Announcement

Collapse
No announcement yet.

சம்ஸ்க்ருத சேவைக்கு ஒரு வாய்ப்பு

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • சம்ஸ்க்ருத சேவைக்கு ஒரு வாய்ப்பு



    சென்னை மயிலாப்பூரில் உள்ள சென்னை சம்ஸ்கிருத கல்லூரியின் ஒரு பகுதியாக, அதன் வளாகத்திற்குள்ளேயே அமைந்துள்ளது குப்புசாமி சாஸ்திரி சம்ஸ்கிருத ஆய்வு மையம். 1927ம் ஆண்டு சம்ஸ்கிருத அறிஞர் குப்புசாமி சாஸ்திரி அவர்களால் தொடங்கப் பட்ட இந்த ஆய்வு மையம் இந்தியவியல் (indology) துறையிலும் சம்ஸ்கிருத மொழி குறித்தும் பல குறிப்பிடத் தக்க புத்தகங்களை வெளியிட்டுள்ளது. வேதம், வேதாந்தம், நியாய சாஸ்திரம், மொழியியல், இலக்கணம், யோகம், காவியம், சிற்பம் இசை நடனம் முதலான நுண்கலைகள், சோதிடம், சைவம், வைணவம் தொடர்பான நூல்களும் இதில் அடங்கும். முதன்முதலில் தொல்காப்பியத்தின் ஆங்கில மொழியாக்கத்தை வெளியிட்டதும் இந்த ஆய்வு மையமே. இன்றும் நூற்றுக்கணக்கான சுவடிகள் இந்த ஆய்வகத்தில் பாதுகாக்கப் பட்டு வருகின்றன; இந்த சுவடிகளில் பல 800 முதல் 1000 ஆண்டுகள் பழமையானவை.
    1995 வரை இந்த ஆய்வு மையத்திற்கு மத்திய அரசு நிதியுதவி அளித்து வந்தது. பிறகு மத்திய அரசு நியமித்த நிர்வாகக் கமிட்டியினருக்குள் உண்டான கருத்து வேறுபாடு காரணமாக அது முழுதுமாக நின்று விட்டது. பிறகு, முற்றிலும் தனியார் நன்கொடைகளின் உதவியுடனேயே இந்த ஆய்வு மையம் செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் “ராஷ்டிரீய சம்ஸ்கிருத சம்மான்” அமைப்பிடம் நிதியுதவியைத் தொடரக் கோரி ஆய்வு மையம் சமர்ப்பித்த கோரிக்கை நிறைவேற்றப் படாமல் இன்னும் பரிசீலனையிலேயே உள்ளது.

    இந்நிலையில், இந்த ஆய்வு மையத்தை நடத்திச் செல்லவும், இதில் ஆய்வு செய்து வரும் 24 மாணவர்கள், அறிஞர்களது பணிகளைத் தொடரவும், பாரம்பரிய பொக்கிஷங்களான சுவடிகளைப் பாதுகாக்கவும் தேவையான நிதியுதவி சீராக இல்லாமல் ஆய்வு மையம் சிரமப் படுகிறது.

    இந்தியப் பண்பாடு மற்றூம் பாரம்பரியத்தின் மீதும், சம்ஸ்கிருத மொழி மீதும் பற்றுக் கொண்டோர் உதவிட வேண்டுமென இந்த ஆய்வு மையம் கோரிக்கை வைத்துள்ளது. ரூ. 2000 செலுத்து ஆயுட்காக போஷகராகும் நன்கொடையாளர்களுக்கு, ஆய்வுமையம் பதிப்பித்துள்ள சம்ஸ்கிருத நூல்கள் அனுப்பி வைக்கப் படும் என்றும் அறிவித்துள்ளது.
    இது குறித்து டைம்ஸ் ஆஃப் நாளிதழில் வந்த செய்தி
    ஆய்வு மையம் வெளியிட்டுள்ள கோரிக்கை
    ஆய்வு மையம் இணையதளம்
    நன்கொடை செலுத்திட விரும்புவோர் THE KUPPUSWAMI SASTRI RESEARCH INSTITUTE என்ற பெயரில் தங்கள் காசோலை (அ) டிமாண்ட் டிராஃப்டுகளை இந்த முகவரிக்கு அனுப்பலாம் -
    Dr. K.S.Balasubramanian , Dy.Director, Kuppuswamy Sastri Research Institute, Sanskrit College, Mylapore, Chennai – 600004.
    Phone- 044-24985320
    Email: ksrinst@gmail.com
    அல்லது கீழ்க்கண்ட வங்கிக் கணக்கில் நேரடியாக நன்கொடைகளை செலுத்தி விட்டு மேற்கண்ட முகவரியில் தொடர்பு கொண்டு விவரம் தெரிவிக்கலாம்.
    THE KUPPUSWAMI SASTRI RESEARCH INSTITUTE.
    Account No. 395702010007408
    Union Bank of India – Mylapore Branch
    NEFT NO: UBIN0539571
    IFSC CODE NO.600026009
    [நன்றி: தமிழ்ஹிந்து.காம்]
Working...
X