தன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அஞ்சி, டயானா தன் மூத்த மகன் வில்லியம்ஸுக்கு தன்னுடைய அன்பையும், வழிகாட்டலையும் ஒலிநாடாக்களில் பதிவுசெய்திருந்ததாக பிரிட்டன் பத்திரிகைகள் தெரிவிக்கின்றன. தன் மகனுக்கும் தன்னுடைய பேரக்குழந்தைகளுக்கும் மட்டுமல்லாமல் வரப்போகும் தன் மருமகளுக்கும் டயானா சில செய்திகளைப் பதிவுசெய்திருக்கிறார். ' நீ ஓரு வித்தியாசமான ஒருத்தி என்பதை நீ உணர வேண்டும். அப்படியில்லை என்றால், நீ என்னுடைய வில்லியம்ஸின் மனைவியாக இருக்க முடியாது ' என்று தன் மருமகளைச் செல்லமாக மிரட்டவும் செய்திருக்கிறார் டயானா.
-- எத்திசையும்...கருத்துப் பேழை.
--' தி இந்து' நாளிதழ். திங்கள், செப்டம்பர். 30, 2013.