Announcement

Collapse
No announcement yet.

தெரியுமா உங்களுக்கு?

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • தெரியுமா உங்களுக்கு?

    • சமஸ்க்ருத மொழிக்கென்று எந்த எழுத்துருவும் கிடையாது. பிராமி, நாகரி, தமிழ் கிரந்தம் என்று பல எழுத்துருக்களாலும் (லிபி) எழுதப்பட்டு வருகிறது
    • சமஸ்க்ருத மொழியின் வரலாறு இரண்டு கால கட்டத்தைக் கொண்டு வகுக்கப் படுகிறது. வேதகால சம்ஸ்க்ருதம்(Vedic Sanskrit) , செவ்வியல் சமஸ்க்ருதம் (Classical sanskrit) என்பவை அவை.
    • “இஷ்டம்”, “கஷ்டம்” போன்ற வார்த்தைகள் வேத கால சமஸ்க்ருதத்தில் கிடையாது
    • சமஸ்க்ருத இலக்கணம் இந்நாளைய ஆப்கானிஸ்தான் பிரதேசத்தில் வாழ்ந்த பாணினி என்பவரால் தொகுக்கப் பட்டது.
    • இவருக்கு முந்தைய நாளில் இருந்த இலக்கண நூல்கள் இவர் எழுதிய அஷ்டாத்யாயி என்கிற இலக்கண நூல் வந்த பின் வழக்கொழிந்து போய் விட்டன.
    • பாணினி தந்த இலக்கணப் படி அமைந்துள்ள சமஸ்க்ருத மொழியே செவ்வியல் சமஸ்க்ருதம் என்று அழைக்கப் படுகிறது.
    • வேத கால சமஸ்க்ருதத்தில் காணப்படும் ஸ்வரங்களான உதாத்தம், அனுதாத்தம் போன்றவற்றுக்கு சமஸ்க்ருத இலக்கணம் வகுத்த பாணினி எந்த விதிகளையும் குறிப்பிடவில்லை
    • சமஸ்க்ருதத்தில் எந்த காவியங்களும் சோகமான முடிவுடனோ, அரைகுறையாகவோ முடிவதில்லை
    • வடமொழி கவி காளிதாசன் எழுதிய மிகச் சிறந்த காவியம் “குமார சம்பவம்”. இந்த பெயர் முருகனின் பிறப்பை உணர்த்துகிறது. ஆனால் இந்த காவியத்தில் எந்த இடத்திலும் ஒரு ஸ்லோகத்தில் கூட முருகனின் மீது இயற்றப் படவில்லை.
    • Guru, Pundit, Tantra, Shanti, Shakti, Om, Prana, Karma என்று பல சம்ஸ்க்ருத வார்த்தைகள் நடைமுறை ஆங்கிலத்தில் பயன்படுத்தப் படுகின்றன.
Working...
X