Announcement

Collapse
No announcement yet.

மோடியும், லேடியும்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • மோடியும், லேடியும்



    Source: Dinamalar

    நேற்று, எல்லா மாநிலங்களிலும் தொகுதி நிலவரங்கள் பற்றி, மக்கள் விவாதித்துக் கொண்டிருந்தபோது, நம்மூர் மக்கள், அவர்களுக்கே உரிய நையாண்டியுடன், வயிறு குலுங்க சிரிக்க வைக்கும், 'தமாசு'களை, 'வாட்ஸ் அப், பேஸ்புக்' ஆகியவற்றில், சத்தமில்லாமல், பகிர்ந்து கொண்டிருந்தனர். அவை:

    *37 தொகுதியிலேயும் அம்மா ஜெயிச்ச சந்தோஷத்தை விட, 'இந்த வெற்றிக்கு என்னோட பிரச்சாரமும் காரணம்'னு, சரத்குமார் நாளைக்கு பேட்டி கொடுப்பாரு பாரு! அதை நினைச்சாத்தான்யா ஒரே பீதியா இருக்கு!
    *'கொடியை இறக்கு, கொடியை இறக்குன்னு, கூட்டத்துல நாக்கை துருத்தாதீங்க'ன்னு எவ்வளவோ சொன்னோமே கேப்டன்! பாருங்க... இப்ப கொடியை மொத்தமா இறக்க வைச்சிட்டானுங்க!
    *எல்லாரும் தேர்தல் பிரசாரத்துக்கு போயிட்டிருந்தப்போ, நம்ம தலைவர் மட்டும், 'விஜயகாந்த் வீட்டுக்குவர்றார்'ன்னு வடை சுட்டுட்டு இருந்தாருல்ல... அதான் இப்போ, 'அல்வா' சாப்பிடுறாரு!
    *'மோடியும் கிடையாது; லேடியும் கிடையாது'ன்னு, சொன்னீங்களே அண்ணாச்சி... இப்போ, மோடியும், லேடியும் ஹாப்பி. ஆனா, உங்க டாடி?
    *டாக்டர் அய்யா... விட்றாதீங்க! மோடியோட நம்பிக்கையை, நம்ம சின்னய்யா மட்டும் தான் ஒண்டியா காப்பாத்தியிருக்காரு! அதனால அவருக்கு, 'துணை பிரதமர்' பதவியை எப்படியாவது வாங்கிடுங்க!
    *அய்யோ... இனிமே, சைரன் வைச்ச எந்த வண்டியை பார்த்தாலும், போலீஸ் வண்டி மாதிரியே தெரியுமே! அம்புட்டு லட்சம் இருந்தும், ஒரு லட்சம் ஓட்டு வாங்க முடியாம போச்சே ராசா!
    *டெல்லி சட்டசபைக்குள்ள போகலாம்னு பார்த்தா, எகத்தாளமா சிரிச்சானுங்க. சரி, பார்லிமென்டுக்காவது போயிடலாம்னு பார்த்தா, அதைவிட பயங்கரமா சிரிச்சுட்டானுங்க. இனிமே, நாம எங்கே போறது கேப்டன்?
    *இந்த அசிங்கத்துக்கு, அவங்க கொடுத்த அந்த ஒரு தொகுதியிலேயே நின்னுருக்கலாம். அது பத்தாதுன்னு, இன்னொண்ணு கேட்டு வாங்கி, அவங்களா கொடுத்ததா பேட்டி கொடுத்து, ச்சே... இப்போ 'டபுள் ஷேமா' போயிடுச்சுப்பா!
    *ம்ஹும்... அத்தனை கோஷ்டி இருந்தும், ஒரு கோஷ்டியால கூட, நம்ம, 'கை'யை உயர்த்த முடியலையே! 'ஹலோ... முட்டை நல்ல முட்டையா?'ன்னு போன் பண்ணி கேட்குறாய்ங்களே!
    *அண்ணன் என்னடான்னா, 'தோல்விக்கு காரணம் சர்வாதிகாரம்'னு சொல்லுறாரு. 'மக்கள் தீர்ப்பை மனமுவந்து ஏத்துக்குறோம்'னு, தம்பி பேட்டி கொடுக்குறாரு! அப்பா, 'நாங்க இதைவிட, பயங்கரமான தோல்வியை பார்த்திருக்கோம்'னு, அறிக்கை விடுறாரு. என்னய்யா நடக்குது இங்கே?
    *'தந்தை சொல் மிக்க மந்திரமில்லை'ங்கறது தப்புன்னு இப்போவாவது புரிஞ்சுதா? 'கேப்டன் கூட சேராதே'ன்னு எங்க அய்யா சொன்னதை, சின்னய்யா கேட்டிருந்தா, இந்த வெற்றி கிடைச்சிருக்குமா?
    *ஒரு தாய் கோபப்பட்டா, புள்ளை உடனே கோவிச்சுட்டு வெளியே போயிடறதா? 'கோழி மிதிச்சு குஞ்சுக்கு சேதாரம் ஆயிடுமா'ன்னு யோசிக்க வேண்டாமா? இப்ப என்னாச்சு... கோழி மிதிக்காமலேயே சேதமாயிடுச்சு! ம்ஹும்... இந்த சிவப்பு துண்டை மாத்திட வேண்டியது தான்!

    - நமது நிருபர்
Working...
X