Announcement

Collapse
No announcement yet.

Fear

Collapse
X
 
 • Filter
 • Time
 • Show
Clear All
new posts

 • Fear

  Fear
  courtesy:http://www.dinamalar.com/supplementa...at=748&Print=1
  ஓட்டுக் கேட்ட பேச்சுக்கள், அவற்றிற்கு ஒட்டாத பதில்கள் என்று இந்த கட்டுரை மலர்கிறது.
  யாரோ ஒரு மாமி: மாடியிலே வடாம் பிழிந்து உலர்த்தி இருக்கிறேன். மேகமாக இருக்கிறது. பயமாக இருக்கிறது. மழை வந்து விடுமோ?
  ஒட்டாத பதில்: மாசி, பங்குனியை விட்டு விட்டு இப்பொழுது வடாம் போட்டால்....?


  ஒரு அப்பா: பையனுக்கு வயது 18 என்று, ஸ்கூட்டர் வாங்கி தந்தேன். அவன் வெளியில் போனால் வரும் வரை பயமாக இருக்கிறது.
  ஒட்டாத பதில்: எதற்கு ஸ்கூட்டர்? மாமி இடுப்பிலே வைத்துக்கொண்டு, பருப்பு சாதத்தை ஊட்டட்டும்.


  ஒரு மாணவன்: நாளை ரிசல்ட் வருகிறது. பயமாக இருக்கிறது.
  ஒட்டாத பதில்: படிக்கிற நாட்களில் ஊர்சுற்று. இப்ப பயமா?


  ஒரு அம்மா: டேய் ஒழுங்காக சாப்பிடுகிறாயா? பூச்சாண்டிக்கிட்ட் பிடித்து தரட்டுமா?


  அடுத்த அம்மா:இப்படி எல்லாம் பண்ணினால் சாமி கண்ணைக் குத்தும்
  ஒட்டாத பதில்: அம்மாக்களே கணவனை பயந்தாங்கொள்ளி, கோழை என்று திட்டுங்கள். குழந்தையை பயமுறுத்தி வளர்க்கலாமா?


  இந்த எல்லா பேச்சுககளுக்கும் அடித்தளமாக இருக்கிறது பயம். என்ற உணர்ச்சி தான். இறந்த கால்ததை நினைத்தால் சேகம் அல்லதுமகிழ்ச்சி வருகிறது. பயம் இல்லை. முடிந்து போன நிகழ்ச்சிகளில் பயப்பட என்ன இருக்கிறது.? நிகழ் காலம் என்பது நதியில் நீந்துவது போல, தெருவில் ஓடுவது போல, காலத்துடன் ஓடும் ஓட்டம். எதிர் காலத்தில் என்ன நிகழுமோ, அதுவும் துயரத்தை தருவதாக எதுவும் நிகழுமோத என்ற கற்பனை தான் பயத்திற்கு ஆதாரம். மேலே குறிப்பிட்ட சிறிய நஷ்டமான வடாம் நனைவது, பெரும் துயரமான பையனின் துர்மரணம். இடைப்பட்ட வீரியத்துடன் கூடிய பரிட்சை தோல்வி எல்லாமே கற்பனையில் விபரீத கற்பனையில் விளைந்த பயம் தான். விலங்குகளுக்கு ஓர் அளவு தான் பயம் உண்டு. உணவு கிடைக்க வேண்டுமே என்ற பயம். மற்ற விலங்குகள் கொல்ல வரும் போது, உயிர் பயம் இவை தான் உண்டு. அறறிவு பெற்ற மனிதன் தான் முதுஐம குறித்து அஞ்சுகிறான். தான் அனுபவிக்கின்ற வசதிகள், செல்வம், குறைந்து விடுமோ என்று அஞ்சுகிறான். தனது மரணம் உறவினர்கள் இறந்து விட்டால் வரக்கூடிய தனிமை என்று எல்லாம் நினைத்து, நினைத்து பயப்படுகிறான்.


  உண்பது நாழி உடுப்பது நான்கு முழம்
  எண்பது கோடிநினைந்து எண்ணவன கண்புதைத்த
  மாந்தர் குடிவாழ்க்கை


  இந்த பய உணர்ச்சி குறித்து நமது முன்னோர்கள் நிறை ஆராய்ச்சி செய்து இருக்கிறார்கள். பத்ருஹரி என்ற ஞானி தனது வைராக்ய சதகம் என்ற நூலில் பயம் பற்றி விளக்கி இருக்கிறார். நாணயத்தின் மறுப்பக்கம் போல மனிதனின் எல்லா அனுபவங்களிலும் பயம் மறைந்திருக்கிறது. வசதிகளை அதாவது போகங்களை அனுபவிக்கும் போது அந்த இன்பம் தடைப்படுமோ அதிகமாக பயன்படுத்தும் இந்திரியம் இயற்கை நியதிப்படி நோயுறுமோ என்ற பயப்படுகிறான். நாமே பார்க்கிறோமே. அதிகமாக கணிணியை பயன்பவுத்துவோருக்கு பார்வை குறைப்பாடு வருகிறதே. நல்ல குடியில் பிறந்தோம். நம்மால் குலப்பெயர் கெடக்கூடாதே. நம் மக்கள் நல்லப்படி திருமணம் செய்து கொள்ள வேண்டும். என்றெல்லாம் பயம். செல்வம் சேருமிடத்தில் கள்வர் பயம். அரசனிடம் பயம். வரி வரூல் அதிகாரிகளிடம் பயம். புகழ் வந்தால் அது நிலைக்க வேண்டுமே என்ற பயம். பலவானுக்கு பகைவனிடைம் தோற்ககூடாது என்ற பயம். அழகிக்கு முதுமையிடம் பயம். அறிஞனிடம் பயம். குணவாளனுக்கு தன்னை விரும்பாதவனிடம் பயம். நல்ல உடலுடன் வாழும்போது மரண பயம் என்று மனிதனுக்கு எங்கும் எதிலும் பயமாம். வைராக்கியம் ஒன்றுதான். இந்த நிலையற்றவற்றிடம், ஏன் மனதை வைக்க வேண்டும் என்ற வைராக்கியம் ஒன்றுதான் அபயமாம்.


  போகே ரோகபயம் குலே சுதிபயம் வித்தே ந்ருபாலாத்பயம்
  மானே தைன்யபயம் பலே ரிபுபயம் ரூபே ஜராபயம்
  சாஸ்த்ரே வாதி பயம் குணே கலபயம் காயே க்ருதாந்தபயம்
  சர்வம்வஸ்து பயான்விதம் புவி நிர்ணாம் வைராக்யமே
  அபயம்

  என்பது பத்ருஹரியாரின் பாடல்.
  எல்லா பயங்களிலும் பெரியது மரண பயம். மிகுந்த உடல் வலிமை உள்ள அசுரர்கள் கூட, கடுமையான தவங்களை செய்து வரம் பெற்றதே. தம்மை யாரும் எளிதில் கொன்றுவிடக்கூடாது என்ற தற்காப்பு பயத்தால் தான் இரணியகசிபு இரவிலும் பகலிலும் வீட்டிலும் வெளியிலும் மனிதனாலோ, மிருகத்தாலோ மரணம் வரக்கூடாது என்று பெற்ற வரம் அவனது பயத்தில் ஆழத்தை காட்டுகிறது. தான் யார் தலையில் கை வைத்தாலும் அவர்கள் சாம்பலாம் வேண்டும் என்று பஸ்மாகரன் பெற்ற வரம். பின்னால் அவனையே அழித்தது. ஆனால் அவன் வரம் பெற்றதே பயத்தால் தானே? பெண்களால் தன்னை கொல்ல முடியாது என்ற நிலையில் நரகாசுரன் தனக்கு பெண்ணால் தான் அழிவு வர வேண்டும் எனக்கேட்டு, பின் பெண்ணாலே அழிந்தான். நமக்கு தீபாவளி பண்டிகை பிறந்தது. அவன் பயத்தால் தானே தவம் சய்து வரம் கேட்டான். அசுரர் மட்டுமா? ஞானிகளுமே சில நேரங்களில் சாவிற்கு அஞ்சினர். பல நேரங்களில் தெளிவு பெற்று மக்களை தைரியப்படுத்தும் மனநல மருத்துவராக நாவுக்கரசர் நாமார்க்கும் குடியல்லேம் நமனை அஞ்சோம் எனப்பாடினார்.


  தண்டாயுதமும் திரிசூலமும் விழத்தாக்கி உன்னைத்
  திண்டாட வெட்டி விழவிடுவேன் செந்தில் வேலவனுக்குத்
  தொண்டாகிய என அவிரோத ஞானச்சுடர்வடிவாள்
  கண்டாய் அடா! அந்தகா! வந்து பார் சற்று என்
  கைகெட்டவே


  என்றும் கொடுங்கூற்று என்செய்யும் என்றும்
  பட்டிக்காடாவில் வரும் அந்தகா! உன்னை பார் அறிய
  வெட்டிப் புறங்கண்டு அலாது விடேன்...
  கட்டிப் புறப்படடா!
  என்றும் அருணகிரிநாதர் யமனை அறைகூவி மிரட்டினார். பாரதியாரோ
  காலனைக் காலால் உதைப்பேன் என சூளுரைத்து
  உச்சிமீது வானிடிந்து விழுகின்ற போதிலும்
  அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
  என்று ஆடிப்பாடினார். இவர்கள் எல்லோருமே நமது பயத்தை போக்கவந்த மனநல மருத்துவர்களே. இந்த மரண பயத்துடன் எப்படிப்பட்ட மரணம் வந்துவிடுமோ என்ற பயம் வேறு மனிதனை வாட்டிகிறது. பொசுக்கென்று போக வேண்டும். பல்ப் அனைவது போல் உயிர் ஒடுங்கவேண்டும் என்றெல்லாம் நாம் மட்டுமா கூறுகிறோம். சிதம்பரசுவாமிகளே அப்படித்தான் வரம் கேட்கிறார்.


  நோயுற்ற அடராமல் நொந்து மனம் வாடாமல்
  பாயில் கிடக்காமல் பாவியென் தேகத்தை
  ஓர்நொடிக்குள் நீக்கியெனை என் போரூரா
  நின் சீறடிக்கீழ் வைப்பாய் தெரிந்தே


  என்று உறுகுகிறார்.
  மரண பயம் மட்டுமல்ல. எல்லாப் பொருள்களிலும் பயம் நாணயத்தின் மறுபக்கமாக மறைந்திருக்கிறது. ஆதிசங்கரர் சொல்கிறார். பொருள் நிறைய இருந்தால் மகன்களைக் கண்டே அஞ்சுவானாம் மனிதன். "புத்ராதபி ஜனபாஜா பீதி' சம்பள நாளன்று பத்திரமாகப் பணத்தை வீடு கொண்டு சேர்க்க வேண்டும் என்பது ஒரு பயம். நல்ல பொருளை காப்பாற்றுவதில் பயம். பொருளின் மதிப்பிற்கேற்ப பயம் கூடுகிறது. கல்லை வீசி எறிவோம். வைரத்தை வீச முடியுமா? பூட்டிப் பாதுகாக்கிறோம். யாசகன் தெருவோரத்தில் அயர்ந்து உறங்குகிறான் பயமின்றி, கவலை இன்றி. செல்வந்தருக்கு மெத்தென்ற பஞ்சயணத்தில் உறக்கம் வரவில்லை. பயம். கவலை. வறுமை தான் துன்பம் என்றால், பொருளை ஈட்டலும் காத்தலும் கூட துன்பமாக அன்றோ இருக்கின்றன. நாலடியார் கூறுகிறார்.


  ஈட்டலும் துன்பம்மற் றீட்டிய ஒண்பொருளை
  காத்தலும் ஆங்கே கடுந்துன்பம் காத்த
  குறைபடின் துன்பம் கெடின் துன்பம் துன்பக்கு
  உறைபதி மற்றைப் பொருள்.


  மனிதனுக்கு வரவர சாத்திரங்கள் சொல்லும் உபதேசங்களில் பயமும், நம்பிக்கையின்மையும் வந்துவிட்டன. சத்தியம் வத - உண்மையே பேசு என்றால் அரிச்சந்திரன் உண்மை பேசி என்ன பாடுபட்டான் என்கின்றனர். அவன் அழியாப் புகழுடன் இன்றும் இருக்கிறானே. அதைப் பார்க்கக் கூடாதா? இந்தக் காலத்தில் எபபடி முடியும் என்ற பயத்தால், நம்பிக்கை குறைகிறது. காரணம், குழந்தைப் பருவத்திலிருந்தே பெற்றோர் போனில் பேசும் பொய்களைக் கேட்டு, நேரில் கூறும் பசப்பு மொழிகளைக் கேட்டு கலை, அறிவாற்றலின் அளவுகோலே பொய் தான் என்று முடிவே கட்டி விடுகிறார்கள். தனிமையில் இரு. உயர் சிந்தனைகளில் மனதைச் செலுத்து என்றால் தன்னைக் கண்டே பயப்படுகிறார்கள். தொலைக்காட்சிப் பெட்டியாவது அலறிக்கொண்டே இருக்க வேண்டும் இவர்களுக்கு. தேவையற்ற பொருள்களை வாங்காதே என்றால் எப்படி? வரவேற்பறையிலேயே வந்து கூவிக் கூவி விற்கிறதே தொல்லைக் காட்சிப் ப்டறடி. எனது, எனது என்ற நினைப்புக்கூடக் கூட, பற்று வளர, வளர, இந்தப் பொருள்களை இழந்து விடுவோமோ? இந்த உறவுகள் முறிந்து விடுமோ? நாம் ஒன்றையுமே அனுபவிக்காமல் (80 வயதிலும் இந்த ஒன்றையுமே நான் அனுபவிக்கவில்லை பல்லவி தான்) போய்விடுவோமா என்ற பயம் கூடுகிறது.


  அதனால் தான் சாத்திரங்கள், தேவைகளைக் குறைத்துக் கொள், குறைவாகப் பேசு என்றெல்லாம் பேசுகின்றன. ஊசி போடும் போது கூட வலி குறைவுதான். அழுகையும் குறைவுதான். பயமானது, அந்த அளவிற்கு படுத்திவிடுகிறது. அதே மாதிரி தான் வாழ்வில் இறப்பு ஒருமுறை தான் வரும். ஆனால், பயத்தில், விபரீத கற்பனையில், ஒவ்வொருவம் தினம், தினம் தங்கள் நெருங்கிய உறவுகளை எத்தனை முறை மனதளவில் சாகடிக்கிறார்கள். வெளியில் சென்றவர் அரைமணி தாமதமாக வந்தால் பயம். வாழ்நாள் முழுவதும் சினிமாக்களில் பார்த்த விபத்துக் காட்சிகள் மனக்காட்சி பெட்டியில் ஓடும்.


  இருளைக் கண்டு மனிதன் பயப்படகிறான். பொருள்கள் கண்ணுக்குத் தெரியாததால் என்ன துன்பம் மறைந்திருக்கிறதோ, நமக்கு எதுவும் நேர்ந்துவிடுமோ என்று எதிர்காலம் குறித்த விபரீத கற்பனை தான் பயத்திற்கு காரணம். இந்த இருளுக்கே இவ்வளவு பயந்தால், அறியாமை என்ற இருளில் நடத்தும் வாழ்க்கைப் பயணத்திற்கு எவ்வளவு பயம் வர வேண்டும்? ஒரு ஞானி கூறுகிறார். இள் வயதில் சுடுகாட்டை நினைத்து வந்த பயத்தைப் போக்க, அமாவாசை இருளில் தனியாக, சுடுகாட்டிற்குப் போய், போய் அந்த பயத்தைப் போக்கிக் கொண்டாராம். நமது பயத்தைப் போக்கத்தான் நள்ளிருளில் நட்டம் பயின்று ஆடுகின்றாரோ நம் சிவனார். இப்பொழுதெல்லாம் ரயிலில் யாராவது பிஸ்கட் தந்தால் கூடப் பயம் தான். அடுத்தவர் உபசரிப்பை, உபசரிப்பவர் யாரென்று தெரியாமல், பயமின்றி ஏற்றதால் யுத்தத்தில் பாண்டவர்களின் மாமன் சல்லியன், கர்ணனுக்கு சாரதியான அவலம் நேர்ந்தது.


  வேண்டாத பயங்களைப் போக்க சாத்திரம் சில உபாயங்களையும் போதிக்கிறது. மேலே கூறிய ஞானியைப் போல, தனக்கு எதில் பயம் என்று தெரிந்து, அதை எதிர் கொள்வது ஒரு வகை. ஒருவர் பேச்சாளராக விரும்பினாராம். நான்கு பேருக்கு முன்னால் நின்றாலே, கீதை முதல் அத்தியாயத்தில் கண்ணனிடம் அர்ச்சுனன் வர்ணிப்பது போல கை, கால் நடுங்க, உடம்பெல்லாம் வியர்க்க, நா வரள, தோலெல்லாம் எளிய ஒரே பயமாம். தவிர வாயிலிருந்து வினோதமான விலங்குகளின் ஊளை சப்தமெல்லாம் வந்ததாம். பார்த்தாராம். அக்கம் பக்கத்து பொடியன்களுக்கெல்லாம் சாக்கலேட் கொடுத்து - லஞ்சம் தான், அவர்களை உட்கார வைத்து அவர்கள் முன் பேசிப் பேசி பழகினாராம். சில நாட்களில் பயம் போய்விட்டது. இன்று அவர் சிறந்த பேச்சாளர். தொழிலே மேடைப் பேச்சுத்தான். தனது வாழ்க்கை குறிப்பில் இதை எழுதி இருக்கிறார்.
  அடுத்து இறைவனிடமும், தர்ம வாழ்க்கையிலும் நம்பிக்கை வளத்துக் கொள்ள வேண்டும். பயம் போய்விடும். ஏமாற்றுபவர்கள் நன்றாக வாழ்வதாக நினைக்கக் கூடாது. ஏமாற்றுபவர்களுக்குக் கூட படியளக்கும் ஈசன், கல்லினுள் சிறு இறைவன், என்னை நிச்சயம் காப்பான். நான் முன்னேறுவேன் என்று தானே சொல்லி சொல்லி நம்பிக்கையை வளர்த்துக் கொள்வது தான் வாழும் கலை. அடுத்து கீதையில் கண்ணன் கூறுவது போல சுகமும் துக்கமும் சீதோஷ்ணத்தைப் போல வந்து வந்து போகும். நம் கையில் என்ன இருக்கிறது? வருவதை ஏற்றுக்கொள்வோம் என்ற மனநிலையை வளர்த்துக் கொண்டால் பயம் குறையும். பற்றுக்கள் குறையக் குறைய வலியவனிடம் பயம் குறையும். எனக்கு வேண்டும், எனக்கு வெண்டுமென்ற லோபம், நாம் விரும்பிய பொருளை அடையத் தடையாக இருந்தவர் மீது கோபம் என்பது எல்லாம் மறையும். இந்த நிலை வர அறிவின் துணையை நாடவேண்டும். நன்கு சிந்திக்க வேண்டும். நல்லார் இணக்கம் வேண்டும்.


  யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
  அதனின் அதனின் இலன்.


  பய உணர்வினால் சில நன்மையகளும் உண்டு. புது மனிதரைக் கண்டால் தாயின் பின் குழந்தை ஒளிந்து கொள்வது அதற்குப் பாதுகாப்பு. வானில் கழுகைக் கண்டு கோழிக் குஞ்சு கூட்டில் ஒடுங்குவது அதற்க பாதுகாப்பு. போலீஸிற்கு பயந்தாவது சாலை விதிகளை மதிக்கிறோமே. அது உயிருக்குப் பாதுகாப்பு. ஆசிரியரின் கோபத்துக்குப் பயந்தாவது படிக்கிறோமே அது வாழ்விற்குப் பாதுகாப்பு. மேலதிகாரிகளுக்கு பயந்து ஆபிசில் வேலை செய்கிறோமே. அது நாட்டின் வளர்ச்சிக்கு உத்தரவாதம். சமூகவிதிகளுக்குப் பயந்து வீட்டையும், நம்மையும் சுத்தமாக வைத்துக் கொள்கிறோமே அது வியாதிகளிலிருந்து பாதுகாப்பு. நஷ்டத்தையும், அவமானத்தையும், வறுமையையும் நினைத்து, யோசித்து எண்ணித் துணிகிறோமே கருமம், அது குடும்பத்துக்கு பாதுகாப்பு. வள்ளுவர் கூறுவது போல
  அஞ்சுவது அஞ்சாமை பேதமை அஞ்சுவது
  அஞ்சல் அறிவார் தொழில்.


  கோமதி ராஜ்குமார்
Working...
X