Announcement

Collapse
No announcement yet.

'வாழ்ந்தாலும் ஏசும்: தாழ்ந்தாலும் ஏசும், ī

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • soundararajan50
    replied
    Re: 'வாழ்ந்தாலும் ஏசும்: தாழ்ந்தாலும் ஏசும், &

    உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீதான் நீதிபதி மனிதன் எதையோ பேசட்டுமே மனசை பார்த்துக்க நல்லபடி உன்மனசைப் பாத்துக்க நல்லபடி என்ற வரிகள் தான் நினைவுக்கு வருகிறது

    Leave a comment:


  • 'வாழ்ந்தாலும் ஏசும்: தாழ்ந்தாலும் ஏசும், ī

    அனுசரித்துப் போவதை அடிமைத்தனம் என்பதா?நம் நிலைப்பாடுகள்

    பல நேரங்களில், கேலி செய்யப்படுவதையும், கேள்விக்குரியதாக ஆவதையும் பார்க்கிறோம்; அனுபவிக்கிறோம்.போதுமென்ற மனதோடு, இருப்பதை வைத்து திருப்தி அடைந்தால், 'முன்னேற்றத்தில் அக்கறை இல்லாதவர்கள்...' என்கிறது இச்சமூகம்.


    உணர்வுபூர்வமான சச்சரவுகளின் போது, பொறுமையை கடைப்பிடித்தால், 'உனக்கு ரோஷமே வராதா...' என்கின்றனர் நண்பர்கள்.பெருந்தன்மையோடு, நமக்கு தெரிவிக்கப்படாத வீட்டின் துக்கத்தில் பங்கேற்றால், 'வெட்கமே கிடையாதா...' என்கின்றனர் உறவினர்கள். இப்படியே குடும்ப உறுப்பினர்களுடனோ, கணவன் - மனைவிக்குள்ளோ, வீட்டு உரிமையாளருடனோ, சக பங்குதாரருடனோ மற்றும் சம்பந்தியுடனோ அனுசரித்து, அரவணைத்துப் போனால், 'ஏன் இந்த அடிமைத்தனம்?' என்று வினவுகின்றனர்.'ஊர் இப்படி, நாக்கில் நரம்பு இன்றி பேசுகிறதே...' என்று நாம் நான்கு கேள்வி கேட்டாலோ, கதை கந்தலாகி, உணர்ச்சிவசப்பட்டது தவறோ என ஆகிவிடுகிறது.

    அப்படியானால் என்ன தான் செய்வது, இதற்கு தீர்வு தான் என்ன?'வாழ்ந்தாலும் ஏசும்: தாழ்ந்தாலும் ஏசும், வையகம் இது தானடா...'- என்றார் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். எனவே, வையகத்தின் குற்றச்சாட்டிற்கு, எந்த அளவு மதிப்பு தருவது என்பதை, முதலில், நாம் முடிவு செய்ய வேண்டும்.

    எல்லா சலசலப்புகளுக்கும், நாம் ஆட்டம் போட வேண்டிய அவசியமில்லை. குரல்கள் தொடர்ந்தும், அழுத்தமாகவும் வர ஆரம்பிக்கும் போது, ஊராரின் கூக்குரலை, சற்று பரிசீலிக்க ஆரம்பிக்கலாம்.நம் பார்வைகளோ, பல்நோக்கு உடையவை; நம்மை விமர்சிப்பவர்களின் பார்வைகளின் போக்கோ, ஒரு நோக்கை மட்டுமே கொண்டது.இக்கோணத்தில் ஏதேனும் சொல்லி வைக்க வேண்டுமே என்று, இவர்கள் வாய்க்கு வந்ததை பேசுகின்றனரா அல்லது நம்மீது குறை கண்டு, 'உன்னை விட, நான் திறமைசாலி...' என்று காண்பித்து கொள்கின்றனரா அல்லது உண்மையான அக்கறையுடன் தான் பேசுகின்றனரா என்பதை முதலில் பிரித்து அறிய வேண்டும்.

    அடுத்ததாக, போகிற போக்கில், ஏதேனும் கூறுவோருக்கும், நாம் மாற வேண்டும்; அந்த மாற்றம் உடனே நிகழ வேண்டும் என்று எதிர்பார்ப்போருக்கும் இடையே உள்ள வேறுபாட்டை, முதலில் பிரித்தறிய வேண்டும்.இந்த இரண்டிற்கும் தீர்வு கண்டுவிட்டால், நாம் போடும் கணக்கிற்கு, பாதி விடை கிடைத்து விடும்.

    நம் குறைபாடுகள், நமக்கு தெரிவது இல்லை; பிறர் சுட்டிக் காட்டும் போது தான், தவறான திசையில் பயணிக்கிறோம் என்று தெரிகிறது.அனுசரித்து போவது என்றால், பலர் கருதுவது போல், அடிமைத்தனம் அல்ல; கடுங்காற்றில் அனைத்தும் வேரோடு பிய்த்துக் கொள்ள, நாணல் மட்டும் தப்பிக்கும் கதைதான், அனுசரித்து போகிற கதை!மறுத்து குரல் கொடுக்காதது, எதிர் கருத்தே இல்லாமல் இருப்பது, அடித்தால், 'இன்னும், நான்கு போடுங்கள்...' என முதுகைக் காட்டுவது, பலர் முன்னிலையில் நிகழ்த்தப்படும் அவமானங்களையும், மவுனமாக ஏற்று கொள்வது மற்றும் எதிராளியின் எல்லா செயல்களையும் சகித்து கொள்வது என்று நீட்டி கொண்டே போகும் பட்டியலை, அடிமைத்தனத்தின் இலக்கணங்கள் என்று கருதுவோர், இன்றைய வாழ்வியலை உணராதவர்கள்.

    ரெட்டை மாட்டு வண்டியில், ஒரு மாடு சண்டித்தனம் செய்தாலும், பயணம் பாழ்பட்டு விடுமே என்கிற, நெடுநோக்கின் சிந்தனையோடும், நம் மன நிம்மதிக்காகவும், கவுரவத்திற்காகவும், சில சுயநலங்களை பேணுவதற்காகவும், எல்லாவற்றையும் விட, நல்லுறவு முக்கியம் என்பதற்காகவும், சரி சரி என, சகித்துப் போவதை, இந்த உலகம் என்ன வேண்டுமானலும், பெயரிட்டு அழைக்கட்டும்; இதைப்பற்றி நமக்கு கவலையில்லை.

    உடனே, பெரிதாக பிரதிபலித்து, நாடகம் காட்டி, சீன் போடுவதையே மானஸ்தன், கவரிமான் என்று, இந்த உலகம் பெயர் சூட்டி மகிழ்கிறது; இது தற்காலிக இன்பமே!ஆங்கிலத்தில், 'இறுதி சிரிப்பு' என்று ஒரு வாக்கியம் உண்டு. இந்த இறுதி சிரிப்பு சிரிக்க, காரியங்கள் கைகூட உணர்வுகளை தள்ளி போட்டாக வேண்டும்; இது, இறுதி சிரிப்பிற்கு மட்டுமல்ல, நிரந்தர வெற்றிக்கும் வழிவகுக்கும்!

    லேனா தமிழ்வாணன்
    Last edited by S Viswanathan; 15-01-16, 10:19.
Working...
X