Announcement

Collapse
No announcement yet.

திண்ணை!

Collapse
X
 
 • Filter
 • Time
 • Show
Clear All
new posts

 • திண்ணை!

  நீங்காத நினைவுகள்' நூலிலிருந்து: கவும் உணர்வு பூர்வமான சோகப்பாடல் அது!
  நடிகர் சிவாஜி கணேசன் பாடுவதாக வரும் அப்பாடலை வழக்கம் போல் டி.எம்.சவுந்தர்ராஜனைப் பாட வைக்காமல், வேறொரு பாடகரை பாட வைத்தார் எம்.எஸ்.விஸ்நாதன். அதை ஏற்றுக் கொண்டார் சிவாஜி. பாடல் காட்சி படமாக்கப்பட்ட பின், அதை திரையில் போட்டு பார்த்த போது, பாடகரின் குரல் மற்றும் சிவாஜியின் நடிப்பு இரண்டுமே நன்றாக இருந்தும், ஏதோ ஒன்று குறைவது போல தோன்றியது. அதனால், எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு அப்பாடல் காட்சியை போட்டு காட்டினர். அதை பார்த்த எம்.எஸ்.வி., 'சிவாஜியின் செழுமையான நடிப்போடு, அக்குரல் ஒட்டவில்லை...' என்றார்.
  'பாடல் காட்சியை படமாக்கி முடித்து விட்டோமே... இனி என்ன செய்வது...' என்று எல்லாருக்கும் குழப்பம். திடீரென, எம்.எஸ்.வி.,க்கு ஒரு எண்ணம் தோன்றியது.
  உடனே, டி.எம்.சவுந்திரராஜனை ஸ்டுடியோவுக்கு அழைத்து வந்தார். சிவாஜி நடித்த காட்சியை திரையில் ஓட விடச் சொன்னவர், சிவாஜியின் வாய் அசைவிற்கு ஏற்ப, அப்பாடலை பாடும்படி டி.எம்.எஸ்.,சிடம் வேண்டுகோள் விடுத்தார். மிகவும் சவாலான வேலை இது.
  அக்காலத்தில், இன்றைக்கு இருப்பதை போன்ற அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் இல்லை. இருப்பினும், சிவாஜியின் வாய் அசைவையும், முக பாவங்களையும் நன்கு கவனித்து, அப்பாடலை பாடி முடித்தார் டி.எம்.எஸ்.,
  டி.எம்.எஸ்.,சை கை கொடுத்து பாராட்டினார் எம்.எஸ்.வி., அப்பாடல், அவர்கள் இருவருக்கும் ஒரு சவாலான அனுபவம் மட்டுமல்ல, வித்தியாசமான அனுபவமும் கூட!
  வழக்கமாக, டி.எம்.எஸ்., பாடிய பாடலுக்கு ஏற்ப, வாய் அசைப்பார் சிவாஜி. ஆனால், இதில் அப்படியே தலைகீழாகி, சிவாஜியின் வாய் அசைவிற்கு ஏற்ப, டி.எம்.எஸ்., பாடினார்.
  டிஜிட்டல், ஸ்டீரியோ, நவீன டிராக் சிஸ்டம் போன்ற அதிநவீன வசதிகள் இல்லாத அக்காலத்தில், திறமையையும், தன்னம்பிக்கையையும் மட்டும் நம்பி, இச்சாதனையை படைத்த இவ்விருவரும், தமிழ்த்திரை இசையின் அதிசயங்கள். இந்த இசை அதிசயங்களின் கூட்டணியில் பதிவான அப்பாடல் எது என்று கேட்கிறீர்களா?
  கவுரவம் படத்தில் இடம் பெற்ற, பாலூட்டி வளர்த்த கிளி... என்ற பாடல் தான்!


  ஜுபிடர் பிக்சர்சில், ஆபிஸ் பாயாக மாதம், மூன்று ரூபாய் சம்பளத்திற்கு வேலைக்கு சேர்ந்தார் எம்.எஸ்.விஸ்வநாதன். அவ்வப்போது சிறு சிறு வேடங்களிலும் நடித்து வந்தவர், பின், இசையமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா நாயுடுவிற்கு உதவியாளராக சேர்ந்தார்.
  கடந்த 1948ல் வெளிவந்த, அபிமன்யு என்ற படத்தில், திருச்சி லோகநாதன் பாடுவதாக இருந்த ஒரு பாட்டுக்கு சுப்பையா நாயுடு போட்ட, 'டியூன்' எதுவும் சரிவரவில்லை. மதிய இடைவேளையின் போது, ஆர்மோனியத்தை எடுத்து, அப்பாட்டுக்கு அழகாய் ஒரு மெட்டுப் போட்டு இசையமைத்துக் கொண்டிருந்தார் எம்.எஸ்.வி.,
  அதைப் பார்த்ததும், சுப்பையா நாயுடுவின் முகம் மலர்ந்தது. எம்.எஸ்.வி.,வை தட்டிக் கொடுத்து, அவரின் இசை ஞானத்தை புகழ்ந்து, அவர் போட்ட மெட்டையே இசையமைத்தார் சுப்பையா நாயுடு.
  புது வசந்தமாமே வாழ்விலே இனி புதிதாய் மணமே பெறுவோமே... இதுதான் எம்.எஸ்.வி., இசையமைத்த முதல் பாட்டு. படத்தில் எம்.எஸ்.வி., பெயர் இடம் பெறவில்லை. இதேபோன்று, பல படங்களுக்கு சுப்பையா நாயுடுவிற்கு இசையமைத்துக் கொடுத்தார்
  எம்.எஸ்.வி., ஆனாலும், அவர் பெயர் வராமல் சுப்பையா நாயுடுவின் பெயரே இடம் பெற்றது.
  ஒருவழியாக, எம்.எஸ்.வி.,யின் திறமையை பற்றியும், அவர் இசையமைத்த பாடல்களை பற்றியும் ஜுபிடர் பிக்சர்ஸ் முதலாளியிடம் கூறிய சுப்பையா நாயுடு, 'இவன் சாதாரண ஆளு இல்ல; மிகப் பெரிய ஆளா எதிர்காலத்தில் வருவான்...' என்று மனதார பாராட்டி, சென்னைக்கு அனுப்பி வைத்தார்.
  இசையமைப்பாளர் சி.ஆர்.சுப்பிரமணியத்திடம் சேர்ந்தார் எம்.எஸ்.வி., அப்போது, அந்த இசைக்குழுவில் டி.கே.ராமமூர்த்தி, டி.ஜி.லிங்கப்பா மற்றும் கோவர்த்தனன் ஆகியோர் உதவியாளர்களாக இருந்தனர். சொர்க்க வாசல் மற்றும் தேவதாஸ் போன்ற படங்களுக்கு, இவர்களோடு சேர்ந்து பணியாற்றினார் எம்.எஸ்.வி., டி.கே.ராமமூர்த்தி - கோவர்த்தனன் இவர்களுடன் இணைந்து, திரை இசை உலகில் தனக்கென ஒரு மாபெரும் ராஜாங்கத்தையே உருவாக்கி, வெற்றிவாகை சூடினார் எம்.எஸ்.வி.,


  நடுத்தெரு நாராயணன்


  Dinamalar
Working...
X