PDA

View Full Version : மூளைக்காரன்பேட்டை



soundararajan50
03-05-2014, 12:45 PM
மூளைக்காரன்பேட்டை
ஒரு பிரபலத்தைப் பற்றிய எட்டு குறிப்புகள் அளிக்கப்பட்டுள்ளன. யார் என்று கண்டுபிடியுங்கள்.

1. தத்துவத்தில் பட்டப்படிப்பு படித்தவர்.
2. வெளிநாட்டில் புனைப்பெயரில் படித்தவர்.
3. ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த தனது பெண் நண்பர், வெனிசுலாவில் இருப்பதாக இவர் கூறியது பரபரப்புச் செய்தியானது.
4. ஒரு கட்சியின் துணைத் தலைவர்.
5. வசிப்பது 12, துக்ளக் சந்து.
6. ' முஸ்லீம் பயங்கரவாதிகளைவிட இந்து தீவிரவாதிகள் நாட்டுக்கு மேலும் அபாயம் விளைவிக்கக் கூடியவர்கள் '. என்று இந்தியாவுக்கான அமெரிக்கத்
தூதரிடம் இவர் கூறியது கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
7. இவரது தந்தை, பாட்டி இருவருமே படுகொலை செய்யப்பட்டவர்கள்.
8. இவரது தாய் வேற்று நாட்டில் பிறந்தவர்.

புதிருக்கான விடை : ராகுல் காந்தி.

-- ஜி.எஸ்.எஸ். ரிலாக்ஸ்.
-- ' தி இந்து ' நாளிதழ். வெள்ளி, நவம்பர் 15, 2013.