Announcement

Collapse
No announcement yet.

தவளையும், மனிதனும்!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • தவளையும், மனிதனும்!

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி அதில் ஒரு தவளையை போட்டு அடுப்பில் வைத்தார்கள். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தது. தவளை அந்தச் சூட்டை தாங்கும் வகையில் தன் உடலைக் கொண்டது. ஆனால், ஒரு குறிப்பிட்ட சூட்டுக்கு மேல் அதனால், தாங்கமுடியவில்லை.
    வெளியே குதித்து தப்பித்துக் கொள்ளலாம் என்று முயற்சி செய்தது. ஆனால், அதனால் குதிக்க முடியவில்லை. காரணம், தண்ணீர் சூட்டுக்கு ஏற்ப தன் உடலை மாற்றிக் கொள்வதிலேயே தன்னுடைய சக்தி எல்லாவற்றையும் வீணாக்கி விட்டது. சக்தி இல்லாமல் கொதிக்கும் நீரில் வெந்து இறந்துவிட்டது தவளை.
    தவளை இறந்ததற்கு யார் காரணம்? கொதிக்கும் தண்ணீரா இல்லை. அதனுடைய அதிகமான அனுசரித்துப் போகும் குணம்தான். தண்ணீரின் சூடு கொஞ்சம் அதிகரிக்கும் போது, தன் சக்தி எல்லாவற்றையும் திரட்டி வெளியே குதிக்க முயன்றிருந்தால் தவளை உயிருடன் இருந்திருக்கும். அதுபோலத்தான் மனிதனும் குடும்பத்திற்காக தன்னுடைய வேலைக்காக மனிதன் நிறைய அனுசரித்து போகிறான். ஒரு கட்டத்துக்கு மேல் அனுசரிக்கவும் முடியாமல், வெளியேறவும் முடியாமல் வாழ்க்கையில் தோல்வியை சந்திக்கிறான். எதற்கும் ஒரு எல்லை வகுத்துக் கொள்ள வேண்டும். அந்த எல்லையை மீறும் போது வெளியேறுவதுதான் புத்திசாலித்தனம்.
    -- தினமலர். பெண்கள்மலர். தலையங்கம் . தோழமையுடன் ஆசிரியர் ஸ்ரீ. 25-5-2013.
Working...
X