Announcement

Collapse
No announcement yet.

யானை - ஒட்டகச்சிவிங்கி.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • யானை - ஒட்டகச்சிவிங்கி.

    கஷ்டப்படக்கூடாது என்று பொத்தி பொத்தி வளர்க்கப்படுகிற பிள்ளைகள், பிற்காலத்தில் வெகுவாக கஷ்டப்பட நேரிடும். பெற்றோர்களோ அதைவிடக் கஷ்டப்பட வேண்டியது வரும்.
    யானை தன்னுடைய குட்டியை குழியில் தள்ளி, அக்குழியிலிருந்து மேலே வர பயிற்சி கொடுக்கும்.
    ஒட்டகச்சிவிங்கி குட்டி போடும் போது உயரமான இடத்தில் இருந்து குட்டி கீழே விழுகிறது. அந்த அதிர்ச்சியில், அசதியில் எழ முடியாமல் படுத்துக் கிடக்கும் குட்டியை, தாய் தன் பின்னங்கால்களால் பலமாக உதைக்கும். குட்டி எழுந்து ஓடும் வரை விடாது. ஓடத் தெரியாத விலங்கால் உயிர் தப்ப முடியாது. மிகப் பெரிய வாழக்கை கஷ்டத்திலிருந்து குட்டியை காப்பாற்ற தாயே கஷ்டப்படுகிறது.
    --- ச.தவமணித்தாய், திருச்சி.
    -- தினமலர் . பெண்கள் மலர். 8. 6. 2013.
Working...
X