Announcement

Collapse
No announcement yet.

அமெரிக்கா வர மோடிக்கு வெள்ளை மாளிகை அழைப

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • அமெரிக்கா வர மோடிக்கு வெள்ளை மாளிகை அழைப

    பதிவு செய்த நாள்
    17 மே
    2014
    07:05



    வாஷிங்டன்: லோக்சபா தேர்தலில் அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து பா.ஜ.,பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி அமெரிக்கா வர வேண்டும் என வெள்ளை மாளிகை அழைப்பு விடுத்துள்ளது. அமெரிக்க அதிபர் ஒபாமாவும், மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    குஜராத் கலவரம் காரணமாக, மோடிக்கு அமெரிக்கா விசா அளிக்க மறுத்து வந்தது. மோடி பா.ஜ., பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர், அமெரிக்காவின் நிலையில் மாற்றம் ஏற்பட்டது. இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் மோடியை சந்தித்துபேசினார். இந்நிலையில், லோக்சபா தேர்தலில் பா.ஜ., அமோக வெற்றி பெற்றுள்ளது. நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்க உள்ளார்.

    இதனையடுத்து வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜே கார்னே கூறுகையில். மோடி தலைமையிலான ஆட்சியில், இந்தியா- அமெரிக்கா இடையிலான உறவு மேம்படும் என தெரிவித்துள்ளது. மேலும் தேர்தலில் வரலாற்று சாதனை படைக்கும் வகையில் வெற்றி பெற்ற மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாகவும், மோடி பிரதமராக பதவியேற்ற பின்னர், அவருடன் இணைந்து செயல்பட ஆர்வமாக உள்ளதாகவும், ஜனநாயக மாண்புகள் வலுப்பட, இரு தரப்பு உறவை மேம்படுத்த விரும்புவதாகவும், இந்திய பிரதமர் அமெரிக்கா வருவதை நாங்கள் வரவேற்பதாகவும் கூறினார்.

    அதேநேரத்தில், தேர்தலில் வெற்றி பெற்ற மோடியை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார். அப்போது ஒபாமா, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் தீர்மானமான முடிவு கிடைத்துள்ளது. மோடி தலைமையில், உலகிற்கு இந்தியாவின் பங்களிப்பு அதிகமாக கிடைக்க வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாக கூறினார். உலக பொருளாதாரம் தொடர்பாகவும், இரு நாட்டு உறவு தொடர்பாகவும் மோடியும், ஒபாமாவும் ஆலோசனை செய்தனர்.

    இது தான் உலக அரசியல் முதலில் விசா மறுப்பு பதவி வந்தபின் ரெட் கார்ப்பெட் அழைப்பு
Working...
X