PDA

View Full Version : கருத்துப் பேழை.



soundararajan50
05-07-2014, 07:34 AM
30,560 சென்னை மாநகராட்சியிலுள்ள உட்புறச் சாலைகளின் மொத்த எண்ணிக்கை. இவற்றின் மொத்த நீளம் 5,616 கி.மீ.
* நம்முடைய குழந்தைகள் தோற்றாலும் வென்ற குழந்தையைப் பாராட்டும் பண்பை நாம் கற்றுத்தர வேண்டும். அதற்கு நாம் இந்த பிளாஸ்டிக், பித்தளை,
அலுமினியத்தாலான பொருள்களைப் பரிசுகள் என்ற பெயரில் வாங்கிக் குவிப்பதற்குத் தரும் முக்கியத்துவத்தைக் குறைக்க வேண்டும். கோப்பைகள்,
பதக்கங்கள், கேடயங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளின் லாபத்துக்காக நம்முடைய குழந்தைகளின் வாழ்க்கையை நாம் பலிகொடுக்கக் கூடாது.
* கடந்த 30 ஆண்டுகளில் இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் மீது 480 முறை துப்பாக்கிப் பிரயோகம் செய்திருக்கிறது.
-- ' தி இந்து' நாளிதழ். திங்கள், செப்டம்பர். 30, 2013.