கன்னற் குடம் திறந்தால் ஒத்து ஊறிக்
கண கண சிரித் துவந்து
முன் வந்து நின்று முத்தம் தரும் எண்
முகில் வண்ணன் திருமார்வன்
தன்னைப் பெற்றோற்குத் தன்வாய் அமுதம் தந்து
என்னைத் தளிர்ப்பிக்கின்றான்
தன் எற்று மாற்றலர் தலைகள் மீதே
தளர் நடை நடவானோ?

பொருள்: கரும்புச் சாறு நிறைந்த குடம் சிந்தியதுபோல வாயிலிருந்து நீர் கசியும் படி குலுங்கிச் சிரிப்பான் கண்ணன். என் முன்னே வந்து வாய் நிறைய முத்தம் தருவான். கருமேக வண்ணனாகிய அப்பெருமானின் மார்பில் திருமகள் உறைந்திருக்கிறாள். அவனைப் பெற்றெடுத்த என்னை மகிழ்ச்சியில் திளைக்கச் செய்தான். தன்னை எதிர்க்கும் பகைவர்களின் தலை மீது தளர்நடையிட்டு நடக்க மாட்டானோ?
குறிப்பு: கண்ணனைத் தன் குழந்தையாகக் கருதி இந்தப் பாடலைப் பாடியுள்ளார் பெரியாழ்வார்.