Announcement

Collapse
No announcement yet.

விமான ரகசியங்கள்!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • விமான ரகசியங்கள்!

    விமான ரகசியங்கள்!
    முகமூடி ரகசியம்
    விமானத்தில் ஏதேனும் நெருக்கடி ஏற்பட்டு, உங்கள் முகத்துக்கு நேராக திடீரென ஆக்சிஜன் மாஸ்குகள் தொங்கும். விமானத்தின் கூரை முழுக்க ஆக்சிஜனாக நிரப்பியிருப்பார்கள். எவ்வளாவு நேரம் வேண்டுமானாலும் தாங்கும் என்ற மிதப்பு வேண்டாம். அதிகபட்சம் அது 15 நிமிடங்களுக்குத்தான். ஐயயோ! அவ்வளவுதான் என்று அலறவும் வேண்டாம். அதற்குள் பைலட் , விமானம் பறக்கும் உயரத்தைக் குறைத்து ஆக்சிஜன் இருக்கும் காற்று மண்டலத்திற்குக் கொண்டுவந்துவிடுவார். எனவே, ஆக்சிஜன் மாஸ்கை முதலில் நீங்கள் மாட்டிக்கொள்ளுங்கள். குழந்தை மீது உள்ள பாசத்தில் அதற்கு முதலில் ஆக்சிஜனை வழங்க எத்தனிக்க வேண்டாம். குழந்தை உங்களைவிட அதிக வினாடிகள் ஆக்சிஜன் இல்லாமல் தாக்குப் பிடிக்கும். முதலில் நீங்கள் சுருண்டுவிழாமல் பார்த்துக்கொண்டு, பிறகு நிதானமாகக் குழந்தைக்கும் மாஸ்கைப் பொருத்துங்கள்.
    தண்ணீர் ரகசியம்
    விமானத்தில் பாட்டிலில் தரப்படும் தண்ணீரை மட்டும் குடியுங்கள். ஏனென்றால், குடிக்கவும், விமானக் கழிவறையில் பயன்படுத்தவும் பெரும்பாலும் ஒரே இடத்தில்தான் தண்ணீரை நிரப்புகிறார்கள். இரு பயன்பாட்டுகளுக்குமான தண்ணீர் தொட்டி ஓரடி இடைவெளியில்தான் இருக்கின்றன. அதேபோல, குறிப்பிட்ட சில இடைவெளிகளில்தான் தண்ணீர் தொட்டியைச் சுஹ்தப்படுத்துகிறார்கள். அந்த நீரில் ஒட்டுண்ணிகள் இருக்க வாய்ப்புண்டு. அந்த ஒட்டுண்ணிகள் பல நாடுகளைச் சுற்றிவருவதால் எந்த பூச்சிக்கொல்லிக்கும் சாகாமல் இருக்க வரம் பெற்றவை! குடிப்பது மட்டுமல்ல, கையைக் கழுவுவது, வாயைக் கொப்பளிப்பதுகூட ஆபத்துதான்!
    -- ஜூரி. (கருத்துப் பேழை ).
    -- 'தி இந்து' நாளிதழ், திங்கள், ஜூன் 9, 2014.
    Posted by க. சந்தானம்
Working...
X