Announcement

Collapse
No announcement yet.

ராஜாஜி எழுதிய கடிதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ராஜாஜி எழுதிய கடிதம்

    மத நல்லிணக்கம் குறைந்திருக்கும் இவ்வேளையில், மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் முகமாக, ராஜாஜி எழுதிய கடிதம் ஒன்று திகழ்கிறது.

    கல்கி இதழில், "ரகுபதி ராகவ' என்ற கட்டுரைத் தொடர் ஒன்றை, ராஜாஜி எழுதி வந்தார்.
    அதை படித்து வந்த ஒரு கிறிஸ்துவ வாலிபர், ராஜாஜிக்கு எழுதிய கடிதமும், அதற்கு ராஜாஜி எழுதிய பதிலும்:

    ஐயா... முன் பின் அறியாத நான், என் சிறிய வேண்டுகோளுக்குப் பதில் அளிப்பீர்களென்று நம்பி, என் கோரிக்கையை, உங்கள் சமூகத்திற்கு சமர்ப்பிக்கிறேன்.
    தங்களைப் போன்ற பேரறிஞர்களுக்குக் கடிதம் எழுத நான் பாத்திரனல்லன். ஆயினும், தங்கள் மேலுள்ள அளவற்ற மதிப்பினாலும், அன்பினாலும் தான், ந
    ம்பிக்கையுடன் இக்கடிதத்தை எழுத முன் வந்தேன்.
    "கல்கி'யில் தாங்கள் எழுதி வரும், "ரகுபதி ராகவ' கட்டுரையை, நான் ஆரம்பம் முதல் படித்து வருகிறேன். நானும், தங்களைப் போன்று, பாரத நாட்டுப் பிரஜை
    என்பதை நினைத்துப் பெருமைப்படுகிறேன்.
    நான் கிறிஸ்தவ சமயத்தைப் சேர்ந்தவன் என்பதை, என் பெயரைப் படித்ததுமே தெரிந்திருப்பீர்கள். தாங்கள் எழுதும் கட்டுரைகள் ஒவ்வொன்றும் உண்மையாகவே,
    என் மனதைத் தட்டி எழுப்புகின்றன.
    இப்பேர்ப்பட்ட உயரிய கருத்துக்கள், எங்கள் மத நூலாகிய பைபிளிலும் காணவில்லை. ஒரு வேளை, அது என் அறியாமையோ, என்னவோ... தெரியவில்லை.
    பைபிளைக் காட்டிலும், எத்தனையோ மடங்கு, சிறந்த ஆத்ம போதனையாகவே, நான் தங்கள் கட்டுரையை எண்ணுகிறேன்.
    எங்கள் பைபிள், மற்ற மதத்தவர்களைக் குறை கூறுகிறது. கேவலமாகவும் எழுதப்பட்டிருக்கிறது என்பதையும் நான் வெட்கத்துடன் ஒப்புக் கொள்கிறேன்.
    ஆனாலும், தாங்கள் எழுதியது போல குறைகளை விட்டு விட்டு, நன்மையானவற்றை படிக்க பிரயாசைப்படுகிறேன்.
    தாங்கள் நீடுழி காலம் வாழ்ந்து, என் போன்றவர்களுக்கு நல்ல போதனைகள் தருவதற்கும், அழிவுப் பாதையில் செல்லும் எங்களை, நல்வழிப்படுத்திக் காப்பதற்கும்,
    இறைவன் அருள்புரியும்படி வேண்டிக் கொள்கிறேன்.

    இதற்கு ராஜாஜியின் பதில்:

    ஆசிர்வாதம். உம்முடைய கடிதம், என் உள்ளத்தைக் கரைத்தது. ஆண்டவன் உமக்கு அருள்வாராக.
    பைபிளில் காணப்படும் கருத்துக்களை குறை கூற வேண்டாம். நன்றாகப் படித்துப் பார்ப்பீராயின், மிகச் சிறந்த கருத்துக்களைக் காண்பீர்.
    பிறந்த குலத்தில் மதிப்பு இழக்கலாகாது.
    பைபிளையும், இயேசுநாதரையும் நான் மிகவும் மதித்து வருகிறேன்; காந்தியும் மதித்தார்.
    சந்தோஷமாகவும், பக்தியுடனும் இயேசுநாதர் சரித்திரத்தை லூக், மாத்யூ, மார்க் முதலிய அத்தியாயங்களில் படிப்பீராக.
    ஆசியுடனும், அன்புடனும், ராஜகோபாலாச்சாரி.


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

  • #2
    Re: ராஜாஜி எழுதிய கடிதம்

    Thank you very much, NVS mama, for posting this here. All of us know Rajaji was a great exponent of hinduism and I have personally read his books on Bhagavad gita, Bhaja Govindam and also Hinduism - a doctrine and way of life, not to mention Ramayana & Mahabharatha. Despite being such a staunch Hindu, it takes a great man to be so respectful of other religions and now I see how well he practiced all that he has preached in his books. Thanks again!

    Comment


    • #3
      Re: ராஜாஜி எழுதிய கடிதம்

      நன்றி அன்பரே!
      தாங்கள் இதை எழுதியதும் எனக்கு மற்றொரு ஸம்பவம் நினைவிற்கு வருகிறது.

      கீழே உள்ளது ஒரு ப்ரபலம் சொன்னது.....

      "இதுவரையில் நான் ஏராளமாக சொற்பொழிவு செய்திருப்பேன். நான் தமிழில் பேசி ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துச் சொல்லப்பட்ட சொற்பொழிவு ஒன்றே ஒன்று தான்.

      சொற்பொழிவு நடந்த இடம் கவியரசர் ரவீந்திரநாத் டாகுரின் சாந்திநிகேதன். ஆங்கிலத்தில். மொழிபெயர்த்தவர் ரசிகமணி டி.கே.சி.



      வங்காள கவர்னராக ராஜாஜி 1947ல் பதவி ஏற்றபோது நாங்கள் கல்கத்தா சென்றிருந்தோம். ராஜாஜியின் விருந்தினராகத் தங்கும் பாக்கியம் கிடைத்தது. சாந்தி நிகேதனில் ராஜாஜிக்கு ஒரு வரவேற்பு நடந்தது. மிகவும் ரம்யமான வரவேற்பு. வங்காளத்தின் பெரிய பெரிய அறிஞர்கள் எல்லாம் கூடியிருந்த அந்தச் சபையில் என்னைப் பேசும்படி தலைமை வகித்த திரு. பி.சி. கோஷ் (முதன் மந்திரி) அழைத்தார். நான் திடுக்கிட்டுப் போனேன்.

      ராஜாஜியைப் பரிதாபகரமாகப் பார்த்தேன்.சும்மா தமிழிலேயே பேசுங்கள். ரசிகமணி ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பார்,’ என்று ராஜாஜி கூறினார். சரி’, என்று மைக் அருகில் வந்தேன். திடீரென்று ராஜாஜியே எழுந்து ஒரு மாலையை எனக்குப் போட்டார். சபையோரின் கரகோஷம் அடங்கக் கொஞ்ச நேரமாகியது. நான் ராஜாஜியின் அன்பினால் திணறித் திக்குமுக்காடிப் போய்ப் பேச்சை ஆரம்பித்தேன்.

      ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர் மூலம் இந்து மதத்திற்குப் புத்துயிர் உண்டாயிற்று. தமிழ்நாடு அப்பொழுது விழித்தெழுந்தது. அவர்கள் இருவரும் இந்த வங்காளத்தில் பிறந்தவர்கள். பின்னர் மற்றொரு வங்காள வீரர் விபின்சந்திர
      பாலர் சென்னைக்கு விஜயம் செய்து தம்முடைய ஆறு பிரசங்கங்களின் மூலம் தமிழ்நாட்டில் தேசபக்தியை உண்டாக்கினார்.

      தேசபந்து தாஸ் வக்கீல் தொழிலை விட்டு நாடு முழுதும் பெரிய கிளர்ச்சியை உண்டாக்கினார். ராஜாராம் மோகன் ராய், ரவீந்திரநாத் டாகுர், நேதாஜி போஸ்களால் தமிழ்நாட்டுக்கு எவ்வளவோ லாபம் ஏற்பட்டிருக்கிறது.

      சென்ற பல வருஷ காலமாக வங்காளம் எங்களுக்கு எத்தனையோ நன்மைகளைச் செய்திருக்கிறது. அப்பேர்ப்பட்ட வங்கத்திற்கு நாம் என்ன கைம்மாறு செய்யலாம், செய்ய முடியும் என்று ஏங்கிக் கொண்டிருந்தோம். ஆனால் அதற்கெல்லாம் வட்டியும் முதலுமாக எங்கள் ராஜாஜியைக் கவர்னராகக் கொடுக்கிறோம். ராஜாஜியை கவர்னராக அடைய இவ்வங்காளம் 150 வருஷ காலம் தவம் செய்திருக்க வேண்டும்,” என்று கூறிய போது, ராஜாஜிக்கு ஜே!’ என்று கோஷம் வானை அளாவியது.

      நானும் மரியாதையாக அத்துடன் பேச்சை முடித்துக் கொண்டேன். விழா முடிந்தது. கல்கத்தா திரும்பும் போது ராஜாஜி அவர்களிடம் நான், என்னை எதற்குப் பேசும்படி பணித்தீர்கள். ரசிகமணி டி.கே.சி. பேசினால் போதாதா?’ என்றேன். அதற்கு ராஜாஜி ரசிகமணி ஆங்கிலத்தில் பேசுவதாக இருந்தது. ஆகவே நம் தமிழ் மொழியை வங்காளிகள் தெரிந்து கொள்ள வேண்டுமல்லவா? அதற்காகத் தான் உங்களைப் பேசச் சொன்னது,” என்று சொல்லியபிறகு சிறிது மெளனமாக இருந்துவிட்டு,
      நானே உங்களுக்கு மாலை போட்டது ஏன் தெரியுமா?’ என்ற கேள்வியும் போட்டு பதிலையும் சொன்னார்.

      உங்களை இங்கு ஒருவருக்கும் தெரியாது. நீங்கள் பேசும்போது யாரோ என்று அசிரத்தையாக வங்காளிகள் இருந்துவிட்டால் உங்கள் தமிழை யாரும் கவனித்துக் கேட்க முடியாது. நான் மதித்து மாலை போடக்கூடிய ஆள் என்று தெரிந்து விட்டால் எல்லோரும் கவனமாகக் கேட்பார்கள் அல்லவா ? அதற்காகத்தான்,’ என்று கூறினார்.

      ராஜாஜியின் பெருந்தன்மையை நினைத்து உருகிப் போனேன்.


      ..... இப்படிச் சொன்னவர் யார் தெரியுமா?


      Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
      please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
      Encourage your friends to become member of this forum.
      Best Wishes and Best Regards,
      Dr.NVS

      Comment


      • #4
        Re: ராஜாஜி எழுதிய கடிதம்

        இப்படி சொன்னது யார் தெரியுமா என்று சொல்லி முடித்திருக்கிறீர்களே! தயவு செய்து அதையும் சொல்லி விடவும்......very curious to know.

        Comment


        • #5
          Re: ராஜாஜி எழுதிய கடிதம்

          Originally posted by pamrang View Post
          இப்படி சொன்னது யார் தெரியுமா என்று சொல்லி முடித்திருக்கிறீர்களே! தயவு செய்து அதையும் சொல்லி விடவும்......very curious to know.
          Thiru Chinna Annamlai Avargal


          Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
          please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
          Encourage your friends to become member of this forum.
          Best Wishes and Best Regards,
          Dr.NVS

          Comment

          Working...
          X