்திரமாகிய ஓம் நமோ நாராயணாய என்ற எட்டு எழுத்து மந்திரத்தை வெளிப்படையாகவே அனைவருக்கும் உபதேசம் செய்தார். இதனை அறிந்த அந்த குரு ஸ்ரீ ராமானுஜரை அழைத்து நான் கூறியதை நீ கேட்காமல் மீறியதால் நரகம் செல்வாய் என்று சாபம் இட்ட பொழுது சிறிதும் கலங்காமல் நான் ஒருவன் நரகத்திற்குப் போனால் பரவாயில்லை. ஆனால் அனைவரும் மோக்ஷத்திற்கு- போவதால் நான் பெருமை அடைகிறேன் என்று ஆணித்தரமாக கூறியபொழுது (யானை மிளிரினாப்போல் ) அந்த குருவே கதி கலங்கி தனது குறுகிய எண்ணத்தை நினைத்து வெட்கப்பட்டார். மேலும் அந்த குரு ஸ்ரீ ராமானுஜரை கட்டி அணைத்து எம்பெருமானாரே என்று அழைத்தார். இந்த ஒரு சம்பவம் மூலம் ஸ்ரீ ராமானுஜர் ஆன்மீகத்தில் ஒரு புரட்சியாளராக விளங்கினார். இப்படியெல்லாம் செயல் பட்ட ஸ்ரீ ராமானுஜர் தனது மனைவியை பகிஷ்காரம் செய்யாமல் அவரை தனது கொள்கைக்கு ஆதரவாக மாற்றியிருந்தால் இன்று நான் மேலே சொன்ன அவல நிலை அந்தணர்கள் குழாமிற்கு கண்டிப்பாக ஏற்ப்பட்டிருக்காது. மேலும் இன்று வைணவ ஆலயங்களில்
    அனைவரையும் ஒன்றாக உட்கார வைத்து கோஷ்டி என்ற பெயரில் பிரசாதம் விநியோகம் நடைபெறுகிறது. அந்த கோஷ்டியில் கூட எங்களைப்போன்ற அந்தணர் அல்லாதவர்கள் அந்தண கோஷ்டியுடன் சேராமல் தனியாகத் தான் உட்கார வேண்டும். பிள்ளைமார் வகுப்பைச்சேர்ந்த நாங்கள் மட்டும் அல்ல. கோனார் வகுப்பைச் சேர்ந்தவளுக்கும் நாயுடு வகுப்பைச் சேர்ந்த வர்களுக்கும் வைணவ செட்டியார் வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கும் வைணவ முதலியார் வகுப்பைச்சேர்ந்தவர்களுக்கும் தாதன் வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கும் (தாதன் என்ற வகுப்பினர் திருநெல்வேலி மாவட்டத்தில் வானுமாமலை என்று அழைக்கப்படும் நாங்குநேரி பகுதியில் அதிகம் ) நாயக்கர்களுக்கும் (அவர்களும் வைணவர்களே ) இதே கதி தான். இவர்கள் அனைவரும் வைணவர்களே. ஆனால் வைணவர்கள் அல்லாத அந்தணர்கள் அதாவது விபூதி இட்டுக்கொள்ளும் அந்தணர்கள் அதாவது ஐயர்கள் சிவனடியார்கள் அவர்களெல்லாம் வைணவ அந்தணர்களோடு சேர்ந்தே கோஷ்டியில் ஒன்றாக உட்காருவார்கள். அதற்கு வைணவ அந்தணர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. இந்த முறையால் வைணவ அந்தணர்கள் ஆழ்வார்களை அவமதித்து விட்டதாகவே நான் கருதுகிறேன். அதற்க்குக் காரணம் இதுதான். பெருமாளை வணங்கும் அடியார்கள் சண்டாள சண்டாளர் களாகிலும் அவர்கள் உயர்ந்தவர்கள் என்று ஆழ்வார்கள் தங்கள் பாசுரங்களில் வலிமையாக பிரகடனம் செய்ததை புறக்கணித்து விட்டார்கள்.. இவைகளை எல்லாம் கோஷ்டியாக ஓதும் வைணவ அந்தணர்கள் அதனை தங்கள் வாழ்க்கையில் கடைப்பிடிப்பது இல்லை. அதனை எடுத்துக் காட்டும் பாசுரம் இதுதான்.
    குலந்தாங்கு சாதிகள் நாலிலும் கீழிழந்து எத்தனை
    நலந்தானிலாத சண்டாள சண்டாளர்களாகிலும்
    வலந்தாங்கு சக்கரத்தண்ணல் மணிவண்ணர் காளென்று உள்
    கலந்தார் அடியார் தம் அடியார் எம்மடிகளே.
    இந்தப்பாசுரத்தை அருளிச்செயதவர் நம்மாழ்வார் என்ற சடகோபன்.
    இவருடைய திருவடியைத்தான் சடாரி என்று பெயரிட்டு வைணவர்கள் தங்கள் தலைமேல் வைத்துக்கொள்கிறார்கள். ஆனால் பாசுரத்தின் அர்த்தத்தை அதாவது அதன் சாராம்சத்தை தங்களது பாதத்தில் போட்டு மிதிக்கிறார்கள். அவரை மட்டிலும் அல்ல அவரை விட வயதில் மிகவும் முதியவரான மதுரகவி என்ற அந்தண ஆழ்வாரையும் கூட துச்சம்மாக எண்ணுகிறார்கள். ஏன் இதைச் சொல்லுகிறேன் என்றால் அந்த அந்தண ஆழ்வார் மதுரகவி எந்த தெய்வத்தையும் கும்பிடவில்லை. நம்மாழ்வாரையே தனது தெய்வமாக பறை சாற்றுகிறார். அதற்க்கான பாசுரம் இதோ:
    கண்ணிநுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப்
    பண்ணிய பெருமாயன் என்னப்பனில்
    நண்ணித் தென்குருகூர் நம்பி என்றக்கால்
    அண்ணிக்கும் அமுதூரும் என் நாவுக்கே.
    என்று வலிமையாக எடுத்துரைத்து தன்னுடைய தெய்வம் நம்பி சடகோபன் என்ற நம்மாழ்வார் தான் என்று கூறும் 11 பாசுரங்களை பாடி மகிழ்ச்சியில் திளைக்கிறார். ஆனாலும் அந்தணர்கள் அவ்வளவுதான் சொல்லுவதற்கு ஒன்றும் இல்லை . உனக்கும் பெப்பே உனது அப்பனுக்கும் பெப்பே என்ற கதைதான்.
    இந்த அவமானம் தேவையில்லை என்று நினைக்கும் என்னைப் போன்றவர்கள் தீர்த்தம் சடாரி கோஷ்டி எல்லாம் ஆகி முடிந்த பிறகு கோவிலுக்குச் சென்று பெருமாளை நன்றாக மனம் குளிர தரிசனம் செய்து விட்டு திரும்புகிறோம். அந்த வைணவ பெரியவர்களுடன் கோஷ்டி சண்டைக்கு போகாமல் எங்கள் சுய மரியாதையை நாங்கள் காப்பாற்றிக் கொள்கிறோம் .ஆனாலும் என்றென்றும் நான் பெருமாள் பக்தன்தான். வைணவனாக இருப்பதில் நான் பெருமைப் படுகிறேன். மேலும் எங்கள் பரம்பரை குல வழக்கப்படி ராமனுஜதாசன் என்று என்னை அறிமுகப்படுத்திக் கொள்வதில் நான் பெருமைப் படுகிறேன். ஸ்ரீ ராமானுஜர் மட்டிலும் அவதரிக்க வில்லை என்றால் ஆயிரம் வருடங்களுக்கு முன்பே நாங்கள் அதாவது வைணப் பிள்ளைமார்கள் வைணவ முதலியார்கள் வைணவ நாயக்க மார்கள், மற்றும் தாதர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் மேலும் பனைமரம் ஏறும் தொழிலை குலத்தொழிலாகக் கொண்டவர்கள் (அவர்களை ஸ்ரீ ராமானுஜர் வைணவர்கள்ளக மாற்றி அவர்களை ஏறி இறங்கிய திருமேனி என்று பெருமையுடன் அழைத்ததாக வரலாறு கூறுகிறது) ஹரிஜனங்களில் பலர் ஆகிய பலர் வைணவர்களாக மட்டிலும் அல்ல. ஹிந்து மதத்திலிருந்து பிரிந்து கிறிஸ்துவர் களாகவோ இஸ்லாமியர் களாகவோ மாறியிருப்பார்கள். அதற்கு இன்று நமது நாட்டில் ஒரு ஆணித்தரமான உதாரணம் காஷ்மீர். தமிழ் நாட்டில் உள்ள வைணவ அந்தணர்களின் ஆதிக்கத்தைப் போல அங்கு காஷ்மீரில் பண்டிட்டுக்களின் அதி மிகுந்த ஆதிக்கத்தால் இன்று ஸ்ரீ ஆதி சங்கரரும் ஸ்ரீ ராமானுஜர் போன்றவர்களும் விஜயம் செய்த பண்டிட்டுகள் நிறைந்த அந்த காஷ்மீர் பகுதி இன்று இஸ்லாமிய பகுதியாகவே மாறிவிட்டதும் அல்லாமல் அந்த காஷ்மீர் இந்தியாவுக்குச் சொந்தமா அல்லது பாகிஸ்தானுக்கு சொந்தமா என்று சர்வதேச அளவில் விவாதிக்கும் அளவில் அங்கு தினசரி வன்முறை செயல் பாடுகள் நடைபெற்று வருகின்றன. அந்த காஷ்மீர் இந்தியாவுக்கே சொந்தம் என்பதினை நிலை நிறுத்து வதற்காக நமது மத்திய அரசாங்கம் அந்தப்பகுதிக்கு விசேஷமாக பல சலுகைகளை வழங்கி கோடிக் கணக்கில் பணத்தை செலவழித்து வருகிறது. நமது முதல் பிரதமர் ஸ்ரீ ஜவஹர்லால் நேரு கூட ஒரு காஷ்மீர் பண்டிட் தான் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இந்தமாதிரி நிலைமை இந்தியாவில் உள்ள முக்கியமாக தெற்கு இந்தியாவில் உள்ள பகுதிகளில் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால் அது மாநில அரசாங்கத்தின் கையிலோ அல்லது மத்திய அரசாங்கதின் கையிலோ இல்லை. அது அந்தணர்களின் மனோபாவத்தில் தான் உள்ளது. அவர்கள் இப்பொழுதோ அல்லது ஒரு சில வருடங்களிலோ தங்கள் மனோபவத்தை மாற்றிக்கொள்ளாவிட்டால் அதாவது சீர் திருந்தாவிட்டால் இன்னும் ஐநூறு அல்லது ஆயிரம் ஆண்டுகளில் தெற்கில் மட்டிலும் அல்ல வடக்கிலும் கூட அதாவது இந்தியா முழுக்க இஸ்லாமியமும் கிறிஸ்துவமும் தழைத்து ஹிந்து கோவில்கள் அனைத்தும் சர்ச் ஆகவும் மசூதியாகவும் ஆகிவிடும் எனபதினை ஜாதி அந்தணர்கள் உணர வேண்டும். வைணவம் ஒழிந்தாலும் சைவம் தழைத்து ஓங்கும் என்று சைவர்கள் கனவு காண வேண்டாம். சைவமும் வைணவமும் ஒன்றுக்கொன்று கைகோர்த்து செயல் பட்டால் மட்டிலுமே பாரதம் காப்பாற்றப்படும். இந்த உண்மையை புரிந்து கொள்ள அனைவரையும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
    இப்படிக்கு
    ராமானுஜ தாசன்
    பெருமாள் பிள்ளை.
    உறையூர்.
    எனது பெற்றோர்கள் எனக்கு பெருமாள் என்றே பெயர் வைத்து விட்டனர். அது ஸ்ரீனிவாச பெருமாளா? பாண்டுரங்க பெருமாளா? அல்லது வீர ராகவ பெருமாளா? எது வேண்டுமானாலும் பொருத்தமாக இருக்கும் என்பதற்காக அப்படி வைத்துள்ளார்கள் என்று நினைக்கிறேன். எனது தந்தை பெயர் குலசேகரப் பெருமாள் பிள்ளை. எனது பாட்டனார் பெயர் ஆதிமூலப் பெருமாள் பிள்ளை. அவருடைய தகப்பனார் (எனது முப்பாட்டனார்) பெயர் நம்பிப்பிள்ளை. எனது பையனுக்கு முருகன் பெயர் வைக்க வேண்டும் என்று என் மனைவி வீட்டில் விரும்பியதால் அதற்குப் பங்கம் வராமல் எங்கள் குலத்திற்கும் இழுக்கு வராமல் இருப்பதக்காக ஆறுமுகப் பெருமாள் என்று வைத்து விட்டேன்.
    நன்றி வணக்கம்.
    தயவு செய்து இந்த என்னுடைய கருத்தை உங்கள் தொடர்பில் உள்ள அனைவருக்கும் அனுப்புங்கள் . படிப்படியாக இந்த தகவல் ஆன்மீக சொற்பொழிவாளர்கள் (உபந்யாசகர்கள் ) யாருக்காவது போய்ச்சேர்ந்து அவர்கள் தங்கள் உபன்யாசத்தில் இதனை பொது ஜனங்களுக்கு விளக்கி வைணவத்தின் பெருமையை நிலை நாட்டி நமது நாட்டில் கிறிஸ்துவமும் இஸ்லாமியமும் பரவாதபடி பாரத மாதாவிற்கு சேவை செய்யட்டும்.
    --
    22/4 RANGAIAH GARDEN STREET
    P.S.SIVASWAMY SALAI
    MYLAPORE
    CHENNAI -- 600004
Working...
X