Announcement

Collapse
No announcement yet.

மஹாளபக்ஷம் - பலகாரம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • #31
    மோர்களி

    இதில் பலவகைகள் இருக்கு ஒவ்வொன்றாக பார்போம்.

    தேவையானவை :

    அரிசி மாவு ஒரு கப்
    பச்சை மிளகாய் 4 - 5
    மோர் ஒரு கப்
    உப்பு
    கடுகு கொஞ்சம்
    உளுந்து கொஞ்சம்
    பெருங்காயம் கொஞ்சம்
    எண்ணெய் கொஞ்சம்
    கறிவேப்பிலை கொஞ்சம்

    செய்முறை :

    முதலில் மாவையும் மோரையும் ஒரு பாத்திரத்தில் போட்டு கரைக்கவும் .
    உப்புபோடவும்.
    வாணலி இல் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்கயப் பொடி, கறிவேப்பிலை, பச்சைமிளகாய் போட்டு தாளிக்கவும்.
    கரைத்து வைத்துள்ள மாவை கொட்டி கிளறவும்.
    அடுப்பை சின்னதாக வைக்கவும்.
    மாவு வேகும் வரை அப்ப அப்ப கிளறி விடவும்.
    நன்கு வெந்து பந்து போல உருண்டு வந்ததும் இறக்கவும்.
    அவ்வளவுதான், சுவையான மோர் களி தயார்

    குறிப்பு: பச்சை மிளகாய்க்கு பதில் மோர்மிளகாய் அல்லது சிவப்பு மிளகாய் உபயோகிக்கலாம் .
    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart

    Comment

    • #32
      கோதுமை மோர் களி

      தேவையானவை :

      கோதுமை மாவு ஒரு கப்
      மிளகாய் வற்றல் 4 - 5
      மோர் ஒரு கப்
      உப்பு
      கடுகு கொஞ்சம்
      உளுந்து கொஞ்சம்
      பெருங்காயம் கொஞ்சம்
      எண்ணெய் கொஞ்சம்
      கறிவேப்பிலை கொஞ்சம்

      செய்முறை :

      முதலில் மாவையும் மோரையும் ஒரு பாத்திரத்தில் போட்டு கரைக்கவும் .
      உப்புபோடவும்.
      வாணலி இல் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்கயப் பொடி, கறிவேப்பிலை, மிளகாய் வற்றல் போட்டு தாளிக்கவும்.
      கரைத்து வைத்துள்ள மாவை கொட்டி கிளறவும்.
      அடுப்பை சின்னதாக வைக்கவும்.
      மாவு வேகும் வரை அப்ப அப்ப கிளறி விடவும்.
      நன்கு வெந்து பந்து போல உருண்டு வந்ததும் இறக்கவும்.
      அவ்வளவுதான், சுவையான கோதுமை மோர் களி தயார்.
      தொட்டுக்கொள்ள பருப்பு சாம்பார் நல்லா இருக்கும்

      குறிப்பு: மிளகாய் வற்றலுக்கு பதில் மோர்மிளகாய் உபயோகிக்கலாம் அதுவும் நல்லா இருக்கும்.
      என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

      http://eegarai.org/apps/Kitchen4All.apk

      http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

      Dont work hard, work smart

      Comment

      • #33
        'குழம்புமாவு உப்புமா '

        'குழம்புமாவு உப்புமா '.... இது என்ன என்று குழம்புபவர்களுக்கான விளக்கம் அரிசி மாவை தான் நாங்க அப்படி சொல்வோம். இது அரிசி மாவில் செய்யும் 'கூழ்' . ரொம்ப சுவையாக 'மணல் மணலாக' வரும். கொஞ்சம் எண்ணெய் அதிகம் ஆகும் என்றாலும் சுவை யாக இருக்கும்.

        தேவையானவை :

        அரிசி மாவு ஒரு கப்
        மிளகாய் வற்றல் 4 - 5
        புளி தண்ணீர் 1 1 / 2 கப்
        உப்பு
        கடுகு கொஞ்சம்
        உளுந்து கொஞ்சம்
        பெருங்காயம் கொஞ்சம்
        எண்ணெய் 3/4 cup
        கறிவேப்பிலை கொஞ்சம்

        செய்முறை :

        முதலில் மாவையும் புளி ஜலத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு கரைக்கவும் .
        உப்புபோடவும்.
        வாணலி இல் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்கயப் பொடி, கறிவேப்பிலை, மிளகாய் வற்றல் போட்டு தாளிக்கவும்.
        கரைத்து வைத்துள்ள மாவை கொட்டி கிளறவும்.
        அடுப்பை சின்னதாக வைக்கவும்.
        மாவு வேகும் வரை அப்ப அப்ப கிளறி விடவும்.
        நன்கு 'உதிர் உதிராக ' வரும்வரை எண்ணெய் விட்டு கிளறவும் .
        அவ்வளவுதான், சுவையான 'குழம்புமாவு உப்புமா ' தயார்.
        தொட்டுக்கொள்ள பருப்பு சாம்பார் நல்லா இருக்கும்
        என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

        http://eegarai.org/apps/Kitchen4All.apk

        http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

        Dont work hard, work smart

        Comment

        • #34
          கோதுமை மாவு கூழ்

          தேவையானவை :

          கோதுமை மாவு ஒரு கப்
          மிளகாய் வற்றல் 4 - 5
          புளி தண்ணீர் 1 1 / 2 கப்
          உப்பு
          கடுகு கொஞ்சம்
          உளுந்து கொஞ்சம்
          பெருங்காயம் கொஞ்சம்
          எண்ணெய் முக்கால் கப்
          கறிவேப்பிலை கொஞ்சம்

          செய்முறை :

          முதலில் மாவையும் புளி ஜலத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு கரைக்கவும் .
          உப்புபோடவும்.
          வாணலி இல் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்கயப் பொடி, கறிவேப்பிலை, மிளகாய் வற்றல் போட்டு தாளிக்கவும்.
          கரைத்து வைத்துள்ள மாவை கொட்டி கிளறவும்.
          அடுப்பை சின்னதாக வைக்கவும்.
          மாவு வேகும் வரை அப்ப அப்ப கிளறி விடவும்.
          நன்கு பந்து போல சுருண்டு வாணலி இல் ஒட்டாமல் வரும்போது, எண்ணெய் தடவிய தட்டில் கொட்டி , வில்லைகளாக வெட்டவும்.
          அவ்வளவுதான், சுவையான கோதுமை மாவு கூழ் தயார்.
          தொட்டுக்கொள்ள பருப்பு சாம்பார் நல்லா இருக்கும்

          குறிப்பு: வற்றல் மிளகாய்க்கு பதில் மோர் மிளகாய் இதுக்கு ரொம்ப நல்லா இருக்கும்
          என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

          http://eegarai.org/apps/Kitchen4All.apk

          http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

          Dont work hard, work smart

          Comment

          • #35
            Re: மஹாளபக்ஷம் - பலகாரம்

            மாமி என் எண்ணங்களை சரியாக வெளிபடுத்தாதற்க்கு மன்னிக்கவும்
            நவராத்திரியில் கொலு சுண்டல், மற்றும் நவராத்திரி சம்பந்த்ட்ட
            பஷண வகைகளை தெரிவிக்கவேண்டுகிறேன்
            தினமும் கொலுவிற்கு சமர்பிக்க கூடிய பிரசாத வகைகளை
            பற்றி தெரிந்து கொள்ள அவா
            நன்றி

            Comment

            • #36
              Re: மஹாளபக்ஷம் - பலகாரம்

              Originally posted by Priya Radhi View Post
              மாமி என் எண்ணங்களை சரியாக வெளிபடுத்தாதற்க்கு மன்னிக்கவும்
              நவராத்திரியில் கொலு சுண்டல், மற்றும் நவராத்திரி சம்பந்த்ட்ட
              பஷண வகைகளை தெரிவிக்கவேண்டுகிறேன்
              தினமும் கொலுவிற்கு சமர்பிக்க கூடிய பிரசாத வகைகளை
              பற்றி தெரிந்து கொள்ள அவா
              நன்றி
              அன்பு ராதே, இந்த லிங்க் இல் பாருங்கோ நைவேதியங்களை தந்திருக்கேன், உங்களுக்கு தெரிந்ததையும் போடுங்கோ

              http://www.brahminsnet.com/forums/sh...F%8D-%29/page2
              என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

              http://eegarai.org/apps/Kitchen4All.apk

              http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

              Dont work hard, work smart

              Comment

              • #37
                Re: மஹாளபக்ஷம் - பலகாரம்

                N.V.S.மாமா, நீங்க கேட்டதும் எப்பவோ உளுத்தங்கஞ்சி போட்டுட்டேனே, நீங்க செய்து பார்த்தேளா, சத்தத்தையே காணுமே
                என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                http://eegarai.org/apps/Kitchen4All.apk

                http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                Dont work hard, work smart

                Comment

                • #38
                  Re: மஹாளபக்ஷம் - பலகாரம்

                  Originally posted by krishnaamma View Post
                  N.V.S.மாமா, நீங்க கேட்டதும் எப்பவோ உளுத்தங்கஞ்சி போட்டுட்டேனே, நீங்க செய்து பார்த்தேளா, சத்தத்தையே காணுமே
                  ஞாபகப்படுத்தினதற்கு நன்றி க்ருஷ்ணாம்மா,
                  மஹாளய பலகாரத்தின் நடுவில மறைஞ்சுபோச்சு,
                  தோ இப்ப பண்ணிப் பாரக்கப்போறோம்.
                  உடனே பதில் போடறோம்.
                  அதனாலதான் உங்கள தனித் தனி டைட்டில்ல போடச்சொன்னேன்.
                  நன்றி,
                  என்.வி.எஸ்.

                  Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
                  please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
                  Encourage your friends to become member of this forum.
                  Best Wishes and Best Regards,
                  Dr.NVS

                  Comment

                  • #39
                    Re: மஹாளபக்ஷம் - பலகாரம்

                    ஶ்ரீ:
                    இந்த உளுத்தங்கஞ்சி (கஞ்சியா அது? தேங்காப்பால் பாயஸம்னா) நேத்திக்கு ராத்திரி பண்ணி
                    சாப்பிட்டோம்.
                    உண்மையிலேயே ரொம்ப, ரொம்ப அருமையா இருந்தது, நல்ல ஸ்வீட்.
                    ஆனா அடியேன் சொன்ன உளுத்தங் கஞ்சி இது அல்ல!
                    அடியேனுக்கு ஞாபகம் இருக்கறவரைக்கும் அது எப்படி இருக்கும்னு சொல்றேன்:
                    கலர்:- மிகச்சிறிய பச்சை கலந்த வெள்ளை கலர் - (எனவே அதில் வெல்லம் அல்லது கருப்பட்டி கலந்திருக்க வாய்ப்பில்லை, ஜீனி கலந்திருக்கலாம்).
                    தொட்டுணர்வு:- ரவா கஞ்சி போல சற்று நொற நொறவென்றிருக்கும் ஆங்காங்கே தேங்காய் சிறு சிறு சில்களாக காணப்படும். சில இஞ்சி சக்கைகள் கூட தென்படும்.
                    சுவை:- உளுந்து, ஏலக்காய், இஞ்சி, தேங்காய், ஜீனி மற்றும் சிறிது அரிசி கலந்திருக்கவேண்டும் என எண்ணுகிறேன் இவற்றைக் கலந்து கொதிக்க வைத்தால் வரக்கூடிய ஒரு சுவை. நிச்சயமாக அது அதிக இனிப்பாக இருக்காது, ஏனெனில் எவ்வளவு சாப்பிட்டாலும் திகட்டாது.

                    எனவே இதை வேறு பல கலவை விகிதங்களில் செய்து பார்த்துதான் கண்டுபிடிக்கவேண்டும்.
                    இன்று மாமி புளிபேஸ்ட் தயார்செய்துகொண்டிருக்கிறார்கள்.
                    என்றாலும் கோடி நன்றிகள்.
                    என்.வி.எஸ்

                    • #40
                      Re: மஹாளபக்ஷம் - பலகாரம்

                      Originally posted by bmbcAdmin View Post
                      ஞாபகப்படுத்தினதற்கு நன்றி க்ருஷ்ணாம்மா,
                      மஹாளய பலகாரத்தின் நடுவில மறைஞ்சுபோச்சு,
                      தோ இப்ப பண்ணிப் பாரக்கப்போறோம்.
                      உடனே பதில் போடறோம்.
                      அதனாலதான் உங்கள தனித் தனி டைட்டில்ல போடச்சொன்னேன்.
                      நன்றி,
                      என்.வி.எஸ்.
                      மஹாளபக்ஷம் - பலகாரம் - என்று தலைப்பு தந்ததால் அதன் கீழே போட்டுவிட்டேன், இதை தனித்ஹ்டனியா எப்படி போடுவது? சொல்லுங்கோ

                      வேண்டுமானால்
                      மஹாளபக்ஷம் - பலகாரம் - உளுத்தங்கஞ்சி
                      மஹாளபக்ஷம் - பலகாரம் - தவல தோசை இப்படி போடட்டுமா? கொஞ்சம் சொல்லுங்கோ
                      என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                      http://eegarai.org/apps/Kitchen4All.apk

                      http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                      Dont work hard, work smart

                      Comment

                      • #41
                        Re: மஹாளபக்ஷம் - பலகாரம்

                        Originally posted by bmbcAdmin View Post
                        ஶ்ரீ:
                        இந்த உளுத்தங்கஞ்சி (கஞ்சியா அது? தேங்காப்பால் பாயஸம்னா) நேத்திக்கு ராத்திரி பண்ணி
                        சாப்பிட்டோம்.
                        உண்மையிலேயே ரொம்ப, ரொம்ப அருமையா இருந்தது, நல்ல ஸ்வீட்.
                        ஆனா அடியேன் சொன்ன உளுத்தங் கஞ்சி இது அல்ல!
                        அடியேனுக்கு ஞாபகம் இருக்கறவரைக்கும் அது எப்படி இருக்கும்னு சொல்றேன்:
                        கலர்:- மிகச்சிறிய பச்சை கலந்த வெள்ளை கலர் - (எனவே அதில் வெல்லம் அல்லது கருப்பட்டி கலந்திருக்க வாய்ப்பில்லை, ஜீனி கலந்திருக்கலாம்).
                        தொட்டுணர்வு:- ரவா கஞ்சி போல சற்று நொற நொறவென்றிருக்கும் ஆங்காங்கே தேங்காய் சிறு சிறு சில்களாக காணப்படும். சில இஞ்சி சக்கைகள் கூட தென்படும்.
                        சுவை:- உளுந்து, ஏலக்காய், இஞ்சி, தேங்காய், ஜீனி மற்றும் சிறிது அரிசி கலந்திருக்கவேண்டும் என எண்ணுகிறேன் இவற்றைக் கலந்து கொதிக்க வைத்தால் வரக்கூடிய ஒரு சுவை. நிச்சயமாக அது அதிக இனிப்பாக இருக்காது, ஏனெனில் எவ்வளவு சாப்பிட்டாலும் திகட்டாது.

                        எனவே இதை வேறு பல கலவை விகிதங்களில் செய்து பார்த்துதான் கண்டுபிடிக்கவேண்டும்.
                        இன்று மாமி புளிபேஸ்ட் தயார்செய்துகொண்டிருக்கிறார்கள்.
                        என்றாலும் கோடி நன்றிகள்.
                        என்.வி.எஸ்
                        பாவம் மாமா நீங்க, உங்க ஒரு ராத்திரி சாப்பாடு கெட்டுடுத்தா என்னால ? மன்னிக்கணும் மாமா
                        மாமி புளி பேஸ்ட் செய்வது குறித்து ரொம்ப சந்தோசம், ரொம்ப handy யாக இருக்கும் மாமா
                        என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                        http://eegarai.org/apps/Kitchen4All.apk

                        http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                        Dont work hard, work smart

                        Comment

                        • #42
                          Re: மஹாளபக்ஷம் - பலகாரம்

                          Originally posted by krishnaamma View Post
                          மஹாளபக்ஷம் - பலகாரம் - என்று தலைப்பு தந்ததால் அதன் கீழே போட்டுவிட்டேன், இதை தனித்ஹ்டனியா எப்படி போடுவது? சொல்லுங்கோ
                          மஹாளபக்ஷம் - பலகாரம் - உளுத்தங்கஞ்சி
                          மஹாளபக்ஷம் - பலகாரம் - தவல தோசை இப்படி போடட்டுமா? கொஞ்சம் சொல்லுங்கோ
                          ஶ்ரீ:
                          நன்றி க்ருஷ்ணாம்மா!
                          அதாவது அடியேன் முன்னரே கூறியபடி ஒவ்வொரு ஐடமும் ஒவ்வொரு த்ரட் (திரி) என்று இருந்தால்
                          ஒரு குறிப்பிட்ட ஐடம் பற்றி சந்தேஹங்கள், அதைச் செய்துபார்த்த அநுபவங்கள், அதில் மேற்கொண்டு செய்துபார்த்த, செய்யவேண்டிய மாறுதல்கள் என்று அந்தக் குறிப்பிட்ட ஐடம் (ஐடம், ரெசிபி இதற்கெல்லாம் சட்டென்று தமிழ் வார்த்தைகள் வரமாட்டேங்கறது) பற்றிய செய்திகளாகவே தொடர்ந்து பார்க்கலாம்.
                          மேலும், இந்த திரி ஐந்து பக்கங்களுக்கு நீண்டுள்ளது, பெரும்பாலான உறுப்பினர்களுக்கு இரண்டாம் பக்கத்திற்குச் செல்லத் தெரியாது (அவர்கள் தெரிந்து கொள்ள முயற்சிப்பதைவிட வேறு எதையாவது பார்க்கலாம் என்று மனதை மாற்றிக்கொண்டு சென்றுவிடுவார்கள். உண்மையில் மனதை அவர்கள் மாற்றவில்லை, மனம் அலைந்துகொண்டே இருப்பதால் மனம் அவர்களை வேறு இடத்திற்கு மாற்றி அனுப்பிவிடும்).
                          மற்றும், ஒரு குறிப்பிட்ட சமையல் வகையை (ஐடத்திற்கு தமிழ் வார்த்தை) குறிப்பெடுத்துக்கொள்ளவோ, பி.டி.எப் ஆகா பிரிண்ட் (அச்சு) எடுத்துக்கொள்ளவோ விரும்புகிறவர்களுக்கு இத்தனை வகைகளும் (ஐடங்களும்) சேர்ந்து வந்து தொல்லை கொடுக்கும்.
                          இன்னும், இணைய தளங்களின் தகவல்களுக்கு உறுப்பினர்கள் உட்பட யாரும் நிரந்தர வாசகர்கள் அல்ல, இது நாம் உறுப்பினர்களாக உள்ள இந்த இணைய தளத்தில் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் வருபவர்களின் சதவீதம் மிக மிகக் குறைவு. எது வேண்டுமானாலும் கூகுள் போன்ற தேடி யந்திரத்தின் (சர்ச் என்ஜின்) உதவியை நாடுவார்கள், அப்போது பல இணைய தளங்களுடன் நம் இணைய தளமும் பட்டியலிடப்படுமானால் அப்போது அவர்களுக்கு ஞாபகம் வரும், ஆஹா நாம் இங்கு உறுப்பினரல்லவா என்று, உடனே மற்ற இணையதளங்களைக் காட்டிலும், நம் இணைய தளத்திற்கு முன்னுரிமை கொடுத்து இங்கு வருவார்கள்.
                          அப்படி அவர்களை வரவழைக்கவேண்டுமானால், நம் தளத் தகவல்கள் தேடுபொறி (சர்ச் என்ஜின்)யில் முதல் பக்கத்தில் பட்டியலாகவேண்டும். அதற்கு தனித் தனி திரிகளில் தகவல் இட்டு, தேடுபவர்களின் மனநிலையில் இருந்து என்னென்ன வார்த்தைகளைக் கொண்டு தேடுவார்கள் என்று யோசித்து, அந்த வார்த்தைகள் அல்லது சொற்றொடர்களை (சர்ச் ப்ரேஸ்) அந்தந்த திரியின் இறுதியில் உள்ள "டேக்" என்ற கட்டத்தில் ஒவ்வொரு ப்ரேசுக்கும் ஒரு காற்புள்ளியிட்டு நிரப்பவேண்டும். இவற்றைத்தான் தேடுபொறிகள் தங்கள் தகவல் களஞ்சியத்தில் சேமித்து வைத்துக்கொள்ளும் அதாவது தேடப்படும் தகவல் ஒருபுறம் அவற்றுக்கு இணைப்புக்கொடுக்கவேண்டிய பக்கத்தின் முகவரி ஒரு புறம் என தேடுபொறிகள் பதிந்து வைத்துக்கொள்ளும். மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியான தேடப்படும் தகவல்கள் அதிகம் இடம்பெறும் இணைய தளங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து முதற்பக்கத்தில் பட்டியிலிடப்படும்.
                          எனவே நாம் இவற்றுக்குத் தகுந்தாற்போல் தகவல்களை நம் இணைய தளத்தில் பதிந்தால் அதிகப்படியான பார்வையாளர்களை கவர இயலும்.

                          ஆகையால் தாங்கள் மஹாளயபக்ஷ பலஹாரம் வரிசைியில் போடுவதாக இருந்தாலும்
                          டைடிலில் பலஹாரத்தின் பெயரை மட்டும் குறிப்பிட்டுவிட்டு
                          உள்ளே செய்முறை எழுதும்போது மீண்டும் தலைப்பை எழுதுவீர்கள் அல்லவா
                          அப்போது "மஹாளயபக்ஷ பலகார வரிசையில் - உளுத்தங்கஞ்சி" என்று உள் தலைப்பை அமைத்தால்
                          மிகவும் நன்றாக அமையும்.
                          மறக்காமல் எடிட்டருக்கு கீழே உள்ள "டேக்கில்" அந்த பலகாரத்தின் பலவிதமான பெயர்களை கமாவுடன் ஆங்கிலத்தில் சேர்க்கவும்.
                          மிகவும் அலுப்பை ஏற்படுத்தியதற்கு (போரடிப்பதற்கு தமிழ்?!) மன்னிக்கவும்.
                          நன்றி,
                          என்.வி.எஸ்

                          Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
                          please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
                          Encourage your friends to become member of this forum.
                          Best Wishes and Best Regards,
                          Dr.NVS

                          Comment

                          • #43
                            Re: மஹாளபக்ஷம் - பலகாரம்

                            Not at all Mama, I will do this immediately Thanks for your advice !
                            என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                            http://eegarai.org/apps/Kitchen4All.apk

                            http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                            Dont work hard, work smart

                            Comment

                            • #44
                              புளிப் பொங்கல் / புளி உப்புமா

                              புளிப் பொங்கல் / புளி உப்புமா

                              இதற்கும் அரிசியில் இருக்கும் நொய் என்னும் சின்னக் குருணை அரிசியே பொருத்தமாய் இருக்கும். இல்லை என்றால் அரிசியைக் களைந்து ஊற வைத்துக்கொண்டு மெஷினிலோ அல்லது மிக்ஸியிலோ உடைத்துக்கொள்ளவும்.

                              தேவையானவை :

                              உடைத்த அரிசி அல்லது குருணை - 2 cup
                              நல்லெண்ணெய் எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
                              வற்றல் மிளகாய் 4 -5
                              உப்பு தேவைக்கேற்ப
                              கறிவேப்பிலை - கொஞ்சம்
                              தாளிக்கக் கடுகு, உ.பருப்பு, க.பருப்பு எல்லாம் 1 ஸ்பூன் அளவில் எடுத்துக்கோங்கோ + ஒரு கைப்பிடி அளவு பச்சை வேர்கடலை
                              பெருங்காயம் - அரை டீஸ்பூன்
                              புளி ஜலம் - 3 கப் அல்லது புளி பேஸ்ட் 2 டீ ஸ்பூன்

                              செய்முறை:

                              ஒரு நான்ஸ்டிக் அல்லது இலுப்பச்சட்டில் எண்ணெய் விட்டு கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை , பெருங்காயம் வேர்கடலை எல்லாம் தாளிக்கவும்.
                              ஒரு கப்க்கு 2 முதல் 2 1/2 கப் தண்ணீர் என்று அளந்து கொண்டு, புளி ஜலம் + தண்ணீர் வாணலி இல் விடவும்.
                              உப்பு போடவும்.
                              அது நன்கு கொதிக்கும் போது அடுப்பை சின்னதாக்கிவிட்டு, உடைத்து வைத்துள்ள குருணையை அதில் போடவும்.
                              நன்கு கிளறவும்.
                              மேலே ஒரு தட்டு போட்டு மூடி வைக்கவும்.
                              அப்பப்போது ஒருமுறை கிளறி விடவும்.
                              தண்ணீர் தேவையானால் விடவும்.
                              ஆறினதும் ரொம்ப நல்லா இருக்கும்.
                              வெறும் தயிர அல்லது ஒன்றுமே கூட வேண்டாம் இதற்கு , அப்படியே ரொம்ப நல்லா இருக்கும்
                              என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                              http://eegarai.org/apps/Kitchen4All.apk

                              http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                              Dont work hard, work smart

                              Comment

                              • #45
                                Re: மஹாளபக்ஷம் - பலகாரம்

                                'ரவா கிச்சடி'

                                தேவையானவை:

                                வறுத்த ரவை 2 கப்
                                தக்காளி 1 (தேவையானால் )
                                இஞ்சி 1 சின்ன துண்டு
                                பச்சை மிளகாய் 6 -8
                                புளி பேஸ்ட் 3 - 4 ஸ்பூன்ஸ்
                                கேரட், உருளை, பீன்ஸ், பச்சை பட்டாணி, கத்தரி என நறுக்கிய காய்கள் மொத்தம் 1 - 1 1/2 கப்.

                                தாளிக்க:
                                கடுகு 1 ஸ்பூன்
                                உளுந்து 1 ஸ்பூன்
                                கடலை பருப்பு 1 ஸ்பூன்
                                மஞ்சள் பொடி 1/2 ஸ்பூன்
                                கறிவேப்பிலை 1 கைப்பிடி
                                எண்ணை 3 - 4 ஸ்பூன்
                                நெய் 2 -3 ஸ்பூன்

                                செய்முறை:

                                ஒரு ஆழமான வாணலி இல் எண்ணை மற்றும் நெய் விடவும்.
                                தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளிக்கவும்.
                                பச்சைமிளகாய், இஞ்சி போடவும்.
                                நன்கு வதக்கவும், இப்ப எல்லா காய்கறிகளையும் போடவும்.
                                நன்கு கிளறவும், உப்பு போட்டு ஒரு 2 நிமிடம் மூடி வைக்கவும்.
                                கொஞ்சம் வெந்து இருக்கும்.
                                இப்ப புளி பேஸ்ட் போட்டு நன்கு கிளறவும்.
                                மீண்டும் 2 நிமிடம் மூடி வைக்கவும்.
                                திறந்து, 2 டம்பளர் தண்ணீர் விடவும், தண்ணீர் நன்கு கொதிக்கும் வரை காத்திருக்கவும்.
                                நன்கு கொதித்ததும், அடுப்பை சின்ன தாக்கி விட்டு, ரவையை கொட்டி கிளறவும்.
                                நன்கு வெந்ததும் இறக்கவும்.
                                நல்ல சுவையான 'ரவா கிச்சடி' தயார்.
                                தொட்டுக்கொள்ள ஒன்றுமே வேண்டாம், தயிர் போறும்
                                Last edited by krishnaamma; 25-06-15, 11:10.
                                என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

                                http://eegarai.org/apps/Kitchen4All.apk

                                http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

                                Dont work hard, work smart

                                Comment

                                Working...
                                X