Announcement

Collapse
No announcement yet.

Slokas to make children study better

Collapse
X
 
 • Filter
 • Time
 • Show
Clear All
new posts

 • Slokas to make children study better

  சாந்தி எனும் பெண்மணி கோயமுத்தூரிலிருந்து சமீபத்தில் கடிதம் மூலமாக ஒரு வினாவை எழுப்பியிருந்தார். அந்த கடிதத்தின் சாரம்சம் இது. அவரது 16 வயதுடைய மகள் பத்தாம் வகுப்பில் படிக்கிறாள். நல்ல புத்திசாலிப் பெண். ஆனால் படிப்பில் நாட்டமில்லாமலும், எதற்கெடுத்தாலும் அவசரப்படுவதும், கோபப்படுவதும், வாக்குவாதம் செய்வதுமாக இருக்கிறாள். ஒரு இடத்தில் ஐந்து நிமிடங்கள் கூட நிலையாக இருக்கமாட்டாள். அவள் நன்கு படித்து, நற்குணத்துடன் வாழ்வில் முன்னேற ஆயுர்வேதம் காட்டும் வழிமுறைகள் என்ன என்று கேட்டு எழுதி இருந்தார்.
  பத்மபுராணத்தில் சரஸ்வதி தேவிக்கும், பிருஹஸ்பதிக்கும் இடையே ஒரு சம்பாஷணை நடக்கிறது. இந்த சம்பாஷணையை ஒரு ச்லோகவடிவத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. இதை காலையில் தினமும் பாராயணம் செய்யும் பள்ளிக்குழந்தைகளுக்கு வித்யாலாபம், பேச்சுவன்மை மற்றும் ராஜசம்மானமும் கிட்டும் என்று கூறப்படுகிறது. சரஸ்வதி தேவி அந்தக் குழந்தைகளில் தொண்டையில் வந்து வாசம் புரிவதாகவும் சொல்லப்படுகிறது. இதைச் சொல்லிக்கொடுத்து குழந்தைகளுக்கு படிப்பில் நாட்டத்தை ஏற்படுத்தலாம். அதற்கான ச்லோகம்
  ஸரஸ்வதீம் நமஸ்யாமி சேதனானாம் ஹ்ருதிஸ்த்திதாம்।
  கண்டஸ்த்தாம் பத்மயோனேஸ்து ஹிமாகரப்ரியாஸ்பதாம்।।1।।
  மதிதாம் வரதாம் சுத்தாம் வீணாஹஸ்தவரப்ரதாம்।
  ஐம் ஐம் மந்த்ரப்ரியாம் ஹ்ரீம் ஹ்ராம் குமதித்வம்ஸகாரிணீம்।।2।।
  ஸுப்ரகாசாம் நிராலம்பாம் அக்ஞான திமிராபஹாம்
  சுக்லாம் மோக்ஷப்ரதாம் ரம்யாம் சுபாங்காம் சோபனப்ரதாம்।।3।।
  பத்மோபவிஷ்டாம் குண்டலினீம் சுக்லவர்ணாம் மனோரமாம்
  ஆதித்யமண்டலே லீனாம் ப்ரணமாமி ஹரிப்ரியாம்।।4।।
  இதி மாஸம் ஸ்துதானேன வாகீசேன மஹாத்மனா
  ஆத்மானம் தர்சயாமாஸ சரதிந்து ஸமப்ரபாம்।।5।।
  ஸரஸ்வதீ உவாச
  வரம் வ்ருணீஷ்வ பத்ரம் தே யத்தே மனஸி வர்த்ததே।।
  ப்ருஹஸ்பதி
  வரதா யதி மே தேவி ஸம்யக் ஞானம் ப்ரயச்ச மே।।
  ஸரஸ்வதீ
  இதம் தே நிர்மலம் ஞானம் அக்ஞானதிமிராபஹம்।
  ஸ்தோத்ரேணானேன மாம் ஸ்தௌதி ஸம்யக்வேதவிதோ நர:।।6।।
  லபதே பரமம் ஞானம் மம துல்ய பராக்ரமம்
  த்ரிஸந்த்யம் ய: படேந்நித்யம் யஸ்த்விதம் ஜபதே ஸதா।।7।।
  தேஷாம் கண்டே ஸதா வாஸம் கரிஷ்யாமி ந ஸம்சய:।।8।।
  இதி ஸம்பூர்ணம்.
  இந்த ச்லோகத்திற்கான தமிழ் அர்த்தம்
  ஜீவிதஹ்ருதயத்தில் இருப்பவளாயும், ப்ரம்ஹாவின் கண்டத்தில் இருப்பவளாயும், எப்பொழுதும் சந்திரனுக்கு ப்ரியமுள்ளவளாயும் பிரகாசிக்கும் ஸ்ரீசரஸ்வதீ தேவியை நமஸ்கரிக்கிறேன்.
  நல்லறிவை கொடுப்பவளாயும், உயர்ந்தவைகளைக் கொடுப்பவளாயும், பரிசுத்தமானவளாயும், கையில் வீணாவாத்யத்துடன் விரும்பியதைக் கொடுப்பவளாயும், ஐம் ஐம் ஹ்ரீம் ஹ்ராம் என்ற மந்திரத்தில் ப்ரியமுள்ளவளாயும், கெட்டபுத்தியை நாசம் செய்பவளாயும், நல்ல ப்ரகாசத்துடன் கூடியவளாயும், யாரையும் சாராதிருப்பவளாயும், அக்ஞானமாகிற இருட்டைப் போக்குகிறவளாயும், வெண்மையாயும், மோட்சத்தை கொடுப்பவளாயும், மிக்க அழகியவளாயும், அழகான உடலோடு கூடியவளாயும், மங்களத்தைக் கொடுப்பவளாயும், தாமரையில் இருப்பவளாயும், காதுகளில் அழகிய தோடுகளை அணிந்தவளாயும், வெண்மை நிறத்துடன் மனதிற்கு ஸந்தோஷத்தை அளிப்பவளாயும், ஸூர்ய மண்டலத்தில் இருப்பவளாயும் விஷ்ணுவுக்கு ப்ரியையாயும் உள்ள ஸரஸ்வதீ தேவியை நமஸ்கரிக்கின்றேன்.
  இவ்வாறு ஒருமாத காலம் ஸ்ரீப்ருஹஸ்பதி பகவானால் ஸ்தோத்திரம் செய்யப்பட்ட, சரத்காலசந்திரனுக்கொப்பான காந்தியோடு கூடிய ஸ்ரீவாக்தேவியானவள் அவருக்கு சொரூபத்துடன் காட்சி அளித்தாள்.
  ஸ்ரீஸரஸ்வதி கூறியதாவது
  உன்னுடைய மனதில் விரும்பியதை வேண்டிக்கொள். உனக்கு மங்களம் உண்டாகட்டும்.
  ஸ்ரீப்ருஹஸ்பதி பிரார்த்திப்பதாவது
  என்னுடைய விருப்பத்தைப் பூர்த்தி செய்யக்கூடிய தேவி, எனக்கு நல்ல அறிவைக் கொடுத்து அருள்புரிவாயாக.
  ஸரஸ்வதியின் அனுக்ரஹம்
  அக்ஞானமாகிற இருளைப்போக்கக்கூடிய பரிசுத்தமான ஞானம் உனக்குக் கிட்டும்.
  நான்கு வேதம் அறிந்தவன் இந்த ஸ்தோத்திரத்தால் என்னை நன்கு ஸ்துதிசெய்தால் என் ஞானத்திற்கு ஒப்பான பரம உத்தம ஞானத்தை அடைகிறான். ப்ரதி தினம் மூன்று காலங்களிலும் இந்த ஸ்தோத்ரத்தை ஜபம் செய்கிறவர்களின் தொண்டையில் நான் வசிப்பேன் என்பதில் எந்தவொரு சந்தேஹமும் இல்லை.
  மேற்குறிப்பிட்ட இந்த மந்திரத்துடன் ஆயுர்வேதமூலிகை மருந்தாகிய சாரஸ்வதக்ருதம் எனும் நெய்மருந்தை ஒரு ஸ்பூன் அளவில் எடுத்து அரை ஸ்பூன் சாரஸ்வதசூரணத்துடன் குழைத்து கால் ஸ்பூன் சுத்தமான தேனும் விட்டு நன்றாகக் கலந்து காலை, இரவு உணவிற்கு நடுநடுவே நக்கிச் சாப்பிடும்படி உபதேசிக்கவும். இதன்மூலம் தேவையற்ற வாக்குவாதம் செய்தல், கோபப்படுதல், மனஅமைதியில்லாதிருத்தல், படிப்பில் நாட்டமின்மை போன்றவை குறைந்து நற்குணத்துடன் வாழ்வில் முன்னேற வழிவகுக்கும்.

  எஸ்.ஸுவாமிநாதன்,

 • #2
  Re: Slokas to make children study better

  இந்த ஸ்லோகத்தை படித்து எல்லோரும் பயன்பெறவேண்டும்

  Comment

  Working...
  X