அண்மையில் ஒரு நகைச்சுவை துணுக்கு படித்தேன். ஒருவர் செய்தி வாசிக்கிறார் சேலத்தில் முக்கிய நபர் கைது! பக்கத்தில் இருந்தவர் அவரை நிறுத்தி கேட்கிறார் அப்போ கோவையில் முக்கினால் கைது செய்ய மாட்டார்களா? கவுண்டமணி மாதிரி கேட்கிறார். முக்கியம் என்று இங்கே சொல்வது முதன்மையான பிரதானமான என்ற பொருளில்.

information

Information

இந்த முக்கியம் என்கிற வார்த்தையே முக்யம் என்கிற சமஸ்க்ருத சொல்லில் இருந்து வந்தது தான். முக்யம் என்பதும் முகம் என்கிற சொல்லில் இருந்து வந்தது. முகம் என்பது வாசல் முன்னால் உள்ளது என்று புரிந்து கொள்ளலாம். துறைமுகம் என்று சொல்கிறோம் அல்லவா சமஸ்க்ருதத்தில் முகம் என்பது முகத்தையும் குறிக்கும் வாயையும் குறிக்கும்.

notice

Notice

சமண அரசன் அமரசிம்மன் இயற்றிய அமர கோசம் என்கிற வடமொழி அகராதியில் முகம் என்ற சொல்லுக்கு ஒத்த பொருளில் (synonym) உள்ள சொற்களாக வக்த்ராஸ்யம், வத3னம், துண்டம், ஆநநம், லபனம், முகம் என்று கொடுக்கப் பட்டுள்ளது.
சமஸ்க்ருதத்தில் வக்தா என்றால் பேசுபவன் வக்தவ்யம் என்பது பேசப்படும் வார்த்தைகளை குறிக்கும். இதே போல பலதும் உண்டும். ஸ்ரோதா கேட்பவன், ஸ்ரோதவ்யம் கேட்கப் படும் பொருள், கர்த்தா செயலை செய்பவன், கர்தவ்யம் செய்யப்படும் செயல் என்று வரும். அந்த வகையில் முகம் என்பது முன்னால் உள்ள, முதன்மையான, உறுப்பான வாயைக் குறிக்கிறது. முக்யம் என்றால் முகத்தின் தன்மை என்று பொருள் படும். அதாவது முதன்மையான தன்மை என்று புரிந்து கொள்ளலாம்.


நன்றி "தெய்வத்தின் குரல்"