Announcement

Collapse
No announcement yet.

மஹாளபக்ஷம் - பலகாரம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • #16
    Re: பன்சி ரவா உப்புமா

    Originally posted by krishnaamma View Post
    தேவையானவை:
    கால் கிலோ பன்சி ரவா அதாவது சோள ரவை
    கேரட், குடமிளகாய், பெரிய வெங்காயம்,உருளைகிழங்கு ,
    ஶ்ரீ:
    மாமி இது என்ன?
    மஹாளய பக்ஷபலஹாரத்தில் பெரியவெங்காயமா?!!
    தாஸன்.
    மன்னிக்கணும் மாமா , தவறுதலாக வந்து விட்டது . இதோ எடிட் செய்து விடுகிறேன்
    Last edited by krishnaamma; 09-10-12, 19:39.


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

    Comment


    • #17
      Re: பன்சி ரவா உப்புமா

      Originally posted by bmbcAdmin View Post
      ஶ்ரீ:
      மாமி இது என்ன?
      மஹாளய பக்ஷபலஹாரத்தில் பெரியவெங்காயமா?!!
      தாஸன்.
      மன்னிக்கணும் மாமா , தவறுதலாக வந்து விட்டது . இதோ எடிட் செய்து விடுகிறேன் .
      என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

      http://eegarai.org/apps/Kitchen4All.apk

      http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

      Dont work hard, work smart

      Comment


      • #18
        Re: மஹாளபக்ஷம் - பலகாரம்

        ஆஹா மாமி
        மிகவும் அருமையான பயன்படக்கூடிய பலகாரங்கள் செய்முறை
        பார்த்தேன் நன்றி
        இதேபோல் நவராத்த்ரிக்கும் தெரிவித்தால் உபயோகமாயிருக்கும்
        நன்றி

        Comment


        • #19
          Re: மஹாளபக்ஷம் - பலகாரம்

          Originally posted by Priya Radhi View Post
          ஆஹா மாமி
          மிகவும் அருமையான பயன்படக்கூடிய பலகாரங்கள் செய்முறை
          பார்த்தேன் நன்றி
          இதேபோல் நவராத்த்ரிக்கும் தெரிவித்தால் உபயோகமாயிருக்கும்
          நன்றி
          என்ன ராதே நான் முதலில் போட்டதே நவராத்திரி நைவேதியங்கள் தானே ? சரியாக பாருங்கோ
          என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

          http://eegarai.org/apps/Kitchen4All.apk

          http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

          Dont work hard, work smart

          Comment


          • #20
            துவரம்பருப்பு ஊத்தப்பம்

            இது வித்தியாசமான சுவையுடன் இருக்கும் ஊத்தப்பம் முயன்று பாருங்கள்

            தேவையானவை :

            அரிசி 4 கப்
            துவரம்பருப்பு அரை கப்
            உளுத்தம் பருப்பு கால் கப்
            வெந்தயம் 2 டீ ஸ்பூன்

            செய்முறை :

            எல்லாவற்றையும் ஒன்றாக ஒரு நாலுமணிநேரம் ஊறவைக்கவும்.
            பிறகு எல்லாவற்றையும் கொஞ்சம் 'கரகரப்பாக' அரைக்கவும்.
            உப்பு போட்டு கரைக்கவும்.
            10 மணிநேரம் கழித்து தோசைக்கல்லில் கனமான ஊத்தப்பங்களாக வார்த்து எடுக்கவும்.
            நல்ல பவுன் கலர் இல் நல்லா வரும்.
            என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

            http://eegarai.org/apps/Kitchen4All.apk

            http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

            Dont work hard, work smart

            Comment


            • #21
              ரவா தோசை

              தேவையானவை :

              பாம்பே ரவா 3 கப்
              அரிசிமாவு 2 கப்
              கோதுமை மாவு 1 கப்
              பச்சைமிளகாய் 5 - 6 - பொடியாக நறுக்கவும்
              கடுகு அரை ஸ்பூன்
              சீரகம் அரை ஸ்பூன்
              பெருங்காயம் கொஞ்சம்
              மோர் 2 கப்
              கறிவேப்பிலை கொஞ்சம்
              உப்பு
              எண்ணெய் தோசை வார்க்க

              செய்முறை :

              ஒரு பெரிய பத்திரத்தில் பாம்பே ரவா, அரிசிமாவு, கோதுமை மாவு எல்லாவற்றையும் போடவும்.
              உப்பு போடவும்.
              வாணலி இல் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை, பச்சைமிளகாய் எல்லாம் தாளித்து மாவின் மேல் கொட்டவும்.
              நன்கு கையால் கலக்கவும்.
              பிறகு மோர் விட்டு கட்டிகளில்லாமல் கரைக்கவும்.
              ஒரு அரைமணி வைத்திருந்து மெல்லிய தோசைகளாய் வார்க்கவும்.
              நல்ல கரகரப்பாக அதாவது மொறுமொறுப்பாக வரும்.

              குறிப்பு : சாதாரண தோசை போல இல்லாமல் இந்த மாவை தோசை கல்லின் ஓரத்திலிருந்து விடனும். நடுவில் விட்டு பரத்த முடியாது.
              என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

              http://eegarai.org/apps/Kitchen4All.apk

              http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

              Dont work hard, work smart

              Comment


              • #22
                ரவா தோசை 2

                தேவையானவை :

                பாம்பே ரவா 1 கப்
                பச்சைமிளகாய் 5 - 6 - பொடியாக நறுக்கவும்
                சீரகம் அரை ஸ்பூன்
                பெருங்காயம் கொஞ்சம்
                மோர் 2 கப்
                கறிவேப்பிலை கொஞ்சம்
                கொத்துமல்லி கொஞ்சம்
                பெரியவெங்காயம் பொடியாக நறுக்கினது
                உப்பு
                நெய் தோசை வார்க்க

                செய்முறை :

                வாணலி இல் பாம்பே ரவாபோட்டு நன்கு வறுக்கவும்.
                உப்பு போடவும்.
                ஒரு பெரிய பத்திரத்தில் கொட்டவும்.
                கொஞ்சம் ஆறினதும் அதில் சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை, பச்சைமிளகாய், கொத்துமல்லி எல்லாம் போடவும்.
                நன்கு கையால் கலக்கவும்.
                பிறகு மோர் விட்டு கட்டிகளில்லாமல் கரைக்கவும்.
                ஒரு அரைமணி வைத்திருந்து மெல்லிய தோசைகளாய் வார்க்கவும்.
                நல்ல கரகரப்பாக அதாவது மொறுமொறுப்பாக வரும்.

                குறிப்பு : சாதாரண தோசை போல இல்லாமல் இந்த மாவை தோசை கல்லின் ஓரத்திலிருந்து விடனும். நடுவில் விட்டு பரத்த முடியாது.
                என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                http://eegarai.org/apps/Kitchen4All.apk

                http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                Dont work hard, work smart

                Comment


                • #23
                  ரவா தோசை 3

                  தேவையானவை :

                  பாம்பே ரவா 1 கப்
                  அரிசிமாவு 1 கப்
                  கோதுமை மாவு 1 கப்
                  பச்சைமிளகாய் 5 - 6 - பொடியாக நறுக்கவும்
                  மிளகு பொடித்தது 1 ஸ்பூன்
                  சீரகம் பொடித்தது 1 ஸ்பூன்
                  உப்பு
                  எண்ணெய் தோசை வார்க்க

                  செய்முறை :

                  வாணலி இல் பாம்பே ரவாபோட்டு நன்கு வறுக்கவும்.
                  உப்பு போடவும்.
                  ஒரு பெரிய பத்திரத்தில் கொட்டவும்; தண்ணீர்விட்டு ஒரு அரைமணி ஊறவைக்கவும்.
                  பிறகு உப்பு போடவும்.
                  பிறகு அதில் அரிசிமாவு, கோதுமை மாவு மற்ற சாமான்களை போடவும்.
                  நன்கு கையால் கலக்கவும்.
                  பிறகு தண்ணீர் விட்டு கட்டிகளில்லாமல் கரைக்கவும்.
                  ஒரு அரைமணி வைத்திருந்து மெல்லிய தோசைகளாய் வார்க்கவும்.
                  நல்ல கரகரப்பாக அதாவது மொறுமொறுப்பாக வரும்.

                  குறிப்பு : சாதாரண தோசை போல இல்லாமல் இந்த மாவை தோசை கல்லின் ஓரத்திலிருந்து விடனும். நடுவில் விட்டு பரத்த முடியாது.
                  என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                  http://eegarai.org/apps/Kitchen4All.apk

                  http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                  Dont work hard, work smart

                  Comment


                  • #24
                    ரவா தோசை 4

                    தேவையானவை :

                    பாம்பே ரவா 1 கப்
                    அரிசிமாவு 1 கப்
                    மைதா ஒரு டேபிள் ஸ்பூன்
                    கோதுமைமாவு 1 டேபிள் ஸ்பூன்
                    சீரகம் பொடித்தது 1 ஸ்பூன்
                    கறிவேப்பிலை கொஞ்சம்
                    மோர் 2 கப்
                    உப்பு
                    எண்ணெய் தோசை வார்க்க

                    செய்முறை :

                    வாணலி இல் பாம்பே ரவா மற்றும் அரிசி மாவை கொஞ்சம் தண்ணீர்விட்டு ஊறவைக்கவும்.
                    ஒரு அரை மணி ஊரினதும் , மிக்சி இல் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்; உப்பு போடவும்.
                    பிறகு அதில் மைதா மற்றும் கோதுமை மாவு மற்ற சாமான்களை போடவும்.
                    நன்கு கையால் கலக்கவும்.
                    பிறகு மோர் விட்டு கட்டிகளில்லாமல் கரைக்கவும்.
                    ஒரு அரைமணி வைத்திருந்து மெல்லிய தோசைகளாய் வார்க்கவும்.
                    நல்ல கரகரப்பாக அதாவது மொறுமொறுப்பாக வரும்.

                    குறிப்பு : சாதாரண தோசை போல இல்லாமல் இந்த மாவை தோசை கல்லின் ஓரத்திலிருந்து விடனும். நடுவில் விட்டு பரத்த முடியாது.
                    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                    http://eegarai.org/apps/Kitchen4All.apk

                    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                    Dont work hard, work smart

                    Comment


                    • #25
                      காஞ்சிபுரம் இட்லி மாவில் தோசை

                      தேவையானவை :

                      ஒரு கப் அரிசி
                      முக்கால் கப் உளுத்தம் பருப்பு
                      ஒரு டேபிள் ஸ்பூன் மிளகு சீரகம் - ஒன்றிரண்டாக உடைத்தது
                      கொஞ்சம் நெய்
                      கொஞ்சம் கறிவேப்பிலை
                      பெருங்காயம் அரை ஸ்பூன்
                      சுக்கு பொடி அரை ஸ்பூன்
                      உப்பு
                      ஒரு பெரிய கரண்டி எண்ணெய்

                      செய்முறை :

                      அரிசி உளுந்து இரண்டையும் ஒன்றாகவே நனைத்து ஒன்றாகவே அரைக்கணும்.
                      ஒரு நாலு மணி நேரம் ஊறணும்.
                      பிறகு கொஞ்சம் 'கரகர'வென அரைக்கணும் .
                      உப்பு போட்டு கரைத்து வைக்கணும்.
                      மறுநாள் காலை எண்ணெய் விட்டு நன்கு கலக்கவும்.
                      பிறகு மற்ற சாமான்கள் எல்லாம் போட்டு நன்கு கலக்கணும்.
                      பிறகு தோசைகல்லில் எண்ணெய் தடவி தோசைகளாக வர்க்கனும்.
                      நல்ல கரகரப்பாக சூப்பராக வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.
                      என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                      http://eegarai.org/apps/Kitchen4All.apk

                      http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                      Dont work hard, work smart

                      Comment


                      • #26
                        அரிசி ரவை உப்புமா

                        தேவையானவை :

                        அரிசி 2 கப்
                        துவரம் பருப்பு 2 டேபிள் ஸ்பூன்
                        மிளகு சீரகம் பொடித்தது 1 டேபிள் ஸ்பூன்
                        தேங்காய் துருவல் 2 டேபிள் ஸ்பூன்
                        உப்பு

                        தாளிக்க :

                        கடுகு 1 ஸ்பூன்
                        மிளகாய் வற்றல் 4 - 5
                        உளுத்தம் பருப்பு 1 ஸ்பூன்
                        கடலை பருப்பு 1 ஸ்பூன்
                        பச்சை மிளகாய் 2 - 3
                        பெருங்காயம் கால் ஸ்பூன்
                        கறிவேப்பிலை கொஞ்சம்
                        தேங்காய் எண்ணெய் தாளிக்க கொஞ்சம்

                        செய்முறை :

                        அரிசியை களைந்து உலர்த்தனும்.
                        மிக்சி இல் ரவையாக பொடிக்கவும்.
                        தனியாக துவரம் பருப்பையும் ரவை போல பொடிக்கவும்.
                        ஒரு வாணலி இல் எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியவைகளை போட்டு தாளிக்கவும்.
                        பிறகு தண்ணிர் விடவும். உப்பு போடவும்.
                        அது நன்கு கொதிக்கும் போது அடுப்பை சின்னதாக்கி விட்டு அரைத்து வைத்துள்ள அரிசி மற்றும் பருப்பு இவைகளை போடவும்.
                        கட்டிகள் இல்லாமல் நன்கு கலக்கவும்.
                        மேலே ஒரு மூடி போட்டு முடவும்.
                        ஒரு 5 நிமிடம் கழித்து திறந்து பார்க்கவும்.
                        நன்கு கிளறவும் , தேவையானால் கொஞ்சம் தண்ணிர் விடவும்.
                        மீண்டும் மூடிவைக்கவும்.
                        ஓரிரு நிமிடங்கள் கழித்து மீண்டும் திறந்து பார்க்கவும்.
                        ரவை வெந்திருந்தால் , தேங்காய் துருவல் மற்றும் மிளகு சீரகம் போட்டு நன்கு கிளறி இறக்கவும்.
                        அவ்வளவுதான் உப்புமா ரெடி.
                        தேங்காய் சட்டினியுடன் பரிமாறவும்.
                        அல்லது பருப்பு சாம்பாருடன் பரிமாறவும். கெட்டி தயிர் அல்லது ஊறுகாய் கூட ஓகே தான்

                        குறிப்பு : இந்த உப்புமா ஆறினதும் தான் ரொம்ப நல்லா இருக்கும். மேலும் இதில் வாணலி இல் இருக்கும் காந்தல் - அதாவது அடி இல் இருக்கும் கொஞ்சம் 'அடிபிடித்த உப்புமா' ( கருகின இல்லை ) ரொம்ப நல்லா இருக்கும்
                        என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                        http://eegarai.org/apps/Kitchen4All.apk

                        http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                        Dont work hard, work smart

                        Comment


                        • #27
                          உப்புமா கொழுக்கட்டை

                          தேவையானவை :

                          அரிசி 2 கப்
                          துவரம் பருப்பு 2 டேபிள் ஸ்பூன்
                          கடலைபருப்பு 2 டேபிள் ஸ்பூன்
                          தேங்காய் துருவல் 2 டேபிள் ஸ்பூன்
                          உப்பு

                          தாளிக்க :

                          கடுகு 1 ஸ்பூன்
                          மிளகாய் வற்றல் 4 - 5
                          உளுத்தம் பருப்பு 1 ஸ்பூன்
                          கடலை பருப்பு 1 ஸ்பூன்
                          பச்சை மிளகாய் 2 - 3
                          பெருங்காயம் கால் ஸ்பூன்
                          கறிவேப்பிலை கொஞ்சம்
                          தேங்காய் எண்ணெய் தாளிக்க கொஞ்சம்

                          செய்முறை :

                          அரிசியை களைந்து உலர்த்தனும்.
                          மிக்சி இல் ரவையாக பொடிக்கவும்.
                          தனியாக துவரம் பருப்பு மற்றும் கடலைப்பருப்பையும் ரவை போல பொடிக்கவும்.
                          ஒரு வாணலி இல் எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியவைகளை போட்டு தாளிக்கவும்.
                          பிறகு தண்ணிர் விடவும். உப்பு போடவும்.
                          அது நன்கு கொதிக்கும் போது அடுப்பை சின்னதாக்கி விட்டு அரைத்து வைத்துள்ள அரிசி மற்றும் பருப்பு இவைகளை போடவும்.
                          கட்டிகள் இல்லாமல் நன்கு கலக்கவும்.
                          தேங்காய் துருவல் போட்டு நன்கு கிளறி இறக்கவும்.
                          இப்போது ரவை பாதி வெந்து இருக்கும்.
                          அப்படியே அடுப்பிலிருந்து இறக்கி ஒரு பெரிய தாம்பாளத்தில் கொட்டவும்.
                          அது கொஞ்சம் ஆறட்டும்.
                          ஒரு இட்லி பானையில் தண்ணீர் விட்டு அடுப்பில் வைக்கவும்.
                          இட்லி தட்டுகளில் எண்ணெய் தடவவும்.
                          ஆறி உள்ள ,பாதி வெந்த உப்புமாவை கைகளில் எடுத்து பிடிகொழுக்கட்டை போல பிடிக்கவும்.
                          இட்லி தட்டுகளில் அடுக்கவும்.
                          எல்லாவற்றையும் இவ்வாறு அடுக்கினதும், இட்லி போல ஆவி இல் வேக வைக்கவும்.
                          அவ்வளவு தான் 'உப்புமா கொழுக்கட்டை ' ரெடி.
                          தேங்காய் சட்டினியுடன் பரிமாறவும்.
                          அல்லது பருப்பு சாம்பாருடன் பரிமாறவும்.
                          என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                          http://eegarai.org/apps/Kitchen4All.apk

                          http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                          Dont work hard, work smart

                          Comment


                          • #28
                            Re: அழகர் கோயில் தோசை

                            Originally posted by krishnaamma View Post

                            அடுப்பில் தோசைக்கல் சூடானதும், மாவை சற்று கனமான தோசைகளாக (இரண்டு அங்குல உயரம்) வார்த்து,
                            மாமி,
                            2 அங்குலம் என்றால் ஆட்காட்டி விரலின் இரண்டாவது ரேகை வரை
                            அல்லது 3 விரல் (ஆட்காட்டி, நடு, மோதிர விரல்களை பட்டையாக வைத்தால் வரும் உயரம்)
                            நிச்சயாமாகச் சொல்லுங்கள் இந்த அளவுக்கா?
                            சைட்ல காலர் உள்ள நான் ஸ்டிக் தவாவுலதான் வார்க்கணும்?!
                            அது வேகுமா?
                            சரி, இதுல ஒரு தோசையை யாராலயாவது முழுசா சாப்பிட முடியுமா?!
                            தயவுசெய்து எப்பவாவது செஞ்சா, சைட்ல கனம் தெரியற அளவுக்கு போட்டோ எடுத்துப்போடுங்கோ.
                            அப்பறம்,
                            இப்பத்தான் அட்டாச்மென்ட்டெல்லாம் நன்னா வேலை செய்யறதே?
                            ஏன் ஒரு போட்டோ கூட போடமாட்றிங்க??
                            நான் இப்படித்தான் எதாவது புடிங்கிண்டே இருப்பேன், தப்பா எடுத்துங்காதிங்க!
                            நன்றி!
                            என்.வி.எஸ்
                            குறிப்பு:- இந்த ஒரு போஸ்டை பதிவு பண்றதுக்கு சாயந்திரம் ஏழரை மணியிலிருந்து உட்டகார்ந்து
                            இப்பத்தான் கனெக்*ஷண் கிடைச்சுருக்கு, அதுவும் போஸ்ட் போட்டு முடியறவரைக்கும் கட்டாகாம இருக்கணும்?


                            Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
                            please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
                            Encourage your friends to become member of this forum.
                            Best Wishes and Best Regards,
                            Dr.NVS

                            Comment


                            • #29
                              Re: மஹாளபக்ஷம் - பலகாரம்

                              ஐயோ நீங்க நன்னா கேளுங்கோ மாமா அதுக்கு எதுக்கு புடுங்கல் அது இது என்கிரிங்கோ நான் போட்டோ போட ஆரம்பிக்கிறேன் அப்புறம், இரண்டு அங்குலம் வார்த்ததால் தான் அது அழகர் கோவில் தோசை இல்லாட்டா அது நம்மாத்து தோசை தான்
                              என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                              http://eegarai.org/apps/Kitchen4All.apk

                              http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                              Dont work hard, work smart

                              Comment


                              • #30
                                ஆப்பம்

                                தேவையானவை :

                                அரிசி 2 கப்
                                உளுத்தம் பருப்பு 1 / 4 ஸ்பூன்
                                வெந்தயம் 1 / 2 ஸ்பூன்
                                ஆப்பசோடா (சோடா உப்பு ) 1 / 2 ஸ்பூன்
                                உப்பு
                                எண்ணெய்

                                செய்முறை :

                                அரிசி, உளுத்தம் பருப்பு மற்றும் வெந்தயம் ஆகியவைற்றை 2 முதல் 3 மணி நேரம் ஊறவைகணும்.
                                ஊரவைதைதை நன்றாக mixie இல் அரைக்கணும்
                                பிறகு அரைத்த மாவுடன் ஆப்பசோடா மற்றும் உப்பு சேர்க்கவும்.
                                அவைற்றை நன்றாக கலந்து, 12 மணி நேரம் அப்படியே வைகணும்.
                                பிறகு வாணாலில் சிறிது அளவு எண்ணெய் விட்டு துடைத்துக்கொள்ளவும்.
                                பிறகு மாவை வாணாலில் விட்டு , இரண்டு கைகளால் வாணலியை சுழற்றவும்.
                                மாவு வாணாலி முழுவதும் பரவி இருக்க வேண்டும்
                                பிறகு வாணாலியை ஒரு மூடி போட்டு மூடவும்
                                1 நிமிடம் அப்படியே விடவும்.
                                வாணாலியை திறந்து வாணாலி shapeஇல் சூடான ஆப்பம் தயார்.
                                சாதம் போடும் கரண்டியால் மெல்ல ஆப்பத்தை எடுக்கவும்.
                                நடுவில் 'மெத்' என்றும் ஓரங்களில் 'லேஸ்' போலவும் இருக்கும் இது மிகவும் மிருதுவாக இருக்கும்
                                இப்பொழுது சூடான ஆப்பத்தை குருமா அல்லது தேங்காய் பாலுடன் சாப்பிடலாம்.

                                குறிப்பு: மாவு தோசை மாவைவிட கொஞ்சம் தண்ணியாக இருக்கணும்.
                                கொஞ்சம் கூட எண்ணெய் இல்லாமல் செய்வதால் உடம்புக்கு ரொம்ப நல்லது.
                                வாணலில் எண்ணையை துடைத்து வார்த்தால் போதுமானது.
                                என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                                http://eegarai.org/apps/Kitchen4All.apk

                                http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                                Dont work hard, work smart

                                Comment

                                Working...
                                X