Announcement

Collapse
No announcement yet.

திதிகளில் பூஜைகள்.24

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திதிகளில் பூஜைகள்.24

    இதற்கு நிஹோரம் என்று பெயர். பிறகு ஸாஷ்டாங்கமாக சூரியனை நமஸ்காரம் செய்ய வேண்டும். உத்தமமான பிராமணருக்கு தானம் செய்ய வேண்டும்.

    சூரியனுக்கு ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பெயர் கூறி பூஜை செய்ய வேண்டும்.. சித்திரை மாதம் அம்சுமான் என்ற பெயரிலும், வைகாசி மாதம் தாதா என்ற பெயரிலும், ஆனியில்- இந்திரன், ஆடியில் ரவி, ஆவணியில்

    கபஸ்தி, புரட்டாசியில் யமன்; ஐப்பசியில் சுவர்ண ரேதஸ்; கார்த்திகையில் துவஷ்டா; மார்கழியில் மித்திரன்; தை மாதத்தில் விஷ்ணு; மாசி மாதம் அருணன் ; பங்குனியில் சூரியன் என்ற பெயர் சூட்டி சூரியனை பூஜிக்க வேண்டும்.

    சூரியனின் தேரில் உள்ள மற்ற தேவதைகளையும் விதிப்படி பூஜிக்க வேண்டும். ஒவ்வொரு தேவதைகளையும் பூஜிக்க தனி தனி பூஜா முறைகள் உள்ளன.

    சூரியனை சாயா தேவி சுவர்ச்ச லாம்பா வுடன் தாமரை மலர் கொண்டு பூஜிக்க வேண்டும் அருணன், குதிரைகளயும் பூஜிக்க வேன்டும்.



    நியமத்தோடு சூரியனை சப்தமியிலோ அல்லது ஞாயிற்றுகிழமையிலோ விதிப்படி ஆராதிப்பவர் ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம், தேஜஸ், கீர்த்தி
    புத்ர பெளத்ரர்கள் அடைவர்.,

    ஸப்தமிக்கு முதல் நாளான சஷ்டி முதலே பிரயாணம், காம விஹாரமின்மை; மயக்க வஸ்துக்களை சாப்பிடாதிருத்தல், ஹிம்சை செய்யாதிருத்தல்; எண்ணைய் ஸ்நானம் செய்யாதிருத்தல், ,வீட்டுக்கு விலக்கான பெண்களுடன் பேசாமல், அவர்கள் பொருட்களை தொடாமலும் , பொய் பேசாதிருத்தல் போன்ற நியமங்களை கை கொள்ள வேண்டும்.


    சூரிய மந்திரம் அல்லது தீக்ஷை இல்லாதவர் சூரியனை பூஜை செய்யக் கூடாது. அவ்வாறு செய்தால் வியாதி வரும்.. குரு உபதேசம் பெற்று பிறகு பூஜிக்க வேண்டும்.

    மானஸீக புஷ்ப பூஜை:--- ப்ரதிஷ்டை செய்த லிங்கத்தை வாசனையுள்ள பூக்களால் பூஜிப்பது போல இருதயத்தில் உள்ள லிங்கத்தை பூஜிக்க எட்டு வித மானஸீக பூக்கள் எவை?

    அஹிம்சை எனப்படும் உடல், வாக்கு, மனம், ஆகிய முக்கரணங்களாலும் யாருக்கும் எந்த ஹிம்சையும் செய்யதிருத்தல் முதல் புஷ்பம்.

    இந்திரிய ஜயம்:---கண், காது, மூக்கு, வாய், மனம் என்கின்ற ஐந்து இந்திரியங்களையும் அடக்கி ஒரு நிலை படுத்த வேண்டும். இது 2ஆவது புஷ்பம்.

    தேகத்துக்கோ மனதுக்கோ துன்பம் வந்தால் தைரியமாக ஏற்க வேண்டும். ,
    தைரியம் 3ஆவது புஷ்பம்.

    பிறர் செய்யும் தீங்கை பொறுமையோடு சகித்துக்கொள்ள வேண்டும்.அதை பொருட்படுத்தாதே. பொறுமை 4ஆவது புஷ்பம்.

    சுத்தமான மனம், வாக்கு, தேகம் எப்போதும் இருக்க வேண்டும். களங்கம், அசுத்தம் இல்லாத ஈடுபாடு தேவை. ஸெளசம் எனும் சுத்தியே 5ஆவது பூ.

    கோபம் வந்தாலும், கோபத்தை பிறர் தூண்டினாலும்,கோபபட கூடாது.
    கோபமின்மை ஆறாவது புஷ்பம்.

    செயலிலும், எண்ணத்திலும், பேச்சிலும் தர்மமாக இருக்க வேண்டும். அதர்மம் செய்யாமல் இருப்பதே ஹரீ என்னும் ஏழாவது புஷ்பம்.

    ஸத்யம் எட்டாவது புஷ்பம்.. பேச்சிலும், செயலிலும், எண்ணத்திலும் ஸத்யமாக இருக்க வேண்டும்.

    இம்மாதிரி இருதயத்திலுள்ள லிங்கத்தை பூஜிக்க எட்டு வித மானஸீக பூக்கள் விதிக்கப்பட்டுள்ளன.

    நாள் தோறும் எவன் இந்த மானஸீக புஷ்பங்களால் ஜபம், ஹோமம் செய்து பகவானை பூஜிக்கிறானோ அவன் அக்ஞானம் என்னும் இருளிலிருந்து வெளிப்பட்டு சுஷும்னா நாடி வழியாக தலையை பேதித்துக் கொண்டு பகவானை அடைகிறான். .

    பிராணாயாமத்தால் இந்திரியங்களை அடக்க வேண்டும் .தியானம் முதலிய உபசாரங்களாலும் பகவானை பூஜிக்க வேன்டும். இதனால் அகங்காரம் அழியும் .நான் என்னுடையது என்ற அகங்காரம் நீங்க வேண்டும்.

    நமது கண்கள்—சூரியன்; நாக்கே வருணன்; மூக்கே பூமி ;இந்த சரீரம் அக்கினியும் வாயுவுமாகும் .கர்மேந்திரியங்களே இந்திரன் .நமது உடலில் விஷ்ணு இருந்து எல்லாவற்றையும் அனுபவிக்கிறார். ஆதலால் விஷ்ணு போக்தா.

    பாபங்களின் இருப்பிடம் அபானம் ஆகும்.. மனமே ஜீவாத்மா. இவ்வாறு தியானித்து உபாசிப்பது உயர்ந்த மானஸீக பூஜை எனப்படுகிறது.
Working...
X