Announcement

Collapse
No announcement yet.

Bmbc, mr soundarajan, mr gopalan, mr varadharajan அண்ணாக்களே (மற்றும் பலரே)

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Bmbc, mr soundarajan, mr gopalan, mr varadharajan அண்ணாக்களே (மற்றும் பலரே)

    Bmbc, mr soundarajan, mr gopalan, mr varadharajan அண்ணாக்களே (மற்றும் பலரே)
    எனக்கு ஒரு குழப்பத்துடன் சேர்ந்த சந்தேகம். உலகத்தையே படைத்து கட்டி காக்கும் கடவுளின் கதைகள் எல்லாம் ஏன் நமது தேசத்தை சுற்றியே அமைந்துள்ளன? நமது கடவுள்களின் கதைகளும் நிகழ்ச்சிகளும் ஏன் மற்ற கண்டங்களிலும் நாடுகளிலும் நடந்த மாதிரி தெரியவில்லை? அப்படியென்றால் மற்ற தேசங்களுக்கும் நம் தேவதைகளுக்கும் சம்பந்தம் இல்லையா? அவர்கள் சொல்லுகிற மாதிரி அல்லா, யேசு போன்றவர்கள் அவர்களுடைய தேச தேவதைகளா அவர்களுக்கும் நம் மும்மூர்த்திகளுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லையா? ஒன்றும் புரியவில்லை. அப்படியென்றால் இறைவன் ஒருவன்தான் எல்லா உலகங்களுக்கும்…. என்ற கூற்று எப்படி மெய்யாகும்? இல்லை….. நமது வேதங்களிலோ உபனிஷத்துகளிலோ வெளி நாடுகள் இடம் பெறுகின்றனவா? இன்னொரு விஷயம் எந்த ஊர் எந்த இடம் எந்த நாடு வேண்டுமானால் நாம் படிக்கும் கேட்கும் கதைகளிலோ விஷயங்களிலோ இருக்கட்டும். அவை எல்லாமே இந்தியாவை சுற்றியே உள்ளனவே ! அது எப்படி ? தயவு செய்து all seniors to reply and clear my confusion please………………..
    adiyen
    radhakrishnan with thanks in advance

  • #2
    Re: Bmbc, mr soundarajan, mr gopalan, mr varadharajan அண்ணாக்களே (மற்றும் பலரே)

    அன்புள்ள திரு.ராதாக்ருஷ்ணன் அவர்களுக்கு,
    இதில் கன்ப்யூஷணுக்கு எதுவும் இடமில்லை,
    ஒரு வீட்டில் ஒரு பூஜை அறைதான் இருக்கிறது.
    ஒரு மனிதனின் சரீரத்தில் ஒரு தலைதான் இருக்கிறது
    ஒரு நாட்டுக்கு ஒரு தலைநகரம்தான் இருக்கிறது.
    85லட்சம் விதமான படைப்புகள் உலகில் உள்ளனவாம்,
    அவற்றில் மனித இனம் ஒரே ஒரு படைப்புதான் இத்தனை மஹிமை
    வாய்ந்ததாக, பகுத்தறிவைக்கொண்டதாகப் படைக்கப்பட்டுள்ளது.
    "அகிலாண்டகோடி ப்ரம்மாண்டம்" என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்,
    என்றால் - அத்தனைகோடிக்கணக்கான அண்டங்கள் இருக்கின்றன
    ஆனால் பூமி ஒன்றில் மட்டும்தான் மனித இனம் வாழும்படியாக ஒரு அமைப்பை
    அந்த இறைவன் ஏற்படுத்தியுள்ளான்.
    திருமழிசை என்கிற ஊருக்கு - மஹீசாரம் என்று ஒரு பெயர் உண்டு,
    தேவர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து பூமியிலேயே சிறந்ததான ஒரு இடத்தைத்
    தேர்ந்தெடுத்து அந்த இடத்தில் யாகம் செய்ய விரும்பினார்களாம், அப்படி அவர்களால்
    தேர்ந்தெடுக்கப்பட்டு யாகம் செய்யப்பட்ட இடத்திற்குப்பெயர்தான் மஹீசாரம் - திருமழிசை.
    அதுபோல் ஒவ்வொன்றுக்கு ஒரு சிறப்பு உண்டு.
    புராணத்தின்படி பூ:, புவ:, ஸுவ:, மஹ:, ஜன:, தப:, ஸத்யலோகம் என மேல் ஏழு லோகமும்,
    அதல, விதல, சுதல என்பதாக கீழே ஏழு லோகங்களும் உள்ளனவாம், பாவ புண்ணியத்துக்குத் தக்க கீழ், லோகமோ, மேல் லோகமோ கிடைக்கும், ஆனால் பாப புண்ணியங்களின் முடிவில் மீண்டும் பூமயில்தான் பிறக்கவேண்டும் மீண்டும் பாப, புண்ணியத்துக்குத் தக்க அடுத்த பிறவி எடுக்க.
    இந்தியாவில் எவ்வளவு பெரிய நிலப்பரப்பு இருந்தாலும், அனைத்து ராக்கெட்டுகளும்
    ஶ்ரீஹரிகோட்டாவிலிருந்துதான் மேலே செல்ல முடிகிறது.
    அதுபோல் பூமியென்னும் பெரிய நிலப்பரப்பில் இந்தியா என்னும் இடம்தான்
    மேல் லோகம் கீழ்லோகங்களுக்கு அனுப்பிவைக்கும் ஏவுதளம் என்று கொள்க.

    பகவான் பூமியின் பலபாகங்களிலும் பலவிதமாக அவதரித்து, அந்தந்த இடத்துக்குத்தக்க
    பாஷையை அநுசரித்து ஆங்காங்கே உள்ள மக்களுக்கு நல்ல விஷயங்களை அவரவர்
    மொழியில் போதித்து, அவர்களை உயர்வடையச்செய்து, பின்னர் கடைசியான பிறவியில்
    இந்த விசேஷமான ஏவுதளமாகிய இந்திய பூமியில் பிறக்கும்படிச் செய்கிறான் என்று கொள்க.

    ஒருவனான இறைவனை நம் மதத்திலேயே, மும்மூர்த்தியாகவும் மற்றும் பல்வேறு ரூபங்களிலும் தரிசித்தாலும், இறைவன் ஒருவனே என்று நாம் அறிந்துள்ளோம்.
    அதுபோல், வெளிநாடுகளில் நல்ல உபதேசங்களைச் செய்து, மக்களை நல்வழிப்படுத்திய
    இறைதூதர்கள் அனைவருமே இறைவனின் வழித்தோன்றல்கள்தான்.
    புத்தரையே தசாவதாரங்களில் ஒருவராகச் சொல்வோரும் உள்ளனர்..

    ஸம்ஸ்க்ருதம் ஒன்றுதான் எல்லா மொழிகளுக்கும் முதன்மையானது மற்றும் அடிப்படையானது என்பது பலரால் நிரூபிக்கப்பட்டுள்ளது.
    உலகெங்கிலும் இருந்து இந்திய கடவுள் வடிவ சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
    எனவே உலகெங்கிலும் பரவியிருந்து இந்து மதமும் மொழியும் காலப்போக்கில்
    மாறிப்பபோனது என்பது தெரியவருகிறது.

    குறிப்பு:- மேலும் விபரம் வேண்டுமானாலும் தருகிறேன். இன்டெர்நெட் இணைப்பு சரிவரக் கிடைக்காமல் ஒருவாரமாகத் திணறிக்கொண்டிருக்கிறேன். தற்போதைக்கு இந்த விபரங்களைக்கொண்டு மேலும் ஊஹித்து அறியவும்.
    என்.வி.எஸ்


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

    Comment


    • #3
      Re: Bmbc, mr soundarajan, mr gopalan, mr varadharajan அண்ணாக்களே (மற்றும் பலரே)

      nvs அண்ணா
      தங்களுடைய பாதார விந்தங்களுக்கு என் சரணங்கள்
      என்ன ஒரு அழகான விளக்கம்............
      சரஸ்வதி தங்களிடம் குடிகொண்டு உள்ளாள் என்பதற்கு தங்கள் எழுத்துக்களே சான்று
      என் சந்தேகம் confusion எல்லாம் போயின
      இனியும் ஒரு சந்தேகம்.. தங்களின் எழுத்து போலவே இருக்குமா தங்கள் பேச்சின் நடையும்...?
      சில நல்ல முக்கியமான விஷயங்களை தங்களுடைய குரலில் பதிவு செய்து audio clip இணைத்தால் சந்தோஷப்படும் ஆன்மாக்களில் முதல்வனாவேன்.......
      என் அண்ணாவுக்கு,
      கோடி நமஸ்காரம்
      ராதாகிருஷ்ணன்

      - - - Updated - - -

      nvs அண்ணா
      தங்களுடைய பாதார விந்தங்களுக்கு என் சரணங்கள்
      என்ன ஒரு அழகான விளக்கம்............
      சரஸ்வதி தங்களிடம் குடிகொண்டு உள்ளாள் என்பதற்கு தங்கள் எழுத்துக்களே சான்று
      என் சந்தேகம் confusion எல்லாம் போயின
      இனியும் ஒரு சந்தேகம்.. தங்களின் எழுத்து போலவே இருக்குமா தங்கள் பேச்சின் நடையும்...?
      சில நல்ல முக்கியமான விஷயங்களை தங்களுடைய குரலில் பதிவு செய்து audio clip இணைத்தால் சந்தோஷப்படும் ஆன்மாக்களில் முதல்வனாவேன்.......
      என் அண்ணாவுக்கு,
      கோடி நமஸ்காரம்
      ராதாகிருஷ்ணன்

      Comment

      Working...
      X