புட்டியிற் சேறும் புழுதியும் கொண்டு வந்து
அட்டி அமுக்கி புக்கு அறியாமே
சட்டித் தயிரும் தடாவினில் வெண்ணெயும் உண்
பட்டிக் கன்றே! கொட்டாய் சப்பாணி
பற்பநாபா! கொட்டாய் சப்பாணி.
பொருள்: இந்தக் கண்ணன் இருக்கிறானே! அவன் தன் இடுப்பில் படிந்த சேற்றையும், தூசியையும் கொண்டு வந்து, என்மேல் தடவி விட்டான். பின் யாரும் அறியாதபடி, சட்டித் தயிரையும், பானையில் இருந்த வெண்ணெயையும் சாப்பிட்டான். பசுக்களை மேய்க்கும் இளங்கன்று போன்றவனே! சப்பாணி கொட்டுவாயாக. தாமரை நாபியைக் கொண்ட பத்மநாபா! சப்பாணி கொட்டுவாயாக.
குறிப்பு: குழந்தைகள் இருகைகளையும் தட்டி ஒலி எழுப்பி விளையாடுவதை சப்பாணி என்பர். இதனை ஒன்பதாம் மாதத்தில் குழந்தை விளையாடும்.